புவாட் இசுடீபன்ஸ்

மலேசிய அரசியல்வாதி

புவாட் இசுடீபன்ஸ் (ஆங்கிலம்; Donald Aloysius Marmaduke Stephens; மலாய்: Muhammad Fuad Stephens) (பிறப்பு: 11 ஏப்ரல் 1930; – இறப்பு: 6 சூன் 1976) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி; செப்டம்பர் 1963 முதல் டிசம்பர் 1964 வரை, மலேசியா, சபா மாநிலத்தின் 1-ஆவது மற்றும் 5-ஆவது முதலமைச்சராகவும் (Chief Minister of Sabah); மீண்டும் ஏப்ரல் 1976 முதல், சூன் 1976-இல் அவர் இறக்கும் வரையில் சபா முதலமைச்சராகவும்; செப்டம்பர் 1973 முதல் சூலை 1975 வரை சபாவின் 3-ஆவது ஆளுநராகவும் (Governor of Sabah); 1968 முதல் 1973 வரை ஆஸ்திரேலியாவிற்கான மலேசியாவின் 6-ஆவது உயர் ஆணையராகவும் (High Commissioner of Malaysia to Australia); பணியாற்றியவர் ஆவார்.[5]

மாண்புமிகு துவான்
துன்; டத்தோ பாங்லிமா
புவாட் இசுடீபன்ஸ்
Muhammad Fuad Stephens
محمد فؤاد ستيفنس
1-ஆவது & 5-ஆவது சபா முதலமைச்சர்
ஆளுநர்முகமட் அம்டான் அப்துல்லா
Deputyஅரிஸ் சாலே
பதவியில்
16 செப்டம்பர் 1963 – 31 திசம்பர் 1964
ஆளுநர்முசுதபா அருன்
3-ஆவது சபா ஆளுநர்
பதவியில்
16 செப்டம்பர் 1973 – 28 சூலை 1975
சபா முதலமைச்சர்
பதவியில்
18 ஏப்ரல் 1976 – 6 சூன் 1976
6-ஆவது ஆஸ்திரேலியாவுக்கான மலேசிய உயர் ஆணையர்
பதவியில்
1968–1973
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
Donald Aloysius Marmaduke Stephens

(1920-09-14)14 செப்டம்பர் 1920
கூடாட்
பிரித்தானிய வடக்கு போர்னியோ
(தற்போது சபா, மலேசியா)
இறப்பு6 சூன் 1976(1976-06-06) (அகவை 55)
கோத்தா கினபாலு, சபா, மலேசியா
இளைப்பாறுமிடம்சபா மாநில கல்லறை, கோத்தா கினபாலு
அரசியல் கட்சிஐக்கிய பாசோக்மோமோகான் கடாசான் மூருட் அமைப்பு (UNKO)
ஐக்கிய பாசோக்மோமோகான் கடாசான் மூருட் அமைப்பு (UPKO)
சபா மக்கள் ஐக்கிய முன்னணி (BERJAYA)
துணைவர்(கள்)இடா (1950–1957)[1]
ரகிமா இசுடீபன்ஸ் (சிசிலியா ஜூன் லுத்தர்)[2]
பிள்ளைகள்சொகாரி (1952–1976)[3]
அபான்டி (1958–2009)
அசுகாரி (1960)
பரிடா (1962)
பவுசியா (1958)[4]
பெற்றோர்
  • சூல்ஸ் பவிட் இசுடீபன்ஸ் (1896–1944) (தந்தை)
  • எடித் மார்கரட் லவுரா மேரிகோப் (1898–1976) (தாய்)

1963-இல் சபாவை மலேசியக் கூட்டமைப்பிற்குள் கொண்டு வருவதில் இவர் முக்கியப் பங்கு வகித்தார். அவர் தொடக்கத்தில் மலேசியக் கூட்டமைப்பிற்குள் சேரும் நோக்கத்திற்கு எதிராக இருந்தபோதும், பின்னர் தன் கொள்கையை மாற்றிக் கொண்டார்.

