முக்காணி

தமிழ்நாட்டின், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராமம்

முக்காணி (Mukkani) என்பது என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இந்த ஊரானது தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில் அமைந்துள்ளது. இது விவசாயத்திற்கு பிரசித்தி பெற்ற பகுதியாகும். இங்கு வெற்றிலை, வாழை, நெல், மஞ்சள் , பச்சை பயறு, உளுந்து, கரும்பு ஆகியவைகள் பயிரிடப்படுகின்றனர. குறிப்பாக இங்கு வெற்றிலை மிகவும் முக்கிய பயிராகும். இங்கு பயிரிடும் வெற்றிலை இந்தியாவின் பிறமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யபடுகின்றன.

முக்காணி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தூத்துக்குடி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்628151

மக்கள்வகைப்பாடுதொகு

இந்த ஊரானது ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான தூத்துக்குடியில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 639 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 1768 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 6851 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 3507, பெண்களின் எண்ணிக்கை 3344 என உள்ளது. மக்களின் கல்வியறிவு விகிதமானது 76.7% என உள்ளது. இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[1]

முக்காணியர்கள்தொகு

முக்காணியர்கள் முக்காணியை தலைமையிடமாக கொண்டவர்கள் ஆவார்கள். டச்சிக்காரர்கள் படையெடுப்பின் போது முக்காணியர்கள் டச்சுக்காரர்களுக்கு எதிராக போரிட்டு வென்றார்கள் என்று திருச்செந்தூர் தல வரலாறுகளில் சான்றுகள் காணப்படுகின்றன.

இன்றளவும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் மூலவருக்கு- போற்றி மடைப் பள்ளியிலும், ஆறுமுகனுக்கு - முக்காணியர்கள் மடைப் பள்ளியிலும், வேங்கடாசலப் பெருமாளுக்கு- வைணவ மடைப்பள்ளியிலும் தனித்தனியே நைவேத்தியங்கள் தயாராகின்ற பணிகளை செய்து வருகின்றனர்.[2]

இவற்றையும் காண்கதொகு

முக்காணி வெங்கடாஜலபதி கோயில்

முக்காணி ஆதிபரமேஸ்வரி அம்மன் கோவில்

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்காணி&oldid=2931400" இருந்து மீள்விக்கப்பட்டது