மூலாம்பில்லித் தீவு

மூலாம்பில்லித் தீவு (Moolampilly) இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள கொச்சி நகரத்தைச் சேர்ந்த பல தீவுகளில் ஒன்றாகும். கொச்சி நகரத்திற்கு அருகில் உள்ள இத்தீவை பெரியாறு ஆறு சூழ்ந்துள்ளது. எர்ணாகுளம் மாவட்டம், கனாயண்ணூர் தாலுக்காவில் உள்ள கதாமக்குடி கிராம பஞ்சாயத்தின் ஒரு பகுதியாக மூலாம்பில்லித் தீவு கருதப்படுகிறது. கையால் செய்யப்படும் மட்பாண்டங்களுக்கும், தந்தூரி அடுப்புகளுக்கும் மூலாம்பல்லித் தீவு மிகவும் புகழ் பெற்றுள்ளது. மூலாம்பில்லி களிமண் சங்கம் 1962 ஆம் ஆண்டில் இங்கு உருவாக்கப்பட்டது [1]

சீன மீன் வலைகள்
மூலாம்பில்லி
Moolampilly
கிராமம்
ஆள்கூறுகள்: 10°02′22″N 76°15′50″E / 10.03943°N 76.26384°E / 10.03943; 76.26384
நாடு இந்தியா
மாநிலம்கேரளா
மாவட்டம்எர்ணாகுளம்
தாலுகாகள்கனாயண்ணூர்
அரசு
 • நிர்வாகம்கதாமக்குடி பஞ்சாயத்து
மொழிகள்
 • அலுவல்பூர்வம்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
அ.கு.எண்682027
தொலைபேசி குறியீடு0484
மக்களவை தொகுதிஎர்ணாகுளம்
அருகிலுள்ள நகரம்எர்ணாகுளம்/கொச்சி

வல்லர்பாடம் இடமாற்று கொள்கலன் முனைத் திட்டத்திற்காக மூலாம்பல்லித் தீவைச் சேர்ந்த பல குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர். 6 சூன் 2011 அன்று இவர்களின் புனர்வாழ்வுப் பணிகள் தொடர்பான அனைத்து நிலுவைகளையும் வழங்கி மாநில அரசு இப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டது [2].

இத்தீவு மக்களை முக்கிய நிலப்பகுதிகளுடன் இனைக்கும் மூலாம்பில்லி-பிழாலா மேம்பாலம் உள்ளிட்ட நான்கு பாலங்கள் இங்கு கட்டப்பட உள்ளன [3].

மேற்கோள்கள் தொகு

  1. Moolampilly Earthenpots
  2. "Moolampilly rehabilitation package". Archived from the original on 2014-03-10. பார்க்கப்பட்ட நாள் 2017-08-14.
  3. Bridge to mainland
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூலாம்பில்லித்_தீவு&oldid=3568365" இலிருந்து மீள்விக்கப்பட்டது