மூன் மூன் சென்

இந்திய நடிகை

மூன் மூன் சென் (மூன்மூன் சென் என்றும் அழைக்கப்படுகிறார்) (வங்காள மொழி: মুনমুন সেন 1958 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி பிறந்தார்) ஓர் இந்தியத் திரைப்பட நடிகையாவார். அவர் பெங்காலி, இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்தார். சென் குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளாக நடிகர்களாக இருக்கின்றனர். அவர் பெங்காலி திரைப்படத்துறையில் வெற்றிபெற்ற பல திரைப்படங்களில் நடித்து நிலையான நடிகையாக இருந்தார். அவர் கடைசியாக பாலிவுட் திரைப்படங்களில் நடித்தார். ஆனால் அவை பெங்காலி திரைப்படத்துறை போல வெற்றிகரமாக அமையவில்லை. அவர் 60 திரைப்படங்கள் மற்றும் 40 டிவி தொடர்களில் நடித்துள்ளார். அவரின் மிகச்சிறந்த நடிப்பாக கே.விஸ்வநாத் இயக்கிய தெலுங்குத் திரைப்படமான சிறிவெண்ணிலாவில் அவரின் நடிப்பைக் கூறலாம்.

Moon Moon Sen

இயற் பெயர் Moon Moon Sen
பிறப்பு மார்ச்சு 28, 1958 (1958-03-28) (அகவை 66)
Calcutta, West Bengal, India
துணைவர் Bharat Dev Varma

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

மூன் மூன் சென் கல்கத்தாவிலுள்ள பெங்காலி குடும்பத்தில் பிரபல பெங்காலி நடிகை சுசித்ரா சென் மற்றும் டிபனாத் சென் ஆகியோருக்குப் பிறந்தார். பல்லிகுன்கே பிளேசைச் சேர்ந்த அவரின் அப்பா கொகத்தாவின் பெரும்பணக்கார தொழிலதிபர்களில் ஒருவரான ஆதிநாத் சென்னின் மகனாவார். அவருடைய தாத்தாவான டீனாநாத் சென் திவான் அல்லது திரிபுரா மகாராஜாவின் அமைச்சராக இருந்தவர்.

அவர் லோரெட்டோ கான்வென்ட், டார்ஜீலிங் மற்றும் லோரெட்டோ ஹவுஸ், கல்கத்தாவில் படித்தார். பின்னர் இங்கிலாந்திலுள்ள ஒரு பள்ளியிலும் அதன்பின்னர் திரும்பிவந்து லோரெட்டோ கல்லூரி, கல்கத்தாவில் பட்டப்படிப்பையும் படித்தார். அவர் அவரது ஒப்பிலக்கியத் துறை முதுகலைப் பட்டத்தை கொல்கத்தாவில் உள்ள ஜடவ்பூர் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.[1]

சென் குழந்தையாக இருக்கும்போது இந்தியாவின் மிகச்சிறந்த கலைஞர்களில் ஒருவரான ஜாமினி ரோயிடம் ஓவியம் கற்றார்.[2] அவர் ஓவியங்கள் மற்றும் பழங்காலச் சின்னங்களைச் சேகரித்தல் ஆகியவற்றைப் பெரிதும் விரும்புகிறார். அவர் 2000 ஆம் ஆண்டில் கொடுத்த ஒரு நேர்காணலில் பல்லிகுங்கே பெண்கள் பள்ளியில் ஓராண்டாகவும்[3] பின்னர் வரைபடக்கலையை திரைப்பட தொழில்நுட்பங்களைக் கற்றுத்தரும் பள்ளியான சித்ரபானியிலும் கல்விகற்பித்ததாகத் தெரிவித்தார். அவர் சமூகப் பணியிலும் உற்சாகமாக ஈடுபட்டார். அவர் திருமணம் செய்வதற்கு முன்னர் ஒரு குழந்தையைத் தத்தெடுப்பது பற்றியும் எண்ணினார்.[1] சென் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்னர் கொல்கத்தாவிலுள்ள பிரபல ஆண்கள் பள்ளியில் ஆங்கிலம் கற்பித்தார்.[சான்று தேவை]

நடிப்புத் தொழில்

தொகு

மூன் மூன் சென் திருமணம் செய்து தாயான பின்னர் திரைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் நடித்தார். அவரது முதல் படம் ஆண்டர் பாஹர் (1984).[1]. இந்தத் திரைப்படத்தில் அவர் செய்திருந்த துணிச்சலான கதாபாத்திரம் ஆர்ப்பாட்டமான தர்க்கத்தை வெளிப்படையாக உருவாக்கியது.

