முருங்கைக்காய் சிப்ஸ்
முருங்கக்காய் சிப்ஸ் (Murungakkai Chips) என்பது 2021ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி நகைச்சுவை நாடகத் திரைப்படமாகும். இது அறிமுக இயக்குநர் சிறீஜர் என்பவரால் எழுதி இயக்கப்பட்டது. லிப்ரா புரொடக்ஷன்ஸ், பர்ஸ்ட்மேன் பிலிம் ஒர்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்திருந்தது.[1] இப்படத்தில் சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.[2] படத்தின் இசையை இசையமைப்பாளர் தரண் குமார் மேற்கொண்டார்.[3] படம் 10 திசம்பர் 2021 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[4][5]
முருங்கைக்காய் சிப்ஸ் | |
---|---|
இயக்கம் | சிறீஜர் |
தயாரிப்பு | இரவீந்தர் சந்திரசேகரன் |
கதை | சிறீஜர் |
இசை | தரண் குமார் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | இரமேஷ் சக்ரவர்த்தி |
படத்தொகுப்பு | ஜோமின் |
கலையகம் | லிப்ரா புரொடக்சன்ஸ் பர்ஸ்ட்மேன் பிலிம் ஒர்க்ஸ் |
வெளியீடு | திசம்பர் 10, 2021 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை
தொகுபுதுமணத் தம்பதிகள் அவர்களின் முதல் இரவில், ஒரு திட்டத்தோடு செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் - பையன் பிரம்மச்சாரியாக இருக்க வேண்டும் என விரும்புகிறார். அந்த பெண் திருமணத்தை நிறைவு செய்வதை உறுதியாக இருக்கிறார். இறுதியில் வெற்றி பெறுவது யார்?
நடிகர்கள்
தொகு- அர்ஜுனாக சாந்தனு பாக்யராஜ்
- சாந்தியாக அதுல்யா ரவி
- அர்ஜுனின் தாத்தாவாக பாக்யராஜ்
- சாந்தியின் அத்தையாக ஊர்வசி
- லிங்குசாமியாக மனோபாலா
- பணம் கொடுப்பவராக முனீஷ்காந்த்
- கடனாளியாக யோகி பாபு
- மயில்சாமி
- ஜாங்கிரி மதுமிதா
- லொள்ளு சபா மனோகர்
- ராஜு ஜெயமோகன்
- உலகநாதனாக இரவீந்தர் சந்திரசேகரன்
இசை
தொகுபடத்தின் ஒலிப்பதிவை தரண் குமார் மேற்கொண்டுள்ளார். ஒலிப்பதிவுத் தொகுப்பில் மூன்று பாடல்கள் இடம்பெற்றன. மேலும், இசை உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியது.
படம் 10 திசம்பர் 2021 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டு, விமர்சகர்களிடமிருந்து மோசமான விமர்சனங்களைப் பெற்றது.[6][7] இப்படம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "சாந்தனு - அதுல்யா இணையும் முருங்கைகாய் சிப்ஸ்". இந்து தமிழ் திசை. பார்க்கப்பட்ட நாள் 8 July 2020.
- ↑ "Shanthnu-Athulya-starrer Murungakkai Chips wraps up its shooting". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 12 March 2021.
- ↑ "'Murungakkai Chips is an engaging rom-com'". News Today. பார்க்கப்பட்ட நாள் 14 September 2021.
- ↑ "Shanthnu & Athulya's Murungaikkai Chips to release on December 10". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 29 November 2021.
- ↑ "Shanthnu Bhagyaraj, Athulya Ravi-Starrer Murungakkai Chips Gets 'A' Certificate". News 18. பார்க்கப்பட்ட நாள் 7 December 2021.
- ↑ "Murungakkai Chips Movie Review: Murungakkai Chips, a flaccid adult comedy". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 10 December 2021.
- ↑ "Murungakkai Chips review : An adult comedy that falls flat!". Sify. பார்க்கப்பட்ட நாள் 10 December 2021.