முகமட் சாயிட் கெருவாக்
துன் முகமட் சாயிட் கெருவாக் (ஆங்கிலம்; Tun Mohammad Said Keruak அல்லது Tun Said Keruak; மலாய்: Tun Haji Mohamed Said bin Keruak) (பிறப்பு: 15 நவம்பர் 1925; – இறப்பு: 17 நவம்பர் 1995) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி; 1 நவம்பர் 1975 முதல் 18 ஏப்ரல் 1976 வரை, மலேசியா, சபா மாநிலத்தின் 4-ஆவது முதலமைச்சராகவும்; 1 சனவரி 1987 முதல் 31 திசம்பர் 1994 வரை சபாவின் 7-ஆவது ஆளுநராகவும் பணியாற்றியவர் ஆவார்.
முகமட் சாயிட் கெருவாக் Mohammad Said Keruak محمد سعيد کرواق | |
---|---|
7-ஆவது சபா ஆளுநர் | |
பதவியில் 1 சனவரி 1987 – 31 திசம்பர் 1994 | |
முன்னையவர் | முகமட் அட்னான் ரோபர்ட் |
பின்னவர் | சக்காரான் டன்டாய் |
4-ஆவது சபா முதலமைச்சர் | |
பதவியில் 1 நவம்பர் 1975 – 18 ஏப்ரல் 1976 | |
முன்னையவர் | டத்து முசுதபா டத்து அருன் |
பின்னவர் | புவாட் இசுடீபன்ஸ் |
கோத்தா பெலுட் மக்களவைத் தொகுதி | |
பதவியில் 1971–1982 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | Mohammad Said bin Keruak 15 நவம்பர் 1925 கோத்தா பெலுட், பிரித்தானிய வடக்கு போர்னியோ |
இறப்பு | 17 நவம்பர் 1995 கோத்தா கினபாலு, சபா, மலேசியா | (அகவை 70)
அரசியல் கட்சி | அசுனோ (1961–1989) பாரிசான் நேசனல் |
துணைவர் | பன்டோங் அசுபுல்லா |
பிள்ளைகள் | 5; சாலே சாயிட் கெருவாக் |
பெற்றோர் | கெருவாக் பெருக் தம்போக் அன்டார்சி |
இவர் ஐக்கிய சபா தேசிய அமைப்பின் (United Sabah National Organisation) (USNO) மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் ஆவார்.[1] மேலும், மற்றொரு மலேசிய அரசியல்வாதியான சாலே சாயிட் கெருவாக்கின் தந்தையும் ஆவார்.
பொது
தொகுமுகமட் சாயிட் கெருவாக் 1966 செப்டம்பர் மாதம், சபாவின் விவசாயம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக இருந்தார்.[2] பிப்ரவரி 2, 1965-இல், கோத்தா பெலுட், கூடாட், ரானாவ், கெனிங்காவ், பண்டாவ் மற்றும் லபுவான் ஆகிய இடங்களில் நீர்ப்பாசனத் திட்டத்தையும் மற்றும் 1100 ஏக்கர் நெல் வயல்கள் திட்டத்தையும் அறிவித்தார்.[3]
சபா ஆளுநர் பதவியை வகித்த போது, ஐக்கிய சபா கட்சியில் (Parti Bersatu Sabah - PBS) நெருக்கடி ஏற்பட்டது. மற்றும் தீபகற்ப மலேசியாவில் இருந்து அம்னோ கொண்டுவரப்பட்டது. பல ஐக்கிய சபா தேசிய அமைப்பு (USNO) தலைவர்கள் சபாவில் சக்காரான் டன்டாய் தலைமையில் அம்னோ கட்சியை நிறுவினர். இதன் விளைவாக சபாவில் புதிய அரசாங்கம் அமைக்கப்படுவதற்கு முகமட் சாயிட் கெருவாக் பெரும் முயற்சிகளை மேற்கொண்டார்.
ஜோசப் பைரின் கித்திங்கானுக்குப் பதிலாக சபாவின் முதலமைச்சராக சக்காரான் டன்டாய் நியமிக்கப்பட்டார். பின்னர் அவரின் மகன் சாலே சாயிட் கெருவாக் சபாவின் முதலமைச்சரானார்.
விருதுகள்
தொகுமலேசிய விருதுகள்
தொகு- மலேசியா :
- - Order of the Defender of the Realm (PMN) – Tan Sri (1971)[4]
- - Order of the Defender of the Realm (SMN) – Tun (1989)[5]