ஸக்மி டில் லுக்குப் (1994) பின்னர் 2003 ஆம் ஆண்டு தோல்வியடைந்த மர்மத் திரைப்படமான குச் டு ஹை வெளிவரும்வரை வேறெந்தத் திரைப்படத்திலும் அவர் நடிக்கவில்லை. அவரின் அம்மா பெற்ற வெற்றியை அவர் ஒருபோதும் எட்டிப்பிடிக்க இயலவில்லை. அவரின் அம்மா கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக பெங்காலி திரைப்படங்களின் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார்.

திரைப்படத் துறையில் நுழையும் முன்னரும் நுழைந்த பின்னரும் சில மாதிரியாக்கப் பணிகளில் அவர் தனியாக (அல்லது தனது மகள்களுடன்) தோன்றினார். குறிப்பிடும்படியாக அவர் சோப்பு விளம்பரங்களில் [2] பரணிடப்பட்டது 2007-05-21 at the வந்தவழி இயந்திரம் மாடலாக இருந்தார். அவ்விளம்பரங்கள் 1980 ஆம் ஆண்டுகளில் முற்றிலும் தர்க்கத்துக்கு உரியதாக இருந்தன.[சான்று தேவை]. தொலைக்காட்சித் தொடர்கள் சிலவற்றில் நடிப்பது தவிர அவர் இரண்டு பெங்காலி தொலைக்காட்சித் திரைப்படங்களிலும் நடித்தார்.

சென் 70 வயதில்கூட அனைத்தையும் வெளிப்படுத்துவாரெனக் கூறினார். "வயது முக்கியத்துவமற்றது, மனப்பான்மைதான் முக்கியமானது. சோபியா உச்ச அளவான அழகான பெண். அவர் அதுபோன்ற படத்தில் இப்போதும்கூட அழகாகவே தெரிவார். ஆனால் தன்னிறைவுடன் அழகை வெளியே கொண்டுவரக்கூடிய ரேகா மற்றும் ஹேமா மாலினி போன்ற அழகான பெண்கள் இந்தியாவிலும் உள்ளனர். உண்மையில் படப்பிடிப்பானது கலையுணர்வுடனும், ரசிப்புடனும் எடுக்கப்படுகிறது என்றால் நான் என்னைப் பற்றிக் கவனத்தில் எடுக்க மாட்டேன்."[4]

அவர் தனது இளைய மகள் ரியாவுடன் 2000 ஆம் ஆண்டில் ஒரு திரைப்படத்தில் நடித்ததுபோல இப்போது ஒரு சில திரைப்படங்களையே செய்கிறார்.[3]. பெங்காலி மொழியில் விரிவாக ஒரு சமையல் புத்தகத்தையும் அவர் எழுதுகிறார். அது இன்னமும் வெளியிடப்படவில்லை. சமீபத்தில் அவர் எப்போதாவது தனித்துத் தோன்றுதல் அல்லது அவரது குடும்பத்துடன், இந்திய செய்தித்தாள்களின் பக்கம் 3 பிரிவுகளிலும் கூட, வழக்கமாக போலோ நிகழ்வுகளில் அல்லது திரைப்படம் சம்பந்தமான நிகழ்வுகளில் மற்றும் புதிய உணவகங்களை விளம்பரப்படுத்தத் தோன்றியுள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

மூன் மூன் சென் திரிபுரா மாநிலத்தின் அரச குடும்பத்தின் வழிவந்த பாரத் தேவ் வர்மாவை 1978 ஆம் ஆண்டில் திருமணம் செய்தார். அவர்களுக்கு நடிகைகளான ரீமா சென் மற்றும் ரியா சென் ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். தனது வாழ்க்கைத் தொழிலான நடிப்புத் தொழிலுக்கு சீரான ஆதரவு வழங்கியதற்காக சென் தனது கணவர் மீது உயர்ந்த மரியாதை வைத்துள்ளார்.[3]

அவரது காலஞ்சென்ற மாமியாரான, இள தேவி கூச் பீஹாரின் இளவரசி மற்றும் ஜெய்ப்பூர் மகாராணியான காயத்ரி தேவியின் மூத்த சகோதரியுமாவார்.

