மெக்தாப் (நடிகை)
மெக்தாப் (Mehtab) (1913-1997)இந்தி / உருது படங்களில் நடித்த இந்திய நடிகையாவார். இவர் 1928 முதல் 1969 வரை பணியாற்றினார்.[1] இவர் குசராத்தின் சாச்சினில் ஒரு முஸ்லிம் குடும்பத்தில், நஜ்மா என்ற பெயரில் பிறந்தார். இவரது தந்தை, நவாப் சித்தி மூன்றாம் இப்ராகிம் முகமது யாகுத் கான், குசராத்து மாநிலத்தில் சூரத்து நகர் அருகேயுள்ள சாச்சினின் நவாப் ஆவார்.[2] 1920களின் பிற்பகுதியில், செகண்ட் ஒய்ப் (1928), இந்திரா பி.ஏ. (1929), ஜெயந்த் (1929) போன்ற படங்களில் ஒரு சிறிய பாத்திரங்களுடன் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் வீர் குணால் (1932) என்ற படத்தில் அசரப் கானுக்கு இணையாக நடிப்பதற்கு முன்பு குணச்சித்திர வேடங்களில் நடித்தார். முக்கியமாக அதிரடி சார்ந்த பாத்திரங்களைச் செய்து கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, கிதார் சர்மா இயக்கிய சித்ரலேகா (1941) படத்தில் இவர் முக்கியத்துவம் பெற்றார்.
மெக்தாப் | |
---|---|
பிறப்பு | நஜ்மா கான் 28 ஏப்ரல் 1913 சாச்சின், குசராத்து, இந்தியா |
இறப்பு | 10 ஏப்ரல் 1997 மும்பை, மகாராட்டிரம் | (அகவை 83)
கல்லறை | மும்பை |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1928–1969 |
வாழ்க்கைத் துணை | அசரப் கான், முதல் திருமணம்/விவாகரத்து சோரம் மோடி, இரண்டாவது திருமணம் (1946) |
பிள்ளைகள் | 2 மகன்கள் |
இவர் தனது ஆரம்பகால நடிகர் அசரப் கானை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன் இருந்தார். இவர்கள் பின்னர் விவாகரத்து செய்தனர். பின்னர், இவர் 1946இல், நடிகர் சோராப் மோடியை இரண்டாவதாக மணந்தார். ஜான்சி கி ராணி (1953) என்ற வரலாற்று நாடகத்தில் மோடி நடித்திருந்தார். இது அற்புதமான காட்சிகளையும் ஆடம்பரமான அரங்கங்களையும் கொண்டிருந்தாலும் திரையரங்கங்களில் வசூல் ஈட்ட முடியவில்லை. மெக்தாப், மோடியின் சமே படா பல்வன் (1969) படத்தில் ஒரு கதாபாத்திரக் கலைஞராக தனது கடைசி வேடத்தில் நடித்ததைத் தவிர 1953 -ஐத் தொடர்ந்து படங்களில் நடிப்பதை நிறுத்தினார். இவர் 10 ஏப்ரல் 1997 அன்று மும்பையில் இறந்தார்.[3]
தொழில்
தொகுமெக்தாப், தனது ஆரம்பகால திரைப்படமான கமல்-இ-ஷம்ஷீர் (1930) படத்தில் வசீர் முகமது கானுடன் நடித்தார். இது இவரது தாயார் 'எக்செல்சியர்' என்ற திரைப்பட நிறுவனத்தின் கீழ் தயாரித்தத் திரைப்படமாகும்.[2] இந்த நேரத்தில் (1930), ரூபி மியர்சு, ஜல் மெர்ச்சன்ட், மஜார் கான் ஆகியோர் நடித்த ஹமாரா ஹிந்துஸ்தான் என்ற ஒரு ஊமைத் திரைப்படத்தில் நடித்தார்.[4] இவர் பல்வேறு படங்களில் முக்கியமாக சாரதா திரைப்பட நிறுவனம் தயாரித்த அதிரடி வேடங்களில் நடித்தார். இறுதியாக 1932ஆம் ஆண்டில், இந்தியன் ஆர்ட் புரொடக்சன்ஸ் என்ற பதாகையின் கீழ் வீர் குணால் படத்தில் முக்கிய பெண் கதாபாத்திரத்தில் அஷ்ரப் கானுக்கு இணையாக நடித்தார்.[2] சந்துலால் ஷாவின் ரஞ்சித் மூவிடோனுக்காக ஜெயந்த் தேசாய் இயக்கிய போலா ஷிகா (1933) படம் உட்பட பல்வேறு நிறுவனங்களின் கீழ் இவர் தொடர்ந்து பணியாற்றினார். 1937இல் ஜதன்பாய் இயக்கிய மோதி கா ஹார், ஜீவன் ஸ்வப்னா போன்ற ஓரிரு படங்களிலும் நடித்தார்.[5]
சொந்த வாழ்க்கை
தொகுஒரு முஸ்லிமான மெக்தாப், பார்சி இனத்தவரான சோராப் மோடியை, 28 ஏப்ரல் 1946 அன்று தனது பிறந்த நாளன்று மணந்தார்.[6] மெக்தாப்பின் கூற்றுப்படி, இந்த திருமணத்திற்கு மோடியின் குடும்பத்தினர் ஒப்புதல் அளிக்கவில்லை.[1] இது இவரது இரண்டாவது திருமணமாகும். மேலும், நடிகர் அசரப் கானுடனான முதல் திருமணத்தின் மூலம் இவருக்கு இசுமாயில் என்ற எட்டு வயது மகன் இருந்தார். இவரைவிட 20 வயது மூத்தவரான மோடி 46 வயதில் தனது முதல் மனைவி நசீம் பானுவுடனான உறவை முடித்துக் கொண்டிருந்தார். இவர்களுக்கு மெகல்லி என்ற ஒரு மகன் பிறந்தான். அதனை பார்சியாக வளர்த்தனர். சோராப் மோடி 28 ஜனவரி 1984 அன்று 85 வயதில் இறந்தார். மெக்தாப் 10 ஏப்ரல் 1997 அன்று மகாராட்டிராவின் மும்பையில் இறந்தார்.[2][3]
விருதுகள்
தொகு8 வது வருடாந்திர வங்காள திரைப்பட பத்திரிகையாளர் சங்க விருதுகளில் பராக் படத்திற்காக இந்திப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Yesteryear actress Mehtab remembers her husband Sohrab Modi". cineplot.com. Cineplot.com. பார்க்கப்பட்ட நாள் 25 December 2014.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Mehtab-biography". cinegems.in. Cinegems.in. Archived from the original on 25 December 2014. பார்க்கப்பட்ட நாள் 25 December 2014.
- ↑ 3.0 3.1 "People-Mehtab". muvyz.com. Muvyz, Inc. பார்க்கப்பட்ட நாள் 25 December 2014.
- ↑ "Hamara Hindustan". Chiloka.com. பார்க்கப்பட்ட நாள் 25 December 2014.
- ↑ "Person Detail-Mehtab". citwf.com. Alan Goble. பார்க்கப்பட்ட நாள் 25 December 2014.
- ↑ "Founders-Sohrab Modi". Film and TV Guild India. Archived from the original on 30 March 2015. பார்க்கப்பட்ட நாள் 25 December 2014.
- ↑ "BFJA Award winners 1945". bfjaaward.com. Bengal Film Journalists' Association. Archived from the original on 27 December 2014. பார்க்கப்பட்ட நாள் 27 December 2014.