முரண்பாடான தவளை

முரண்பாடான தவளை
Pseudis paradoxa01a.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்குகள்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: இருவாழ்விகள்
வரிசை: வாலிலி
குடும்பம்: Hylidae
பேரினம்: Pseudis
இனம்: P. paradoxa
இருசொற் பெயரீடு
Pseudis paradoxa

முரண்பாடான தவளை (Pseudis paradoxa, ஆங்கிலம்: Paradoxical frog அல்லது shrinking frog) என்பது குளம், குட்டை, ஏரி போன்ற நீர் நிலைகளில் வாழக்கூடிய ஒரு தவளை ஆகும். பெண் தவளைகள் இடும் முட்டைகளில் இருந்து தாய்த் தவளையை விட நான்கு மடங்கு பெரிய தலைப்பிரட்டைகள் உருவாகும். பின்னர் இவை த‌வளையாக உருமாறியவுடன் (metamorphosis) இவற்றின் உடல் பழைய அளவில் கால் பங்காகச் சுருங்கி விடும்.

பொதுவாக மற்ற இனத் தலைப்பிரட்டைகள் சிறிதாக இருந்து வளர வளரப் பெரிதாகும். ஆனால் இத் தவளை இனத்திலோ வளர வளரச் சிறிதாகும் முரண்பாடான நிகழ்வு காணப்படுகிறது. விலங்குலத்தில் இந்த முரண்பாடு மிக அதிசயமாகக் காணப்படும் ஒன்றாகும்.

இவற்றையும் காண்கதொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Pseudis paradoxa
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முரண்பாடான_தவளை&oldid=1921860" இருந்து மீள்விக்கப்பட்டது