முசாபர்பூர் வானூர்தி நிலையம்

முசாபர்பூர் வானூர்தி நிலையம் (Muzaffarpur Airport) என்பது இந்தியாவில் பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூரில் அமைந்துள்ள உள்நாட்டு வானூர்தி நிலையமாகும்.

முசாபர்பூர் வானூர்தி நிலையம்
கட்டுமானப் பணியின்போது
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைஅரசு
இயக்குனர்மத்திய அரசு
சேவை புரிவதுமுசாபர்பூர்
அமைவிடம்முசாபர்பூர்
உயரம் AMSL174 ft / 53 m
ஆள்கூறுகள்26°07′09″N 085°18′49″E / 26.11917°N 85.31361°E / 26.11917; 85.31361
நிலப்படம்
MZU is located in பீகார்
MZU
MZU
MZU is located in இந்தியா
MZU
MZU
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
10/28 3,990 1,216 ஆஸ்பால்ட்

வரலாறு

தொகு

முசாபர்பூர் வானூர்தி நிலையம் அப்போதைய இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் வருகைக்காகக் கட்டப்பட்டது. 1967 முதல் 1982 வரை, பட்னாவுக்கான விமானங்கள் முசாபர்பூரில் உள்ள பதாஹியில் உள்ள விமான நிலையத்திலிருந்து வழக்கமான அடிப்படையில் இயக்கப்பட்டன.

2018 ஆம் ஆண்டில், மற்ற நகரங்களுடன் மக்களை இணைக்கும் பொருட்டு இந்த விமான நிலையம் வட்டார இணைப்புத்திட்டமான உதானில் சேர்க்கப்பட்டது. ரைட்சு பிரதிநிதிகள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தனர். இதனடிப்படையில் கொல்கத்தா, ராஞ்சி, வாரணாசி, கயா போன்ற இடங்களுக்கு 30 முதல் 60 இருக்கைகள் கொண்ட விமானத்தினை இயக்கும் வகையில் இந்த விமான நிலையத்தை மேம்படுத்த ₹60 கோடி வழங்கப்பட்டது.

விரிவாக்கம்

தொகு

எதிர்கால விரிவாக்கத்திற்காக 410 ஏக்கர் நிலத்தைப் பெற அரசு செயல்பட்டு வருகிறது.[1] முசாபர்பூர் வானூர்தி நிலையத்தை மேம்படுத்த 475 ஏக்கர் நிலம் வேண்டும் என்று விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா முதல்வர் நிதிஷ் குமாருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.[2]

இந்த வானூர்தி நிலையம் சராசரி கடல் மட்டத்திலிருந்து 174 அடி (53 மீ) உயரத்தில் அமைந்துள்ளது. இது ஆஸ்பால்ட் மேற்பரப்புடன் 3,990 அடி (1,216 மீ) அளவுள்ள 10/28 என்ற அளவிலான ஒரு ஓடுபாதையினைக் கொண்டுள்ளது.[1]

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Muzaffarpur". Airports Authority of India. Archived from the original on 15 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 17 November 2016."Muzaffarpur" பரணிடப்பட்டது 2017-08-20 at the வந்தவழி இயந்திரம். Airports Authority of India. Retrieved 17 November 2016.
  2. Monu, Sanjay Kumar (2021-08-27). "Centre Demands 475 Acres Of Land To Start Muzaffarpur Airport". Muzcorner (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-27.