மெத்தடோன்
மெத்தடோன் (Methadone) என்பது ஒரு வலி நிவாரணி ஆகும்.இது டோலோபைன் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.இது ஒரு போதை மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஓபியோடைட் வலி மற்றும் பராமரிப்பு சிகிச்சையாகவும் அல்லது ஓபியோடைட்டால் மெலிந்தவர்களுக்கு உதவுவதற்காகவும் பயன்படுத்தப்பட்டது. மெத்தடோனைப் பயன்படுத்தி உடலில் உள்ள நச்சுத்தன்மையை ஒரு மாதத்திற்கும் குறைவாகவோ அல்லது ஆறு மாதங்கள் வரை படிப்படியாகவோ நீக்க முடியும். ஒற்றை டோஸ் விரைவான விளைவைக் கொண்டிருக்கும்போது, அதிகபட்சமாக ஐந்து நாட்களுக்கு பயன்படுத்தலாம். ஒரு ஒற்றை டோஸானது சாதாரண கல்லீரல் செயல்பாடு கொண்ட மக்களின் நீண்ட கால பயன்பாட்டிற்கு பின்னர் ஆறு மணி நேரம் கடந்த பிறகே விளைவுகளை ஏற்படுத்தும். மெத்தடோன் வழக்கமாக வாய்மூலம் எடுத்துக்கொள்ளப்படுகிறது சிலசமயங்களில் தசை அல்லது நரம்பு ஊசி மூலம் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
---|---|
(RS)-6-(dimethylamino)-4,4-diphenylheptan-3-one | |
மருத்துவத் தரவு | |
வணிகப் பெயர்கள் | Dolophine, Methadose, ஏனையவை |
AHFS/திரக்ஃசு.காம் | ஆய்வுக் கட்டுரை |
மெட்லைன் ப்ளஸ் | a682134 |
கட்டுப்பாட்டு உரிமத் தரவு | US Daily Med:link |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | C(AU) C(US) |
சட்டத் தகுதிநிலை | Controlled (S8) (AU) Schedule I (CA) ? (UK) Schedule II (அமெரிக்கா) |
வழிகள் | வாய் மூலம், நரம்பு, உட்செலுத்துதல், அடிநாக்கின்கீழ், மலக்குடல் |
மருந்தியக்கத் தரவு | |
உயிருடலில் கிடைப்பு | 15-20% தோலடி[1] |
புரத இணைப்பு | 85–90%[1] |
வளர்சிதைமாற்றம் | கல்லீரல் (CYP3A4, CYP2B6, CYP2D6)[1][2] |
அரைவாழ்வுக்காலம் | 15 முதல் 55 மணி[2] |
கழிவகற்றல் | சிறுநீர், மலம்[2] |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 76-99-3 |
ATC குறியீடு | N02AC52 N07BC02 QN02AC90 |
பப்கெம் | CID 4095 |
IUPHAR ligand | 5458 |
DrugBank | DB00333 |
ChemSpider | 3953 |
UNII | UC6VBE7V1Z |
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் | D08195 |
ChEBI | [1] |
ChEMBL | CHEMBL651 |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C21 |
மெத்தடோனின் பக்க விளைவுகள் பிற ஓபியாய்டுகளின்பக்க விளைவுகளை ஒத்தவை. பொதுவாக இவை மயக்கம், தூக்கம், வாந்தி, வியர்வை. கடுமையான அபாயங்கள், ஓபியோய்ட் முறையற்ற பயன்பாடு மற்றும் சுவாசப்பிரச்சினைகளை உள்ளடக்கியது. அசாதாரண இதய துடிப்புகளும் ஏற்படலாம். 2011 இல் அமெரிக்காவில் மெத்தடோன் நச்சு சம்பந்தப்பட்ட இறப்பு எண்ணிக்கை 4,418 ஆகும், இது ஓபியோடைட் நச்சுத்தன்மையிலிருந்து மொத்த இறப்புகளில் 26% ஆகும்.மெத்தடோன் பயன்பாட்டினால் அதிக அளவிலான அபாயங்கள் உள்ளன. மெத்தடோன் இரசாயனத் தொகுப்பினால் தயாரிக்கப்படுகிறது மற்றும் ஓபியோட் பெற்றுக்கொள்ளும் தன்மையாக செயல்படுகிறது. மெத்தடோன் 1937 முதல் 1939 வரை ஜெர்மனியில் குஸ்டாவ் எர்ஹார்ட் மற்றும் மேக்ஸ் பாக்முஹல் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. இது 1947 இல் அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்டது. மெத்தடோன் உலக சுகாதார அமைப்பின் அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் உள்ளது,இது ஆரோக்கியமான முறையிலான மிகவும் பயனுள்ள மற்றும் பாதுகாப்பான மருந்தாகும். 2013 ஆம் ஆண்டில் உலகளவில் 41,400 கிலோகிராம் உற்பத்தி செய்யப்பட்டது. இது மற்ற போதை மருந்துகளை போலவே செயல்படுகிறது. இது அமெரிக்காவில் எளிய விலையில் கிடைக்கக்கூடிய மருந்தாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Anaheim, OM; Moksnes, K; Borchgrevink, PC; Kaasa, S; Dale, O (August 2008). "Clinical pharmacology of methadone for pain.". Acta Anaesthesiologica Scandinavica 52 (7): 879–89. doi:10.1111/j.1399-6576.2008.01597.x. பப்மெட்:18331375.
- ↑ 2.0 2.1 2.2 Brown, R; Kraus, C; Fleming, M; Reddy, S (November 2004). "Methadone: applied pharmacology and use as adjunctive treatment in chronic pain.". Postgraduate Medical Journal 80 (949): 654–9. doi:10.1136/pgmj.2004.022988. பப்மெட்:15537850. பப்மெட் சென்ட்ரல்:1743125. http://pmj.bmj.com/content/80/949/654.full.pdf.
வெளி இணைப்புகள்
தொகு- "Methadone". Drug Information Portal. U.S. National Library of Medicine.
- Methadone, Substance Abuse and Mental Health Services Administration, U.S. Department of Health and Human Services
- Tapering off of methadone maintenance