மெத்தில் முப்புளோரோமெத்தேன்சல்போனேட்டு
மெத்தில் முப்புளோரோமெத்தேன்சல்போனேட்டு (Methyl trifluoromethanesulfonate) C2H3F3O3S என்ற வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிமச் சேர்மம் ஆகும். நிறமற்ற நீர்மமான இச்சேர்மம் வேதியியலில் ஒரு மெத்திலேற்றும் முகவராகச் செயல்படுகிறது. அதிக சக்தி வாய்ந்தது என்றும் அதிக அபாயம் கொண்டது என்றும் இம்மெத்திலேற்றும் முகவர் கருதப்படுகிறது[1]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
மெத்தில் டிரைபுளோரோமெத்தேன்சல்போனேட்டு
| |
வேறு பெயர்கள்
மெத்தில் டிரைபுளோரோமெத்தேன்சல்போனிக் அமிலம்
மெத்தில் எசுத்தர் மெத்தில் திரிப்ளேட்டு | |
இனங்காட்டிகள் | |
333-27-7 | |
ChemSpider | 9153 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 9526 |
| |
பண்புகள் | |
C2H3F3O3S | |
வாய்ப்பாட்டு எடை | 164.10 கி/மோல் |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 1.496 கி/மி.லி |
உருகுநிலை | −64 °C (−83 °F; 209 K) |
கொதிநிலை | 100 °C (212 °F; 373 K) |
நீராற்பகுப்பு அடையும் | |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | அரிக்கும் |
R-சொற்றொடர்கள் | R10, R34 |
S-சொற்றொடர்கள் | S26, S36/37/39, S45 |
தீப்பற்றும் வெப்பநிலை | 38 °C (100 °F; 311 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வினை
தொகுதண்ணீருடன் சேரும் போது இச்சேர்மம் தீவிரமான நீராற்பகுப்புக்கு உட்படுகிறது.
- CF3SO2OCH3 + H2O → CF3SO2OH + CH3OH
பழமையானதும் அதிகமாக பயன்படுத்தப்படாததுமான மெத்தில் புளோரோ சல்போனேட்டு (FSO2OCH3) என்ற மெத்திலேற்றும் முகவருடன் இச்சேர்மம் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது.மெத்தில் அயோடைடு போன்ற பாரம்பரிய மெத்திலேற்றும் முகவர்களை விட இச்சேர்மங்கள் அதிக வேகத்தில் ஆல்கைலேற்றம் செய்கின்றன.
(CH3)3O+ > CF3SO2OCH3 ≈ FSO2OCH3 > (CH3)2SO4 > CH3I(CH3)3O+ > CF3SO2OCH3 ≈ FSO2OCH3 > (CH3)2SO4 > CH3I என்பது மெத்திலேற்றும் முகவர்கள் தொடர்பான ஒரு தரவரிசையாகும். காரத்தன்மை குறைந்த வேதி வினைக்குழுக்களான ஆல்டிகைடுகள், அமைடுகள், நைட்ரைல்கள் போன்றனவற்றை மட்டும் இச்சேர்மம் ஆல்கைலேற்றம் செய்கிறது. பென்சீன் அல்லது பெரிய மூலக்கூறுகளான இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை பியூட்டைல் பிரிடின்களை இது மெத்திலேற்றம் செய்வதில்லை[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Roger W. Alder, Justin G. E. Phillips, Lijun Huang, Xuefei Huang, "Methyltrifluoromethanesulfonate" Encyclopedia of Reagents for Organic Synthesis 2005 John Wiley & Sons, எஆசு:10.1002/047084289X.rm266m.pub2