முக்கமாலா கிருஷ்ணமூர்த்தி

முக்கமாலா (Mukkamala)என்று பிரபலமாக அழைக்கப்படும் நாதபிரம்ம முக்கமாலா கிருஷ்ணமூர்த்தி (பிப்ரவரி 28, 1920 - சனவரி 10, 1987) ஒரு வழக்கறிஞரும், நடிகரும் ஆவார். இவர் 1950கள் மற்றும் 1960களில் தெலுங்குத் திரைப்படத்துறையுலகில் தீவிரமாக இருந்தார். இவர் தனது மாணவ நாட்களில் மேடை நடிகராக இருந்தார். மேலும் வரலாற்று பொப்பிலிப் போரை அடிப்படையாகக் கொண்ட பொப்பிலி யுத்தம் என்ற மேடை நாடகத்தில் பிரெஞ்சுத் தளபதி மார்க்விஸ் டி புஸ்ஸி என்ற பாத்திரத்தில் பிரபலமாக இருந்தார். 1940களின் பிற்பகுதியில் சென்னையில் தயாரிக்கப்பட்டு வந்த தெலுங்கு மொழிப் படங்களில் பணியாற்றி வந்த இவர் சுமார் 35 ஆண்டுகள் நீடித்த வாழ்க்கையில் பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்தார். இவர் 1987 இல் இறந்தார்.

முக்கமாலா கிருஷ்ணமூர்த்தி
பிறப்பு1920
குண்டூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்பு1987
பணிநடிகர், இயக்குநர்

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

குண்டூர் மாவட்டத்தின் குர்ஜாலாவில் டாக்டர் சுப்பராவ் மற்றும் சீதாம்மா ஆகியோருக்கு பிறந்தார். மனைவி பாரதி. இவருக்கு, ஒரு மகன் மற்றும் மூன்று மகள்கள் என நான்கு குழந்தைகள் இருந்தனர். இவரது மூத்த மகன் சுப்பா ராவ், மூத்த மகள் சீதா ராஜ்யலட்சுமி (நெல்லூரில் கூடுதல் மாவட்ட நீதிபதி), இரண்டாவது மகள் பத்மாவதி ( குண்டூரில்வசிக்கிறார்). இளைய மகள் சேஷம்மா ( சென்னையில் உயர் நீதிமன்ற வழக்கறிஞராகப் பயிற்சி செய்கிறார்).[1]

விருதுகள் தொகு

ஐதராபாத்து நகரின் "கலாராஜ்ஜியம்" என்ற அமைப்பு [2] இவருக்கு "நாதபிரம்மா" என்றப் பட்டத்தை வழங்கியது.

மேற்கோள்கள் தொகு

  1. As per ஆந்திர ஜோதி magazine.
  2. https://events.fullhyderabad.com/kalarajyam-at-thyagaraja-gana-sabha/2003-december/tickets-dates-videos-reviews-4275-1.html