முகமது இப்ராகிம் சாக்

உருதுக் கவிஞர்

சேக் முகம்மது இப்ராகிம் சாக் (Mohammad Ibrahim Zauq) (1790-1854) ஓர் உருதுக் கவிஞரும் மற்ருமாவார். இவர் " சாக் " என்ற புனைப்பெயரில் கவிதைகளை எழுதினார். மேலும் 19 வயதில் தில்லியில் உள்ள முகலாய அரசவைகளில் நீதிமன்றத்தின் கவிஞர் பரிசு பெற்றவராக நியமிக்கப்பட்டார். பின்னர் இவருக்கு கடைசி முகலாய பேரரசரும் இவரது சீடருமான பகதூர் சா சஃபார் மூலம் கக்கானி-இ-இந்த் (இந்தியாவின் கக்கானி ) என்ற பட்டம் வழங்கப்பட்டது.[2]

முகமது இப்ராகிம் சாக்
பிறப்பு1790 (1790)
தில்லி
இறப்புநவம்பர் 1854 [1]
தில்லி, முகலாயப் பேரரசு
புனைபெயர்சாக்
தொழில்கவிஞர்
தேசியம்இந்திய முஸ்லிம்
காலம்1837-1857
வகைகசல், காசிதா, முகாமாசு
கருப்பொருள்காதல்

குடும்பம் வறிய நிலையில் இருந்ததால் சாதாரண கல்வியை மட்டுமே பெற்றிருந்தார். ஆனால் பிற்காலத்தில் வரலாறு, இறையியல் மற்றும் கவிதைகளில் நன்கு புலமைப் பெற்றார். இவர் கலிபின் சமகாலத்தவராகக் கருதப்படுகிறார். மேலும், உருது கவிதை வரலாற்றில் இரு கவிஞர்களின் போட்டி நன்கு அறியப்பட்டதாகும். தனது வாழ்நாளில், சாக் கலிப்பை விட மிகவும் பிரபலமாக இருந்தார். ஏனெனில் அந்த நாட்களில் விமர்சன மதிப்புகள் முக்கியமாக வார்த்தைகள், சொற்றொடர்கள் மற்றும் மொழிகளின் பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு கவிதையின் ஒரு பகுதியை மதிப்பிடுவதில் மட்டுமே இருந்தன. கவிதையைப் பாராட்டும்போது உள்ளடக்கமும் நடையும் அதிகம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

சாக் 1854 இல் இறந்தார். இன்று இவரது கல்லறை மத்திய தில்லியின் பகாட் கஞ்சு பகுதியில் உள்ளது. 2000 களின் முற்பகுதியில் உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு இவரது கல்லறை மீட்டெடுக்கப்பட்டது. ஆனால் அருகிலுள்ள 'நபி கரீம்' பகுதியில் உள்ள இவரது வீடு ஒருபோதும் அடையாளம் காணப்படவில்லை.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Encyclopedia of Islam, Vol I, Printed Lahore 1964
  2. 2.0 2.1 "In the lanes of Zauq and Ghalib". Indian Express. 15 March 2009 இம் மூலத்தில் இருந்து 21 January 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120121091428/http://www.expressindia.com/latest-news/in-the-lanes-of-zauq-and-ghalib/434583/. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_இப்ராகிம்_சாக்&oldid=4108653" இலிருந்து மீள்விக்கப்பட்டது