முக்கியமந்திரி சந்துரு

இந்திய அரசியல்வாதி
(முக்யமந்திரி சந்துரு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஹொன்னசந்திரா நரசிம்மய்யா சந்திரசேகர் (Honnasandra Narasimhaiah Chandrashekar, பிறப்பு: 28 ஆகத்து 1953), முக்கியமந்திரி சந்துரு என்றும் பிரபலமாக அறியப்படும் இவரோர் இந்திய நடிகரும் மற்றும் அரசியல்வாதியுமாவார். ஒரு நடிகராக, இவர் கன்னட நாடகம் மற்றும் திரைப்படங்களில் பணியாற்றியதற்காக அறியப்பட்டவர். முக்யமந்திரி (முதலமைச்சர்) என்ற நாடகத்தில் நடித்தபோது இவருக்கு இந்த செல்லப்பெயர் இவரது பெயருடன் ஒட்டிக்கொண்டது. நாடகம் பரவலாக பிரபலமடைந்தது. சந்துரு தனது தொழில் வாழ்க்கை முழுவதும் பெரும்பாலும் நகைச்சுவை , எதிர்மறை மற்றும் குணச்சித்திர பாத்திரங்களைச் சித்தரித்துள்ளார். மேலும் 1983 இல் அறிமுகமானதிலிருந்து 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் [1] [2]

முக்கியமந்திரி சந்துரு
முக்கியமந்திரி சந்துரு (இடது)
ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
13 சூலை 2023
தலைவர், கன்னட மேம்பாட்டு ஆணையம்
பதவியில்
10 ஜூன் 2008 – 2014
முன்னையவர்சித்தலிங்கையா
கர்நாடக சட்ட மேலவை உறுப்பினர்
பதவியில்
1998–2010
கௌரிபிடானூர் தொகுதிக்கான கர்நாடக சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
1985–1989
முன்னையவர்ஆஎ. என். லட்சுமிபதி
பின்னவர்அசுவத்தநாராயண ரெட்டி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ஹொன்னசந்திரா நரசிம்மய்யா சந்திரசேகர்

28 ஆகத்து 1953 (1953-08-28) (அகவை 71)
ஒன்னசந்திரம், நெலமங்கலம், பெங்களூர் ஊரக மாவட்டம், மைசூர் மாநிலம் (தற்போது கருநாடகம்), இந்தியா
அரசியல் கட்சிஆம் ஆத்மி கட்சி
(2022–தற்போது வரை)
பிற அரசியல்
தொடர்புகள்
துணைவர்பத்மா (சூன் 1983)
பிள்ளைகள்2
வேலை
  • நடிகர்
  • அரசியல்வாதி

சந்துரு 1985இல் ஜனதா கட்சியில் சேர்ந்து, அந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கௌரிபிடானூர் தொகுதியில் வெற்றி பெற்றார். பின்னர் பாரதிய ஜனதா கட்சிக்கு மாறிய இவர் 1998 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் அதே சட்டமன்றத் தொகுதியில் உறுப்பினரானார்.[3] இவர் 2013 வரை கன்னட மேம்பாட்டு ஆணையத்தின் தலைவராக பணியாற்றினார். பின்னர் கட்சியை விட்டு வெளியேறி 2014 இல் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது இவர் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "A timeless political satire". The Hindu. 1 September 2016. Archived from the original on 11 October 2020. பார்க்கப்பட்ட நாள் 14 March 2017.
  2. Riti, M. D. (13 July 2000). "A legend plays a myth". Rediff.com. Archived from the original on 15 March 2017. பார்க்கப்பட்ட நாள் 14 March 2017.
  3. Aiyappa, Manu (21 December 2009). "Mukhyamantri Chandru: Public Office, Private Life". The Times of India. Archived from the original on 24 September 2016. பார்க்கப்பட்ட நாள் 14 March 2017.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்கியமந்திரி_சந்துரு&oldid=4032791" இலிருந்து மீள்விக்கப்பட்டது