மூவெத்தில் சிட்ரேட்டு
மூவெத்தில் சிட்ரேட்டு (Triethyl citrate) என்பது சிட்ரிக் அமிலத்தின் ஓர் எசுத்தர் ஆகும். C12H20O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் இது விவரிக்கப்படுகிறது. நிறமற்ற மணமற்ற நீர்மமான மூவெத்தில் சிட்ரேட்டு ஐ1505 என்ற எண்ணிடப்பட்டு ஓர் உணவு சேர்க்கைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.[4] நுரைகளை நிலைநிறுத்துவதற்கு, குறிப்பாக முட்டையின் வெள்ளைக்கருவை அடித்து நிலைநிறுத்தவும் மருந்துகளின் மேற்பூச்சுககாகவும் நெகிழிகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது.[5]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
மூவெத்தில் 2-ஐதராக்சிபுரோப்பேன்-1,2,3-முக்கார்பாக்சிலேட்டு | |
வேறு பெயர்கள் | |
இனங்காட்டிகள் | |
77-93-0 | |
ChEMBL | ChEMBL464988 |
ChemSpider | 13850879 |
EC number | 201-070-7 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6506 |
| |
UNII | 8Z96QXD6UM |
பண்புகள் | |
C12H20O7 | |
வாய்ப்பாட்டு எடை | 276.283 கி/மோல் |
தோற்றம் | Oily liquid |
அடர்த்தி | 1.137 கிராம்/மி.லி 25 °செல்சியசில் |
உருகுநிலை | −55 °C (−67 °F; 218 K)[3] |
கொதிநிலை | 294 °C (561 °F; 567 K) 1 வளிமண்டல் அழுத்தத்தில் 235 ° செல்சியசு 150 மி.மீ பாதரசம் |
65 கி/லிட்டர்[3] | |
-161.9·10−6செ.மீ3/மோல் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பாலிவினைல் குளோரைடு மற்றும் அதையொத்த நெகிழிகளுக்கு ஒரு நெகிழியாக்கியாகவும் மூவெத்தில் சிட்ரேட்டு பயன்படுத்தப்படுகிறது.[6] புகையிலையை புகைக்கும் அனுபவத்தை கொடுக்கப் பயன்படும் நிகோடின் அடிப்படையிலான நீர்மத்தைக் கொண்ட சிகரெட் வடிவ சாதனங்களில் போலி பால்மமாக்கியாக இதை பயன்படுத்துகிறார்கள்.[7] உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் லெசித்தின் போன்றே மூவெத்தில் சிட்ரேட்டு செயல்படுகிறது, ஆனால் லெசித்தினிடம் இல்லாத ஆவியாதல் சாத்தியம் இச்சேர்மத்தில் உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Triethyl citrate at Sigma-Aldrich
- ↑ பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் (2014). Nomenclature of Organic Chemistry: IUPAC Recommendations and Preferred Names 2013. The Royal Society of Chemistry. p. 747. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1039/9781849733069. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85404-182-4.
- ↑ 3.0 3.1 Record of Triethyl citrate in the GESTIS Substance Database of the Institute for Occupational Safety and Health
- ↑ William J. Stadelman; Owen J. Cotterill (1995). Egg Science and Technology. Haworth Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56022-855-5.
- ↑ Pharmaceutical Coatings Bulletin 102-4, morflex.com
- ↑ Hwan-Man Park; Manjusri Misra; Lawrence T. Drzal; Amar K. Mohanty (2004). ""Green" Nanocomposites from Cellulose Acetate Bioplastic and Clay: Effect of Eco-Friendly Triethyl Citrate Plasticizer". Biomacromolecules 5 (6): 2281–2288. doi:10.1021/bm049690f. பப்மெட்:15530043.
- ↑ Erythropel, Hanno C; Anastas, Paul T; Krishnan-Sarin, Suchitra; O'Malley, Stephanie S; Jordt, Sven Eric; Zimmerman, Julie B (2020-04-27). "Differences in flavourant levels and synthetic coolant use between USA, EU and Canadian Juul products" (in en). Tobacco Control: tobaccocontrol–2019–055500. doi:10.1136/tobaccocontrol-2019-055500. பன்னாட்டுத் தர தொடர் எண்:0964-4563. பப்மெட்:32341193.