முனிபா மசாரி பலோச்

முனிபா மசாரி பலோச் (Muniba Mazari உருது : منیبہ مزاری; பிறப்பு 3 மார்ச் 1987, பாக்கித்தான் இரும்பு பெண்மணி [1] ) ஒரு பாக்கித்தான் ஆர்வலர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் , வடிவழகி, பாடகர் மற்றும் ஊக்கமளிக்கும் பேச்சாளர் ஆவார். பிபிசியால் 2015 இன் 100 ஊக்கமளிக்கும் பெண்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு இவர் ஐநா பெண்கள் பாக்கித்தானின் தேசிய தூதராக ஆனார். 2016 ஆம் ஆண்டிற்கான ஃபோர்ப்ஸ் 30 வயதுக்குட்பட்ட 30 பேர் கொண்ட பட்டியலில் இவர் இடம் பிடித்தார்.

முனிபா பலூச் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் பாக்கித்தானின் முதல் வடிவழகி மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆவார். 21 வயதில் கார் விபத்தில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக இவர் சக்கர நாற்காலியைப் பயன்படுத்துகிறார். ஹம் நியூஸின் சமூக நிகழ்ச்சியான மெயின் நஹி ஹம் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக தோன்றினார். [2]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

முனிபா மசாரி பலூச் பின்னணியைச் சேர்ந்த, மசாரி பழங்குடியைச் சேர்ந்தவர். இவர் மார்ச் 3, 1987 அன்று தெற்கு பஞ்சாபில் உள்ள ரஹீம் யார்கானில் பிறந்தார். [3] [4] முனிபா, இரானுவ பொதுப் பள்ளியில் பள்ளிக் கல்வி பயின்றார் , அதன் பின்னர் இவரது சொந்த ஊரில் பிஎஃப் பட்டம் பெற்றார். [4] 18 வயதில், இவர் படிப்பை முடிப்பதற்குள், இவர் திருமணம் செய்து கொண்டார். 2008 ஆம் ஆண்டில், இவர் ஒரு விபத்தில் சிக்கினார், அது இவருக்கு முடக்குவாதத்தை ஏற்படுத்தியது.

விபத்து மற்றும் மீட்பு

தொகு

2008 பிப்ரவரி 27 அன்று, முனிபாவும் இவரது கணவரும் குவெட்டாவிலிருந்து ரஹீம் யார் கான் மாவட்டம் நோக்கிப் பயணித்தனர். இவர்களின் மகிழுந்து ஒரு விபத்தை சந்தித்தது, இதில் இவர் கையில் பல எலும்புகள் உடைந்தன ( ஆரை எலும்பு மற்றும் அரந்து இரண்டும்), விலா-கூண்டு, தோள்பட்டை , கழுத்து எழும்பு மற்றும் முதுகெலும்பு. இவளது நுரையீரல் மற்றும் கல்லீரலும் ஆகிய பகுதிகள் பாதிப்படைந்தது. மேலும், இவரது கீழ் உடல் முழுவதும் செயலிழந்தது. [4] இவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் இவர் ரஹீம் யார் கான் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், இறுதியில், இவர் கராச்சியின் ஆகா கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். [4] அறுவை சிகிச்சைக்குப் பிறகு, இவர் இரண்டு வருடங்கள் படுக்கையில் இருந்தார். உளச்சிகிச்சை தொடங்கியது, இது சக்கர நாற்காலியைப் பயன்படுத்த போதுமான அளவு காயத்தில் இருந்து மீட்க உதவியது. [4] [5] [6]

இவரது காயங்களுக்கு சிகிச்சை பெற்ற பிறகு, முனிபா ராவல்பிண்டிக்குச் சென்றார். 2011 ல், விபத்து ஏற்பட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, முனிபா தனது மகன் நேயலை தத்தெடுத்தார். [3]

தொழில்

தொகு

முனிபா மசாரி ஒரு கலைஞர், ஆர்வலர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், வடிவழகி, பாடகர் மற்றும் ஊக்கமளிக்கும் பேச்சாளர் என பல செயல்பாடுகளின் மூலம் பரவலாக அறியப்படுகிறார். எவ்வாறாயினும், இவரது தொழில் வாழ்க்கையின் பெரும்பகுதி ஓவியம் மற்றும் ஊக்கமூட்டும் பேச்சாளராக இருந்தது.

ஓவியம் வரைந்தபோது, மாதாந்திர ஊதியத்திற்காக முகநூல் பக்கத்தை நடத்த ஆரிப் ஆஜருக்கு வேலை கிடைத்தது. பல்வேறு பள்ளிகளில் உருது கற்பித்தலை உள்ளடக்கிய தீராய் போலோ (மெதுவாக பேசவும்) என்ற தொடக்க திட்டத்திற்காக இவர் தனது மகனின் பள்ளியில் வேலை செய்யத் தொடங்கினார். அந்த நேரத்தில் பாக்கித்தான் தொலைக்காட்சியின் (PTV) நிர்வாக இயக்குனர் முகமது மாலிக், இவளது டெட் மாநாட்டு உரையாடல் காரணமாக இவளைப் பற்றி அறிந்து, PTV யில் பணியில் சேருமாறு கூறினார்[4] இவர் செப்டம்பர், 2014 இல் கிளவுன் டவுண் எனும் நிகழ்ச்சியில் பணிபுரிந்தார், இது குழந்தைகள் மற்றும் வயதானவர்களுடன் வேலை செய்ய அனுமதித்தது. [4]

சான்றுகள்

தொகு
  1. "Muniba Mazari – The Iron Lady of Pakistan is a True Inspiration". Content.PK (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-10-30. Archived from the original on 2019-10-22. பார்க்கப்பட்ட நாள் 2019-10-22.
  2. "Muniba Mazari named Goodwill Ambassador by UN Women". HIP (in ஆங்கிலம்). 2015-12-11. பார்க்கப்பட்ட நாள் 2019-10-22.
  3. 3.0 3.1 Maloomaat (2015-12-21). "Muniba Mazari, a Story of Strength and Motivation". Maloomaat (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-22. பிழை காட்டு: Invalid <ref> tag; name ":0" defined multiple times with different content
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 {{cite book}}: Empty citation (help) பிழை காட்டு: Invalid <ref> tag; name ":4" defined multiple times with different content
  5. Altaf, Arsalan. "Muniba Mazari's ex-husband sues her for defamation". 
  6. Altaf, Arsalan. "Muniba Mazari's ex-husband sues her for defamation". 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முனிபா_மசாரி_பலோச்&oldid=3568281" இலிருந்து மீள்விக்கப்பட்டது