விருதுகள்

தொகு

சென் நந்தி மாநில விருது, காலகேந்திர திரை விருது மற்றும் பாரத் நிர்மன் விருது போன்ற விருதுகளைப் பெற்றார்.

திரைப்பட விவரங்கள்

தொகு

தமிழ் திரைப்பட விவரங்கள்

தொகு
 • 12B (2001) ஜோவின் அம்மா வாக

தெலுங்கு திரையுலகம்

தொகு
 • சிறிவெண்ணிலா (1986) ... ஜோதிர்மயி
 • நாகர்ஜுனாவுடன் மஜ்னு

பாலிவுட்

தொகு
 • கோரஸ் (1974)
 • ஆண்டர் பாஹர் (1984) ... ரீமா
 • முசஃபீர் (1986)
 • மொகப்பட் கி கசாம் (1986) .... ராதா
 • ஜால் (1986)
 • ஷீஷா (1986) ... மனிஷா பிரகாஷ்
 • பையார் கி ஜீட் (1987) ... ராணி சகிபா
 • மஜ்னு (1987)
 • அமர் கண்டக் (1987)
 • மாஷுகா (1987)
 • கூ பீர் ஆயெகி (1988)
 • பி லகாம் (1988)
 • மில் கயே மன்ஜில் முஜ்ஹே (1989)
 • டெரி பினா க்யா ஜீனா (1989)
 • எக் டின் அசனக் (1989)
 • அப்னா டேஷ் பரயி லாக் (1989)
 • பாதர் கெ இன்சன் (1990) ... டான்சர்
 • லெகின் (1990) ... பம்மி
 • ஜீவன் எக் சங்கர்ஷ் (1990)
 • பாகார் ஆனே ரக் (1990) ... ரேணு
 • 100 டேய்ஸ் (1991) ... ராமா
 • இராடா (1991)
 • விஷ்கன்யா (1991) ... சோனல் விக்ரம் சிங்
 • வக்ட் கா பாட்ஷா (1992)
 • ஹிரர் அங்டி (1992)
 • ஷக்மி ரோ (1993) ... சீமா/ரீமா
 • ஸக்மி டில் (1994) ... மாலா
 • குச் தோ ஹை (2003) .. மேடம் செஷினா
 • நில் நிர்ஜனே (2003)
 • லவ் அட் டைம்ஸ் ஸ்குயார் (2003) ... ஸ்வீட்டியின் அம்மா
 • Taj Mahal: A Monument of Love (2003)
 • போ பாராக்ஸ் ஃபார்எவர் (2007) ... ரோசி

பெங்காலி திரைப்படவிவரம்

தொகு
 • பைடுரையா ரகசியா
 • ராஜ்பாடு
 • பையபொடன்
 • ருமி கடொ சுந்தர்
 • கஜமுகுட்டா (1991)
 • அஞ்சலி
 • அஜண்டே
 • மகாஷய்
 • ராஜ்ஷ்வரி
 • அபொன் கோரி
 • சோபன் (1994)
 • டுமி கட்டோ சுந்தர்
 • பூஜாரினி
 • நீல் நிர்ஜனே
 • போய் டுர்ஜொ ரா ஹொஸ்ஷொ
 • [(அன்டெரால்—கைரொஞ்ஜீட்)]

தெலுங்கு திரைப்படவிவரம்

தொகு
 • சிறிவெண்ணிலா

சந்தனக்கட்டை கன்னட திரைப்படத் துறை

தொகு
 • யுகபுருஷா ரவிச்சந்திரன்

குறிப்புதவிகள்

தொகு

புற இணைப்புகள்

தொகு

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் மூன் மூன் சென்

கூடுதல் வாசிப்பு

தொகு
 • சோமா எ. சட்டர்ஜி. "மூன் மூன் சென்: பாக் இன் தி ஸ்பாட்லைட்", திரை (இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுவின் பகுதி), 24 நவம்பர் 2000. தனது தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிக் கலந்துரையாடிய மூன் மூன் சென்னுடனான நேர்காணலை அடிப்படையாகக் கொண்ட கட்டுரை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்_மூன்_சென்&oldid=3944615" இலிருந்து மீள்விக்கப்பட்டது