பகாட் கஞ்சு
பகாட்கஞ்சு (பகார்கஞ்ச், இந்தி: पहाड़गंज, உருது: پہاڑ گنج, பஞ்சாபி மொழி: ਪਹਾੜਗਂਜ, பொருள்: மலைப் பகுதி) என்னும் பகுதி, மத்திய தில்லியில் உள்ளது. இந்த பகுதியின் கிழக்கில் புது தில்லி தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. முகலாயப் பேரரசின் காலத்தில் இந்தப் பகுதி ஷாகஞ்சு என்று அழைக்கப்பட்டது.[1] இதுவும் கரோல் பாகும், தர்யா கஞ்சும் மத்திய தில்லியின் மூன்று ஆட்சிப் பிரிவுகள்.
பகாட்கஞ்ச்
Paharganj | |
---|---|
புறநகர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தில்லி |
அரசு | |
• நிர்வாகம் | தில்லி மாநகராட்சி |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
மக்களவைத் தொகுதி | புது தில்லி மக்களவைத் தொகுதி |
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதி | பகாட்கஞ்சு |
இங்கு உணவகங்களும், விடுதிகளும் அதிகமுள்ள காரணத்தினால் சுற்றுலாப் பயணிகள் விரும்புமிடமாக உள்ளது. பல்வேறு நாட்டு உணவுமுறைகளில் சமைக்கப்படும் உணவுகளும் இங்கு விற்கப்படுகின்றன.[2][3]
ஆட்சியும் அரசும்
தொகுஇந்த பகுதி சதர் பசார் - பகாட்கஞ்ச் என்ற பெயரில், தில்லி மாநகராட்சியின் 12 ஆட்சிப் பிரிவுகளில் ஒன்றாக அறியப்படுகிறது.[4]
2008ஆம் ஆண்டு முதல் இந்த பகுதி புது தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.[5]
சான்றுகள்
தொகு- ↑ Great Britain, Parliament. House of Commons (1859). House of Commons papers, Volume 18. HMSO. p. 8.
- ↑ Manali in Paharganj! பரணிடப்பட்டது 2008-02-25 at the வந்தவழி இயந்திரம் தி இந்து, 26 June 2006.
- ↑ Paharganj: A Traveler’s Delight www.delhilive.com, 11 January 2008.
- ↑ Zones பரணிடப்பட்டது 2009-01-09 at the வந்தவழி இயந்திரம் தில்லி மாநகராட்சி.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. p. 556. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-09-14.
இணைப்புகள்
தொகு