மெத்தில் பென்சோயேட்டு
மெத்தில் பென்சோயேட்டு ( Methyl benzoate ) ஒரு கரிமச் சேர்மம் ஆகும். C6H5CO2CH3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒர் எசுதரான இச்சேர்மம் நிறமற்றதாகவும் நீரில் குறைந்த அளவில் கரையக்கூடியதாகவும் உள்ளது. பெய்யோவா மரத்தின் பழத்தை நினைவூட்டும், இனிய மணம் கொண்டு கரிமக் கரைப்பான்களுடன் கலக்கக் கூடியதாக உள்ளது. நறுமணப் பொருளாகப் மெத்தில் பென்சோயேட்டைப் பயன்படுத்துகிறார்கள். மேலும் இது ஒரு கரைப்பானாகவும், ஆர்க்கிட் ஈ போன்ற பூச்சிகளை கவர்ந்திழுக்கும் பூச்சிக் கொல்லியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
மெத்தில் பென்சோயேட்டு
| |
இனங்காட்டிகள் | |
93-58-3 | |
ChEMBL | ChEMBL16435 |
ChemSpider | 6883 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 7150 |
| |
UNII | 6618K1VJ9T |
பண்புகள் | |
C8H8O2 | |
வாய்ப்பாட்டு எடை | 136.15 g·mol−1 |
அடர்த்தி | 1.0837 கி/செ.மீ3 |
உருகுநிலை | −12.5 °C (9.5 °F; 260.6 K) |
கொதிநிலை | 199.6 °C (391.3 °F; 472.8 K) |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.5164 |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | ScienceLab MSDS |
தீப்பற்றும் வெப்பநிலை | 82 °C (180 °F; 355 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பும் வினைகளும்
தொகுவலிமையான ஐதரோகுளோரிக் அமிலத்தின் முன்னிலையில் மெத்தனாலுடன் பென்சாயிக் அமிலம் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தினால் மெத்தில்பென்சோயேட்டு உருவாகிறது[1]. மூலக்கூற்று கட்டமைப்பின் எசுத்தர் பகுதி, வளையப் பகுதி ஆகிய இரண்டு பகுதிகளிலும் மெத்தில் பென்சோயேட்டு வினையில் ஈடுபடுகிறது. அமில வினையூக்க நைட்ரோ ஏற்ற வினையில் நைட்ரிக் அமிலத்துடன் வினைபுரிந்து மெத்தில்-3-நைட்ரோபென்சோயேட்டைத் தருகிறது. மேலும், கூடுதல் நீரிய சோடியம் ஐதராக்சைடுடன் நீராற்பகுப்பு வினையில் ஈடுபட்டு மெத்தனாலையும் சோடியம் பென்சோயெட்டையும் கொடுக்கிறது. நீர்த்த ஐதரோ குளோரிக் அமிலத்தை இதனுடன் சேர்த்து அமிலமாக்கல் மூலம் பென்சாயிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது.
தோற்றம்
தொகுசால்வினியா மொலெசுடா[2] என்ற நன்னீர் பெரணியில் இருந்து மெத்தில் பென்சோயேட்டு தனித்துப் பிரிக்கப்படுகிறது. ஆண் தேனீக்களின் பல்வேறு இனங்களையும் கவர்ந்திழுத்து இனச்சேர்க்கைக்குத் தூண்டக்கூடிய பல சேர்மங்களுள் இதுவும் ஒன்றாகும். ஆய்வு மேற்கொள்வதற்காக தேனீக்களை திரட்டிச் சேகரிக்க ஒரு தூண்டில் இரையாக இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது[3].
கோகோயின் ஐதரோகுளோரைடு ஈரக்காற்றில் நீராற்பகுப்பு அடைந்து மெத்தில் பென்சோயேட்டைக் கொடுக்கிறது;[4]. மெத்தில் பென்சோயேட்டின் மணத்தைக் கண்டறிய மோப்பநாய்கள் பயிற்சியளிக்கப்படுகின்றன[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ John McMurry (2008). Organic Chemistry, 7th Edition. Thompson - Brooks/Cole. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4390-4972-6.. Page 623
- ↑ Choudhary, MI; Naheed, N; Abbaskhan, A; Musharraf, SG; Siddiqui, H; Atta-Ur-Rahman (2008). "Phenolic and other constituents of fresh water fern Salvinia molesta". Phytochemistry 69 (4): 1018–23. doi:10.1016/j.phytochem.2007.10.028. பப்மெட்:18177906.
- ↑ Schiestl, F.P.; Roubik, D.W. (2003). "Odor Compound Detection in Male Euglossine Bees". Journal of Chemical Ecology 29 (1): 253–257. doi:10.1023/A:1021932131526. பப்மெட்:12647866.
- ↑ Dejarme, Lindy E.; Gooding, Rachel E.; Lawhon, Sara J.; Ray, Prasenjit; Kuhlman, Michael R. (1997). "Formation of methyl benzoate from cocaine hydrochloride under different temperatures and humidities". in Works, George; Rudin, Leonid I; Hicks, John et al.. Proceedings of SPIE. SPIE Proceedings. 2937. பக். 19. doi:10.1117/12.266783.
- ↑ Waggoner, L. Paul; Johnston, James M.; Williams, Marc; Jackson, Jan; Jones, Meredith H.; Boussom, Teresa; Petrousky, James A. (1997). "Canine olfactory sensitivity to cocaine hydrochloride and methyl benzoate". in Works, George; Rudin, Leonid I; Hicks, John et al.. Proceedings of SPIE. SPIE Proceedings. 2937. பக். 216. doi:10.1117/12.266775.