முக்தார் பேகம்
முக்தார் பேகம் (Mukhtar Begum) ஒரு பாக்கித்தானிய பாரம்பரிய பாடகியும், கசல் பாடகியும், நடிகையும் ஆவார்.[2] திரைப்படங்களிலும் வானொலிகளிலும் பாடல்களைப் பாடியதற்காக இவர் "இசையின் ராணி" என்று அழைக்கப்பட்டார்.[1] இந்தி, பஞ்சாபி மற்றும் உருது படங்களில் பணிபுரிந்தார். ஹதிலி துல்ஹான், அலி பாபா 40 சோர், நள தமயந்தி, தில் கி பியாஸ், அன்க் கா நாஷா, முஃப்லிஸ் ஆஷிக் மற்றும் சத்ரா பகாவலி ஆகிய படங்களில் நடித்ததற்காக அறியப்பட்டார்.[2]
முக்தார் பேகம் | |
---|---|
பிறப்பு | முக்தார் கானும் 12 சூலை 1901 அமிருதசரசு, பிரித்தானிய இந்தியா, இந்தியா |
இறப்பு | 25 பெப்ரவரி 1982 கராச்சி, பாக்கித்தான் | (அகவை 80)
மற்ற பெயர்கள் | இசையின் ராணி[1] |
கல்வி | பாட்டியாலா கரானா இசைப்பள்ளி |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1920 – 1982 |
பெற்றோர் | குலாம் முகமது (தந்தை) |
வாழ்க்கைத் துணை | ஆகா ஹசார் காஷ்மீரி (கணவன்) |
பிள்ளைகள் | 1 |
உறவினர்கள் | பரிதா கானும் (சகோதரி) ஷீபா ஹசன் (உறவினர்) |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுமுக்தார் பேகம், 1901 ஆம் ஆண்டு பிரித்தானிய இந்தியாவின் அமிர்தசரசில் பிறந்தார். பாக்கித்தனின் பிரபல பாடகி பரிதா கானும் உட்பட இவருக்கு ஒரு சகோதரியும் மூன்று சகோதரர்களும் இருந்தனர் .[2]
இவர் பாட்டியாலா கரானாவின் (இசை பாணி) பாரம்பரிய இசைப் பள்ளியில் பயின்றார். அங்குள்ள உஸ்தாத் மியான் மெஹர்பான் கான் இவரது ஏழு வயதிலிருந்தே இந்துஸ்தானிய இசையில் பயிற்சி அளித்தார்.[2]
தொழில்
தொகு1930 களில், இவர் கொல்கத்தாவிற்கு குடிபெயர்ந்தார். மேலும் பிரபல உருது நாடக ஆசிரியரும் கவிஞரும், தனது பிற்கால கணவருமான ஆகா ஹஷர் காஷ்மீரி எழுதிய மேடை நாடகங்களில் இவர் நடிக்க ஆரம்பித்தார்.[2][3] பின்னர் மும்பைகுச் சென்று அங்கேயும் நாடகத்துறையில் பணியாற்றினார்.[4] பிறகு, ஊமைத் திரைப்படங்களில் பணியாற்றத் தொடங்கினார். 1931 இல் அறிமுகமான இவர் நள தமயந்தி, தில் கி பியாஸ், அன்க் கா நாஷா மற்றும் முஃப்லிஸ் ஆஷிக் உள்ளிட்ட இந்தி, பஞ்சாபி மற்றும் உருது ஆகிய இரு மொழிகளிலும் தோன்றினார்.[2] முக்தார் பேகம் பிரேம் கி ஆக் மற்றும் பேஷம் உள்ளிட்ட இரண்டு படங்களுக்கும் பாடல்களையும் இயற்றியுள்ளார்.[5]
கொல்கத்தாவில், இவர் நூர்ஜஹானின் குடும்பத்தினரைச் சந்தித்து, அவரது சகோதரிகளையும் திரைப்படம் மற்றும் நாடகங்களில் சேர ஊக்குவித்தார். மேலும் சில தயாரிப்பாளர்களிடமும் தனது கணவர் ஆகா ஹஷர் காஷ்மீரியிடமும் அவர்களை அறிமுகப்படுத்தினார்.[6]
இந்தியப் பிரிவினைக்குப் பிறகு தனது குடும்பத்துடன் பாக்கித்தானுக்குச் சென்று இலாகூரில் குடியேறினார்.[2][7] அங்கு தொடர்ந்து வானொலி மற்றும் தொலைக்காட்சிக்காக கசல்களைப் பாடினார்.[8][9][10] இலாகூரில், வானொலி பாக்கித்தானிலும் பல பாடல்களைப் பாடினார்.
இவர் ஒரு இசை ஆசிரியராகவும் பணிபுரிந்தார், மேலும் பாடகி நசீம் பேகம் மற்றும் தனது சொந்த தங்கை பரிதா கானும் ஆகியோருக்கு பாரம்பரிய இசை பாடல்களிலும், கசல்களிலும் பயிற்சி அளித்தார்.[11]
திருமணம்
தொகுமுக்தார் உருது கவிஞரும், நாடக ஆசிரியரும், நாடக நடிகருமான ஆகா ஹஷர் காஷ்மீரியை மணந்தார். இவரது தங்கை பரிதா கானும் ஒரு பிரபலமான கசல் பாடகி ஆவார்.[2]
இறப்பு
தொகுநீண்டகாலமாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட முக்தார் பேகம் பிப்ரவரி 25, 1982 அன்று தனது 80 வயதில் கராச்சியில் இறந்தார்.[2][12][13]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "فلمی و ادبی شخصیات کے سکینڈلز۔ ۔ ۔قسط نمبر356". Daily Pakistan. 28 April 2022.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 "Mallikas of yesteryear". Himal Southasian. 26 March 2022.
- ↑ India's Shakespeare : translation, interpretation, and performance.
- ↑ "From here to Bombay". The News International. 6 September 2021.
- ↑ Indian Filmography: Silent & Hindi Films, 1897-1969.
- ↑ DOUBLE X FACTOR. p. 100.
- ↑ "Lahore a part of me". The News International. 12 July 2021.
- ↑ "The history, art and performance of ghazal in Hindustani sangeet". Daily Times. 15 January 2022.
- ↑ "Daagh and ghazal singing". The News International. 10 June 2021.
- ↑ "Experimenting with ghazal". The News International. 24 December 2021.
- ↑ Who's Who: Music in Pakistan. p. 187.
- ↑ "کلاسیکی گائیکی میں نام وَر مختار بیگم کی برسی". ARY News. 10 May 2022.
- ↑ Asiaweek, Volume 12, Issues 27-39.