அவர் இரண்டாவது முறையாக முதலமைச்சரான 44 நாட்களுக்குப் பிறகு, 6 சூன் 1976 அன்று கோத்தா கினபாலுவில் நடந்த ஒரு வானூர்தி விபத்தில் அகால மரணம் அடைந்தார். இந்த விபத்து இரட்டை ஆறு சோகம் (Double Six Tragedy) என்று அழைக்கப்படுகிறது. அந்த விபத்தில் அவரின் மகன் சொகாரி (வயது 24) உட்பட 11 பேர் உயிரிழந்தனர். புவாட் இசுடீபன்சின் உடல் கோத்தா கினபாலு, சபா மாநில பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள அரசு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

பொது

தொகு

டொனால்ட் புவாட் இசுடீபன்ஸ் 1920 செப்டம்பர் 14 அன்று பிரித்தானிய வடக்கு போர்னியோ (தற்போது சபா) கூடாட் நகரில் பிறந்தார். அவரின் தந்தை, ஜூல்ஸ் இசுடீபன் பாவிட் என்பவர், பாதி கடசான் மற்றும் பாதி பிரித்தானிய கலப்பு இனத்தவர் ஆகும்.

புவாட் இசுடீபன்ஸின் தாயார், எடித் மார்கரட் லவுரா மேரிகோப் என்பவர் சப்பானிய, பிரித்தானிய மற்றும் டூசுன் வம்சாவளியைச் சேர்ந்தவர். அவர் சபா, சண்டக்கான் மாவட்டம் கினபாத்தாங்கான் பகுதியைச் சேர்ந்தவர்.[6]

மலேசியா உருவாக்கம்

தொகு

டொனால்ட் இசுடீபன்ஸ் ஆகஸ்ட் 1961-இல் ஐக்கிய பாசோக்மோமோகான் கடாசான் மூருட் அமைப்பு (UNKO) என்ற அரசியல் கட்சியை நிறுவினார். சபாவின் சுதந்திரம் மற்றும் மலேசியாவின் உருவாக்கம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதில் முக்கிய பங்கு வகித்தார்.

ஐக்கிய சபா தேசிய அமைப்பின் (USNO) தலைவர் துன் முசுதபா, சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ, மலாயாவின் அப்போதைய பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் ஆகியோருடன் இணைந்து மலேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதில் பெரும் பங்கு ஆற்றி உள்ளார்.[7][8]

சபாவின் புதிய அரசாங்கம்

தொகு

மலேசியக் கூட்டமைப்பு இறுதியாக 16 செப்டம்பர் 1963 அன்று உருவாக்கம் கண்டது. அந்த நாள் இன்று மலேசியா தினம் என்று அழைக்கப்படுகிறது. மலேசியா உருவான பிறகு, இவர் சபாவின் முதல் முதலமைச்சராக பொறுப்பு ஏற்றவர் ஆகும்.[9][10]

1963-ஆம் ஆண்டில், ஐக்கிய சபா தேசிய அமைப்பு (USNO); ஐக்கிய பாசோக்மோமோகான் கடாசான் மூருட் அமைப்பு (UNKO); சபா சீனர் சங்கம் (SCA) ஆகிய அமைப்புகளுடன் இணைந்து சபாவின் புதிய அரசாங்கத்தை ஆட்சி செய்ய சபா கூட்டணியை (Sabah Alliance) உருவாக்கிய பெருமை இவரையே சாரும்.

விருதுகள்

தொகு

மலேசிய விருதுகள்

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. P. J. (1999), p. 70, 77
  2. P. J. (1999), p. 95
  3. P. J. (1999), p. 78
  4. P. J. (1999), p. 218
  5. Biodata Tun Haji Mohd. Fuad Stephens
  6. "New Zealand Pavitt Photographs".
  7. malaysiana1: What's In A Name?
  8. Sabah 25 years later, 1963-1988, Institute for Development Studies (Sabah), 1989, page 56
  9. ASEAN Forecast, Volumes 5-7, Executive Publication Pte, 1985, page 12
  10. Malaysia, 1965, page 24
  11. "Semakan Penerima Darjah Kebesaran, Bintang dan Pingat". Archived from the original on 19 July 2019. பார்க்கப்பட்ட நாள் 26 August 2018.
  12. "Senarai Penuh Penerima Darjah Kebesaran, Bintang dan Pingat Persekutuan Tahun 1975" (PDF).
  13. "Sabah's first honours". The Straits Times: p. 20. 14 November 1963. https://eresources.nlb.gov.sg/newspapers/Digitised/Article/straitstimes19631114-1.2.140. 
  14. "STATE'S HIGHEST HONOUR FOR 16". The Straits Times: p. 7. 5 October 1964. https://eresources.nlb.gov.sg/newspapers/Digitised/Article/straitstimes19641005-1.2.47. 

நூல்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புவாட்_இசுடீபன்ஸ்&oldid=4064105" இலிருந்து மீள்விக்கப்பட்டது