முன்னிற்குஞ்சுரப்பிக்கே உரித்தான முறிதூண்டி
முன்னிற்குஞ்சுரப்பிக்கே உரித்தான முறிதூண்டி (Prostate-specific antigen, PSA), அல்லது காம்மா-விரைப்புரதம் (gamma-seminoprotein) அல்லது கல்லிக்ரீன் (kallikrein-3, KLK3), என்பது மனிதர்களில் KLK3 மரபணுவால் குறியிடப்பட்ட கிளைக்கோபுரதம் நொதியம் ஆகும். பிஎஸ்ஏ கல்லிக்ரீன் தொடர்புடைய புரத நொதி குடும்பத்தைச் சேர்ந்தது; இதனை முன்னிற்கும் சுரப்பியின் புறவணியிழைய உயிரணுக்கள் சுரக்கின்றன. இது விந்து தள்ளலுக்காக உருவாக்கப்படுகிறது; விரையுறையில் விந்து பாய்மத்தை நீர்த்து விந்து இலகுவாக நீந்த உதவுகிறது.[1] மேலும் இது கருப்பைச் சளியை கரைத்து கருப்பைக்குள் விந்து செல்லுவதற்கு வழி செய்வதாகவும் நம்பப்படுகிறது. [2]
நலமுள்ள முன்னிற்குஞ்சுரப்பிகளை உடைய ஆடவர்களின் குருதி நீர்மத்தில் பிஎஸ்ஏ சிறிய அளவில் காணப்படுவதுண்டு. ஆனால் முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய் அல்லது பிற முன்னிற்குஞ்சுரப்பி தொடர்பான நோய்களின்போது இது கூடிய அளவில் காணப்படுகிறது.[3]
மேற்சான்றுகள்
தொகு- ↑ Balk SP, Ko YJ, Bubley GJ (January 2003). "Biology of prostate-specific antigen". J. Clin. Oncol. 21 (2): 383–91. doi:10.1200/JCO.2003.02.083. பப்மெட்:12525533.
- ↑ Hellstrom WJG, ed. (1999). "Chapter 8: What is the prostate and what is its function?". American Society of Andrology Handbook. San Francisco: American Society of Andrology. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-891276-02-6.
{{cite book}}
:|access-date=
requires|url=
(help);|archive-url=
requires|url=
(help); Unknown parameter|chapterurl=
ignored (help) - ↑ . பப்மெட்:7512659.
வெளி இணைப்புகள்
தொகு- The MEROPS online database for peptidases and their inhibitors: S01.162
- American Cancer Society: Detailed Guide: Prostate Cancer Can Prostate Cancer Be Found Early?
- National Cancer Institute: The Prostate-Specific Antigen (PSA) Test: Questions and Answers
- மெஷ் Prostate-Specific+Antigen
- eMedicine அகரமுதலியில் Prostate-Specific+Antigen
- Prostate UK பரணிடப்பட்டது 2009-03-08 at the வந்தவழி இயந்திரம் Help us stop prostate diseases ruining lives