முத்துக்குழிவயல்


முத்துக்குழிவயல் என்பது கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒர் இடமாகும். இது உடல் நலம் பேணவும், ஓய்வெடுக்கவும் சிறந்த இடமாகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 4400 அடி உயரத்திலுள்ளது. இது நாகர்கோவிலில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவிலும் பேச்சிப்பாறைக்கு அருகாமையிலும் அமைந்து இருக்கிறது. 19 ஆம் நூற்றாண்டில் தங்கம் இங்கு கிடைப்பதாக கருதப்பட்டது. உண்மை அல்ல என்று பின் உணரப்பட்டது. நல்ல தெளிந்த நீர் கிடைக்கிறது. முன்நாளில் இப்பகுதியை ஆண்ட மன்னர்கள் இந்த இடத்தினை ஓய்விடமாகக் கொண்டிருந்தனர் என்பதற்கு அடையாளமாகச் சில கட்டிடங்கள் உள்ளன. இம்மலையின் மீதிருந்து இயற்கை எழிலை ரசிக்கலாம்.

முத்துக்குழிவயல்
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், இ. ஆ. ப
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

உசாத்துணை தொகு

  • தமிழ்நாடு மாவட்ட விவரச்சுவடிகள்.-கன்னியாகுமரி-அரசுவெளியீடு.

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்துக்குழிவயல்&oldid=3225277" இலிருந்து மீள்விக்கப்பட்டது