முனைவர் இராம் மனோகர் லோகியா மருத்துவ அறிவியல் நிறுவனம்

முனைவர் இராம் மனோகர் லோகியா மருத்துவ அறிவியல் நிறுவனம் (Dr. Ram Manohar Lohia Institute of Medical Sciences), இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் அமைந்துள்ள மாநில சட்டமன்றச் சட்டத்தின் கீழ் உள்ள ஒரு மருத்துவ நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் இளநிலை மருத்துவம் மற்றும் இளநிலை அறுவையியல், மருந்திய மருத்துவம், குழந்தை மருத்துவத்தில் முதுநிலை, முதுநிலை மருத்துவன் மற்றும் முனைவர் பட்ட படிப்பினை வழங்குகிறது. இந்நிறுவனம் 2006-ல் நிறுவப்பட்டது. 2018 வரை கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. 12 செப்டம்பர் 2018 அன்று, பட்டம் வழங்கும் நிலை மற்றும் சலுகைகளுடன் மாநில சட்டமன்றச் சட்டத்தின் கீழ் செயல்படும் ஒரு நிறுவனமாக அறிவிக்கப்பட்டது.

முனைவர் இராம் மனோகர் லோகியா மருத்துவ அறிவியல் நிறுவனம்
Dr. Ram Manohar Lohia Institute of Medical Sciences
குறிக்கோளுரைஅனைவரும் நல்வாழ்வுடன் இருக்க
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
May All be Healthy
வகைமாநில சட்டமன்றச் சட்டத்தின் கீழ் தோற்றுவிக்கப்பட்ட நிறுவனங்கள்
உருவாக்கம்2006 (19 ஆண்டுகளுக்கு முன்னர்) (2006)
தலைவர்தலைமைச் செயலாளர், உத்தரப் பிரதேச அரசு
பணிப்பாளர்சோனியா நித்யானந்த்
அமைவிடம், ,
வளாகம்கோம்தி நகர், இலக்னோ
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு
இணையதளம்drrmlims.ac.in

வரலாறு

தொகு

நிறுவியது

தொகு

உத்தரப் பிரதேச அரசாங்கத்தின் தன்னாட்சி நிறுவனமாக இது லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் கழகத்தின் கீழ் நிறுவப்பட்டது. 2006-ல் தன்னாட்சி தகுதியினைப் பெற்றது.

பட்டப் படிப்புகள்

தொகு

2006-ல் நிறுவப்பட்ட பிறகு, 2012-ல் முதுநிலை மற்றும் உயர் பட்டப் படிப்புகளைத் தொடங்க இந்திய மருத்துவக் கழக ஒப்புதல் பெற்றது.[1] 2017ஆம் ஆண்டில் இளநிலை மருத்துவ பட்டப்படிப்பை நடத்துவதற்கு இந்திய மருத்துவக் கழக ஒப்புதலைப் பெற்றது.[2] இது கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் இணைந்த கல்லூரியாகத் தொடங்கப்பட்டது.

மாநில சட்டமன்ற சட்டத்தின் கீழ் நிறுவனம் மூலம் பல்கலைக்கழக தகுதி

தொகு

2015ஆம் ஆண்டில், உத்திரப் பிரதேச அரசு, சட்டமன்றத்தில் முனைவர் இராம் மனோகர் லோகியாமருத்துவ அறிவியல் நிறுவனச் சட்டம் 2015ஐ இயற்றுவதன் மூலம் மாநில சட்டமன்றச் சட்டத்தின் கீழ் ஒரு நிறுவனமாக மேம்படுத்தத் தொடங்கியது. ஆனால் முனைவர் இராம் மனோகர் லோகியா மருத்துவ அறிவியல் நிறுவனம் சட்டம் 2015க்கு உத்தரப் பிரதேச ஆளுநரிடம் ஒப்புதல் பெறாததால், 2018-ல் அமைச்சரவை ஆளுநர் அளித்த பரிந்துரைகளை உள்ளடக்கி மீண்டும் ஒரு திருத்தச் சட்டத்தைத் தயாரித்து செயல்முறையைத் தொடங்கியது.[3][4] இந்தச் சட்டம் 12 செப்டம்பர் 2018 அன்று அறிவிக்கப்பட்டது.[5][6]

படிப்புகள்

தொகு

தற்போது இளநிலை மருத்துவம் மற்றும் இளநிலை அறுவையியல், குறுகிய கால மாணவர் பயிற்சி, இளம் அறிவியல், முது அறிவியல் மாணவர்களுக்கான தொழில்நுட்ப & திட்டப்பணி, முனைவர் பட்ட திட்டம், மருத்துவ மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்புகளை வழங்குகிறது.[7]

இடம்

தொகு

லக்னோவின் கோமதி நகர்ப் பகுதியில் உள்ள விபூதி காண்டில் இந்த நிறுவனம் அமைந்துள்ளது.

துறைகள்

தொகு
  • மயக்கவியல்
  • இதயவியல்
  • இரைப்பை அறுவை சிகிச்சை
  • குடல் மருத்துவம்
  • நுண்ணுயிரியல்
  • சிறுநீரகவியல்
  • நரம்பியல்
  • நரம்பியல் அறுவை சிகிச்சை
  • அணு மருத்துவம்
  • நோயியல்
  • கதிரியக்க நோய் கண்டறிதல்
  • கதிர்வீச்சு புற்றுநோயியல்
  • அறுவைசிகிச்சை புற்றுநோயியல்
  • சிறுநீரகவியல்
  • மருத்துவ புற்றுநோயியல்
  • இருதய மற்றும் மார்பக அறுவை சிகிச்சை
  • அவசர மருத்துவம்
  • உடல் மருத்துவம் & மறுவாழ்வு
  • குழந்தை அறுவை சிகிச்சை

மேற்கோள்கள்

தொகு
  1. "MCI gives accreditation to PG, post PG courses at Ram Manohar Lohia Institute of Medical Sciences | Lucknow News - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
  2. "Ram Manohar Lohia Institute of Medical Sciences to offer 150 MBBS seats from new session | Lucknow News - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
  3. "लोहिया संस्थान पीजीआई की तर्ज पर अब विश्वविद्यालय बनेगा". livehindustan.com (in இந்தி).
  4. "पीजीआई तर्ज पर लोहिया इंस्टीट्यूट बनेगा विश्वविद्यालय". minextlive.jagran.com (in இந்தி).
  5. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 9 February 2019. பார்க்கப்பட்ட நாள் 8 February 2019.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  6. "Welcome to Dr. Ram Manohar Lohia Institute of Medical Sciences". Archived from the original on 29 May 2017.
  7. "Ram Manohar Lohia Institute of Medical Sciences to offer 150 MBBS seats from new session | Lucknow News - Times of India". The Times of India.

வெளி இணைப்புகள்

தொகு