மூன்றாம் துர்லபராஜா
மூன்றாம் துர்லபராஜா (Durlabharaja III) (ஆட்சி சுமார் 1065-1070 பொ.ச.) சாகம்பரியின் சௌகான் வம்சத்தைச் சேர்ந்த ஒரு இந்திய மன்னராவார். வடமேற்கு இந்தியாவில் இன்றைய இராஜஸ்தானின் சில பகுதிகளை உள்ளடக்கிய சபடலக்ச நாட்டை ஆட்சி செய்தார்.
மூன்றாம் துர்லபராஜா | |
---|---|
சபடலக்ச நாட்டின் ஆட்சியாளர் | |
ஆட்சிக்காலம் | சுமார் 1065-1070 பொ.ச. |
முன்னையவர் | சாமுண்டராஜா |
பின்னையவர் | மூன்றாம் விக்ரகராஜா |
அரசமரபு | சாகம்பரியின் சௌகான்கள் |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுதுசாலா என்றும் அழைக்கப்படும் இவர், தனது தந்தை சாமுண்டராஜனுக்குப் பிறகு சாகம்பரியின் சிம்மாசனத்தில் அமர்ந்தார். பிஜோலியா கல்வெட்டு இருவருக்கும் இடையில் ஒரு சிம்ஹத்தை வைக்கிறது. சிம்ஹதா துர்லபராஜாவின் மூத்த சகோதரராக இருந்திருக்கலாம் என்று வரலாற்றாசிரியர் தசரத சர்மா கருதுகிறார். [1]
குசராத் சோலங்கியர்களுடன் மோதல்
தொகுதுர்லபராஜா குசராத்தின் சோலங்கிய மன்னன் கர்ணனுடன் மோதலில் ஈடுபட்டதாக ஒப்பீட்டளவில் தாமதமான இரண்டு நூல்கள் தெரிவிக்கின்றன. துர்லபன் கூர்ஜர மன்னனை தோற்கடித்து, சங்கிலியால் அஜ்மீருக்கு அழைத்து வந்து சந்தையில் தயிர் விற்கும்படி கட்டாயப்படுத்தினார் என்று பிரபந்த கோசம் என்ற நூல் கூறுகிறது. துர்லபனுக்கு எதிரான போரில் கர்ணன் இறந்ததாகவும், சகமான அரசனிடம் தனது செல்வம் அனைத்தையும் இழந்ததாகவும் ஹம்மிரா மகாகாவ்யம் கூறுகிறது. துர்லபனின் மரணத்திற்குப் பிறகு கர்ணன் (கி.பி. 1092 இல் இறந்தார்) ஆட்சியைத் தொடர்ந்ததால், இது வரலாற்றுத் தவறானது என்று அறியப்படுகிறது. மேலும், பிருத்விராஜ விஜயம் போன்ற முந்தைய மற்றும் நம்பகமான நூல்கள் அத்தகைய முரண்பாடுகளைக் குறிப்பிடவில்லை. கர்ணனுக்கு எதிராக துர்லபன் ஒரு சிறிய இராணுவ வெற்றியை அடைந்திருக்கலாம், இது பிற்கால புகழ்ச்சியாளர்களால் ஒரு பெரிய வெற்றியாக பெரிதாக்கப்பட்டது. [2]
இறப்பு
தொகுதுர்லபன், பெரும்பாலும் கசனவித்து மன்னன் இப்ராஹிம் அரசரான இருந்த போது முஸ்லிம் படையெடுப்புகளை எதிர்கொண்டதாகத் தெரிகிறது. [3] மிலேச்சர்களுடனான போரில் இவர் கொல்லப்பட்டதாக பிருத்விராஜ விஜயம் கூறுகிறது. ஜொனராஜாவின் உரையின் வர்ணனையின்படி, " மிலேச்சர்கள்" என்ற வார்த்தை முஸ்லிம்களைக் குறிக்கிறது. [2] பல ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்ட ஹம்மிர மகாகாவ்யம், ஷஹாப்-உத்-தின் என்ற முஸ்லிம் ஆட்சியாளரை துர்லபன் கைப்பற்றியதாகக் கூறுகிறது. ஆனால் இது வரலாற்று ரீதியாக துல்லியமாகத் தெரியவில்லை. [4]
இவருக்குப் பிறகு இவரது சகோதரர் மூன்றாம் விக்ரகராஜா ஆட்சிக்கு வந்தார். [5]
சான்றுகள்
தொகு- ↑ Dasharatha Sharma 1959, ப. 35.
- ↑ 2.0 2.1 R. B. Singh 1964, ப. 125.
- ↑ R. B. Singh 1964, ப. 126.
- ↑ R. B. Singh 1964.
- ↑ Dasharatha Sharma 1959, ப. 36.
உசாத்துணை
தொகுDasharatha Sharma (1959). Early Chauhān Dynasties. S. Chand / Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780842606189.
- R. B. Singh (1964). History of the Chāhamānas. N. Kishore. இணையக் கணினி நூலக மைய எண் 11038728.