சாலே சாயிட் கெருவாக்

மலேசிய அரசியல்வாதி

சாலே சாயிட் கெருவாக் (ஆங்கிலம்; Salleh Said Keruak; மலாய்: Datuk Seri Panglima Dr Mohamed Salleh bin Tun Haji Mohamed Said) (பிறப்பு: 10 சூலை 1958) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி; 28 டிசம்பர் 1994 முதல் 26 மே 1996 வரை, மலேசியா, சபா மாநிலத்தின் 9-ஆவது முதலமைச்சராகவும்; 29 சூலை 2015 முதல் 10 மே 2018 வரை மலேசிய தகவல் தொடர்புதுறை அமைச்சராகவும்; 31 டிசம்பர் 2010 முதல் 28 ஜூலை 2015 வரை மலேசியா, சபா மாநில சட்டமன்றத் தலைவராகவும்; 19 பிப்ரவரி 1994 முதல் சபா, உசுக்கான் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் சேவை செய்தவர் ஆவார்.

சாலே சாயிட் கெருவாக்
Salleh Said Keruak
صالح سعيد کرواق
Salleh Said Keruak at the ITU Telecom World 2016
மலேசிய தகவல் தொடர்புதுறை அமைச்சர்
பதவியில்
29 சூலை 2015 – 10 மே 2018
பிரதமர்நஜீப் ரசாக்
முன்னையவர்இசுமாயில் சப்ரி யாகோப்
9-ஆவது சபா முதலமைச்சர்
பதவியில்
28 திசம்பர் 1994 – 26 மே 1996
ஆளுநர்முகமட் சாயிட் கெருவாக்
Deputyயோங் தெக் லீ
முன்னையவர்சக்காரான் டன்டாய்
தலைவர்
சபா மாநில சட்டமன்றம்
பதவியில்
31 திசம்பர் 2010 – 28 சூலை 2015
செனட்டர்
பதவியில்
29 சூலை 2015 – 28 சூலை 2018
கோத்தா பெலுட் மக்களவைத் தொகுதி
பதவியில்
25 ஏப்ரல் 1995 – 8 மார்ச் 2008
பெரும்பான்மை7,131 (1995)
9,216 (1999)
10,421 (2004)
உசுக்கான் சட்டமன்றத் தொகுதி
பதவியில் உள்ளார்
பதவியில்
26 செப்டம்பர் 2020
பெரும்பான்மை4,298 (2020)
பதவியில்
5 மே 2013 – 9 மே 2018
பெரும்பான்மை6,812 (2013)
பதவியில்
19 பிப்ரவரி 1994 – 21 மார்ச் 2004
பெரும்பான்மை2,683 (1994)
3,624 (1999)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
Mohd Salleh bin Mohd Said Keruak

10 சூலை 1958 (1958-07-10) (அகவை 66)
கோத்தா பெலுட்
பிரித்தானிய வடக்கு போர்னியோ
குடியுரிமைமலேசியர்
அரசியல் கட்சிஐக்கிய சபா கட்சி (PBS)
(–1991)
சபா அம்னோ (Sabah UMNO)
(–2018, since 2020)
சுயேச்சை
(2018 - 2020)
பிற அரசியல்
தொடர்புகள்
பாரிசான் நேசனல் (BN)
(2018 - 2020)
துணைவர்(கள்)ராயா இரோம்
(பி. 21 ஏப்ரல் 1963)
(தி. 1984)
பிள்ளைகள்4
பெற்றோர்முகமட் சாயிட் கெருவாக்
பன்டுங் அசுபுல்லா
வாழிடம்(s)லிக்காஸ், கோத்தா கினபாலு, சபா, மலேசியா
முன்னாள் கல்லூரிசைமன் பிரேசர் பல்கலைக்கழகம்
மலேசிய புத்ரா பல்கலைக்கழகம்

மேலும் இவர் சபா மாநிலத்தின் 4-ஆவது முதலமைச்சராகவும்; சபா மாநிலத்தின் 7-ஆவது ஆளுநராகவும் பணியாற்றிய முகமட் சாயிட் கெருவாக் அவர்களின் மகனும் ஆவார்.[1]

பொது

தொகு

இவர் கனடா, வான்கூவர், சைமன் பிரேசர் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டதாரி; மேலும் மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆவார்.

