மூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போர்

மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போர் (1817 – 1818) என்பது கம்பெனி ஆட்சிக்கும், மராத்திய கூட்டமைப்புக்கும் இடையே, 1817 – 1818ல் நடைபெற்ற போரில், ஆங்கிலேயர்கள் இந்தியாவை முழுமையாக வெல்வதற்குமான ஒரு போராக அமைந்தது.[1]

மாரத்தியப் பகுதிகளைப் பிடிக்கும் நோக்கில் இப்போரானது பிரித்தானிய தலைமை ஆளுநராக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் என்பவரால், ஆங்கிலேய படைத்தலைவர் சர் தாமஸ் ஹிஸ்லாப் தலைமையில் பிரித்தானியப் படைகள் மராத்திய கூட்டமைப்பை எதிர்கொண்டனர்.

போரின் முடிவில் மராத்திய கூட்டமைப்பு, கம்பெனி ஆட்சியிடம் வீழ்ந்தது. மராத்திய பேஷ்வாவின் ஆட்சி முடிவுக்கு வந்தது.[2] மராத்திய பேஷ்வா இரண்டாம் பாஜி ராவ் பித்தூருக்கு அனுப்பப்பட்டார். அவருக்கு ஆண்டு 80,000 பவுண்ட் ஸ்டெர்லிங் ஓய்வூதியமாக கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி வழங்கியது.

போரில் தோற்ற மராத்திய கூட்டமைப்பின் குவாலியர் அரசு, இந்தூர் அரசு, நாக்பூர் அரசு, பரோடா அரசு, கோல்ஹாப்பூர் அரசு மற்றும் சதாரா முதலிய மராத்திய அரசுகள், கிழக்கிந்திய கம்பெனி வகுத்த துணைப்படைத்திட்டத்தையும், ஆங்கிலேயர்களின் மேலாத்திக்கத்தையும் ஏற்று, சுதேச சமஸ்தான மன்னர்களாக இந்தியா விடுதலை அடையும் வரை ஆண்டனர்.

1848ல் ஆண் வாரிசு அற்ற சதாரா இராச்சியத்தை, அவகாசியிலிக் கொள்கையின் படி, பிரித்தானிய இந்தியாவின் பம்பாய் மாகாணத்துடன் ஆங்கிலேயர்கள் இணைத்தனர்.

பின்னர் 1948ல் முன்னாள் மராத்திய சுதேச சமஸ்தானங்கள் இந்திய அரசுயுடன் இணைக்கப்பட்டது.

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு