முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி40

முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி40 (PSLV-C40) ஏவுகலம், 31 செயற்கைக்கோள்களுடன் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சனவரி 12 அன்று விண்ணில் ஏவப்பட்டது.[1][2] இந்த 31 செயற்கைக்கோள்களில், பாதுகாப்புப் படைகளுக்கு உதவும் கார்டோசாட்-2 செயற்கைக்கோளுடன், 1 மைக்ரோ செயற்கைக் கோள், ஒரு நானோ செயற்கைக்கோள் ஆகிய மூன்றும் இந்தியாவைச் சேர்ந்தவையாகும். 3 மைக்ரோ செயற்கைக்கோள்கள், 25 நானோ செயற்கைக்கோள்கள் ஆகியவை கனடா, ஐக்கிய அமெரிக்க நாடுகள், பின்லாந்து, பிரான்சு, கொரியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவையாகும்.[3] பி.எஸ்.எல்.வி. செலுத்திய வாகனத்தின் மொத்த எடை 1323 கிலோகிராம் ஆகும்.[4] பூமியைத் துல்லியமாகக் கண்காணிக்கவும், தொலையுணர்வு சேவைகளை வழங்கவும் கார்டோசாட்-2 செயற்கைக்கோளானது அனுப்பப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் இந்தியாவின் 100 ஆவது செயற்கைக்கோள் ஆகும்.[5] இந்த கார்ட்டோசாட்-2 செயற்கைக்கோள் புவியிலிருந்து 505 கிலோமீட்டர் தொலைவிலுள்ள புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.[6]

முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி40
rocket
திட்ட வகை31 செயற்கைக்கோள்களுடன்
இயக்குபவர்இந்திய விண்வெளி ஆய்வு மையம்
இணையதளம்ISRO website
விண்கலத்தின் பண்புகள்
விண்கலம்முனைய துணைக்கோள் ஏவுகலம்
விண்கல வகைமீளப்பாவிக்கவியலா ஏவு அமைப்பு
தயாரிப்புஇந்திய விண்வெளி ஆய்வு மையம்
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்09:29:00, 12 சனவரி 2018 (2018-01-12T09:29:00) (IST)
ஏவுகலன்முனைய துணைக்கோள் ஏவுகலம்
ஏவலிடம்ஸ்ரீஹரிகோட்டா
ஒப்பந்தக்காரர்இந்திய விண்வெளி ஆய்வு மையம்
----
Polar Satellite Launch Vehicle missions
← பிஎஸ்எல்வி-சி39 PSLV-C41

பயன்பாடு தொகு

கார்ட்டோசாட்-2 புவி கண்காணிப்பு பணிக்காக ஏவப்படுகிறது. இது நில வரைபடம் தயாரித்தல், கடலோர நிலங்களின் பயன்பாடு, ஒழுங்குபடுத்துதல் போன்ற பணிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் எனவும், இதற்காக துல்லியமாக படம் எடுக்கும் நிழற்படக்கருவி இதில் பொருத்தப்பட்டுள்ளன என்று இந்திய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. "ISRO's 42nd PSLV successfully puts 31 satellites in orbit". The Hindu. 12 January 2018. பார்க்கப்பட்ட நாள் 12 சனவரி 2018.
  2. "'கார்டோசாட்-2' உட்பட 31 செயற்கைக்கோள்களுடன் ஜன. 12-ல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-40 ராக்கெட்: ஸ்ரீஹரிகோட்டாவில் ஏற்பாடுகள் தீவிரம்". தி இந்து. 10 சனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 12 சனவரி 2018.
  3. "31 செயற்கைக் கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி-சி40". தி இந்து. 12 சனவரி 2018. 
  4. "PSLV-C40/Cartosat-2 Series Satellite Mission". Department of Space, Indian Space Research Organization. 09 சனவரி 2018. Archived from the original on 2019-03-23. பார்க்கப்பட்ட நாள் 12 சனவரி 2018. {{cite web}}: Check date values in: |date= (help)
  5. "100வது செயற்கைகோளை விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை". தினமலர். 12 சனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 12 சனவரி 2018.
  6. "வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது கார்ட்டோசாட்-2 செயற்கைக்கோள்". தினமணி. 13 சனவரி 2018. pp. 1. http://epaper.dinamani.com/1503069/Dinamnai-Tiruchy/13.01.2018#page/1/1. பார்த்த நாள்: 13 சனவரி 2018. 

இவற்றையும் காண்க தொகு

பிஎஸ்எல்வி-சி37