முல்லை பதிப்பகம்

தமிழ்நாட்டு பதிப்பகம்

முல்லை பதிப்பகம் என்பது இந்தியாவின் , தமிழ்நாட்டின், சென்னையில் தொடங்கப்பட்ட ஒரு தமிழ் புத்தகப் பதிப்பு நிறுவனம் ஆகும். இது 1944 ஆம் ஆண்டு முல்லை முத்தையாவால் துவக்கப்பட்டது. பாரதிதாசன் பாடல்கள் மீது உள்ள ஈர்ப்பால் அவரது நூல்களை வெளியிடுவதை நோக்கமாக கொண்டே இப்பதிப்பகத்தைத் துவக்கினார்.[1] பதிப்பகத்தின் பெயரான முல்லை என்பது பாரதிதாசனால் பரிந்துரைக்கபட்ட பெயராகும்.

முல்லை பதிப்பகம்
வகைநூல் பதிப்பு/வெளியீடு
நிறுவுகை1944
நிறுவனர்(கள்)முல்லை முத்தையா
தலைமையகம்சென்னை, இந்தியா
உற்பத்திகள்நூல்கள், இதழ்கள்
சேவைகள்நூல் பதிப்பு/வெளியீடு

வெளியீடுகள் தொகு

இந்த பதிப்பகம் பல்வேறு துறைசார்ந்த நூல்களை இந்தப் பதிப்பகம் வெளியிட்டு வருகின்றது. இந்த பதிப்பகம் பாரதிதாசனின் பல நூல்களை பதிப்பித்துள்ளது. எம். எஸ். உதயமூர்த்தி அவர்களின் முதல் நூல் முல்லை பதிப்பகத்தின் வழியாகவே வெளியானது.[2]

குறிப்புகள் தொகு

  1. "முல்லை முத்தையா 10". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-10-09.
  2. "நூல் வெளி: பதிப்புத் தொண்டைப் பறைசாற்றும் நூல்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-10-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முல்லை_பதிப்பகம்&oldid=3532966" இலிருந்து மீள்விக்கப்பட்டது