பட்டப் படிப்பை முடித்த பிறகு, 1984-இல் கோத்தா பெலுட் மாவட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 1986 முதல் 1994 வரை ஜோசப் பைரின் கித்திங்கான்; மற்றும் சக்காரான் டன்டாய் ஆகிய சபா முதல்வர்களின் அரசியல் செயலாளராகப் பணியாற்றினார்.

அத்துடன், அவர் சபாவின் அமைச்சரவையில் சில பதவிகளையும் வகித்தார். பல ஆண்டுகளாக, அவர் சபா மாநிலத்தின் நிதி அமைச்சராகவும், உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், வீட்டுவசதி மற்றும் துணை முதல்வராகவும் பணியாற்றினார்.

அரசியல் வாழ்க்கை

தொகு

28 டிசம்பர் 1994 அன்று, பிரதமர் மகாதீர் முகமது அவரை சபா மாநிலத்தின் முதலமைச்சராக நியமித்தார். சபா மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த அவரின் பதவிக்காலம் 26 மே 1996-இல் முடிவடைந்தது. இவருக்குப் பின்னர் சபா முற்போக்கு கட்சியின் (SAPP) தலைவரான யோங் தெக் லீ சபா மாநிலத்தின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.

4 சனவரி 2010 அன்று, அப்போதைய சபா முதலமைச்சர் மூசா அமான், அவரை தன் அரசாங்கத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக நியமித்தார். அதே ஆண்டு திசம்பர் 31 அன்று, அவர் சபா மாநில சட்டமன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[2][3]

6 அக்டோபர் 2019 அன்று, மக்கள் நீதிக் கட்சியில் (பிகேஆர்) சேர்வதற்கு உறுப்பினர் விண்ணப்பத்தை சமர்ப்பித்ததாக ஒப்புக் கொண்டார். இருப்பினும் 30 சூன் 2020 அன்று, 2020 அரசியல் நெருக்கடிக்குப் பிறகு மக்கள் நீதிக் கட்சியில் சேருவதற்கான விண்ணப்பத்தை அவர் மீட்டுக் கொண்டார்.[4] 9 செப்டம்பர் 2020 அன்று, மீண்டும் அம்னோவில் இணைந்தார்.[5]

விருதுகள்

தொகு

மலேசிய விருதுகள்

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Abdul Rahman challenged by four in Kota Belud". The Borneo Post. 21 April 2013. பார்க்கப்பட்ட நாள் 28 May 2018.
  2. "Salleh Said Keruak dilantik Speaker baru DUN Sabah". Berita Harian. 12 January 2011. http://www.bharian.com.my/articles/SallehSaidKeruakdilantikSpeakerbaruDUNSabah/Article/. 
  3. Abdul Rahman, Rafiuddin (12 January 2011). "Datuk Seri Panglima Haji Salleh Tun Hj. Mohd. Said Keruak dilantik Pengerusi FINAS". http://finas.gov.my/index.php?mod=news&id=258. 
  4. "Salleh batalkan permohonan sertai PKR". Sinar Harian. https://www.sinarharian.com.my/article/90089/BERITA/Politik/Salleh-batalkan-permohonan-sertai-PKR. 
  5. "PRN Sabah: Salleh Said Keruak buat kemunculan semula". 10 September 2020.
  6. "Ketua Hakim Negara Dahului Senarai 983 Penerima Darjah Kebesaran Sabah". www.mstar.com.my. 2 October 2015.

வெளி இணைப்புகள்

தொகு
முன்னர் சபா முதலமைச்சர்
1994–1996
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலே_சாயிட்_கெருவாக்&oldid=4064344" இலிருந்து மீள்விக்கப்பட்டது