மெத்தில் லாக்டேட்டு

வேதிச்சேர்மம்

மெத்தில் லாக்டேட்டு (Methyl lactate) என்பது C4H8O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். லாக்டிக் அமிலத்தின் மெத்தில் எசுத்தராக இச்சேர்மம் அறியப்படுகிறது. லாக்டிக் அமிலமும் மெத்தனாலும் வினைபுரிவதால் இந்த ஒற்றைக்கார எசுத்தர் உருவாகிறது. லாக்டேட்டு எசுத்தர் தொகுதியைச் சேர்ந்த மெத்தில் லாக்டேட்டு பொதுவாக ஒரு கரைப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது. நச்சுத்தன்மையற்றதாகவும், உடனடியாகவும் அதிகமாகவும் மக்கி அழியும் சேர்மம் இதுவெனவும் கருதப்படுகிறது[1].

மெத்தில் லாக்டேட்டு
Methyl DL-Lactate
மெத்தில் L-லாக்டேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
மெத்தில் 2-ஐதராக்சிபுரோபனோயேட்டு
வேறு பெயர்கள்
2-ஐதராக்சி- மெத்தில் எசுத்தர் புரோபனாயிக் அமிலம்; 2-ஐதராக்சி புரோப்பனாயிக் அமிலம்,மெத்தில் எசுத்தர்;லாக்டிக் அமில மெத்தில் எசுத்தர்
இனங்காட்டிகள்
547-64-8 (racemate)(L-isomer Y
27871-49-4 (L-isomer) Y
17392-83-5 (D-isomer) Y
ChemSpider 13839235 Y
InChI
  • InChI=1S/C4H8O3/c1-3(5)4(6)7-2/h3,5H,1-2H3
    Key: LPEKGGXMPWTOCB-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11040
வே.ந.வி.ப எண் OD5670000
  • CC(C(=O)OC)O
பண்புகள்
C4H8O3
வாய்ப்பாட்டு எடை 104.11 g·mol−1
தோற்றம் நிறமற்ற தெளிவான திரவம்
அடர்த்தி 1.093 கி/செ.மீ3
உருகுநிலை −66 °C (−87 °F; 207 K)
கொதிநிலை 144 முதல் 145 °C (291 முதல் 293 °F; 417 முதல் 418 K)
கலக்கும்
எத்தனால்
ஆல்ககால்களில் கரையும்-இல் கரைதிறன்
கலக்கும்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் எரிச்சலூட்டி (Xi)
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் MSDS [1]
ஈயூ வகைப்பாடு Irritant Xi
தீப்பற்றும் வெப்பநிலை 49 °C (120 °F; 322 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

மெத்தில் லாக்டேட்டு ஒரு நிறமற்ற தெளிவான திரவமாகும். கரிம திரவங்களிலும் தண்ணிரிலும் முழுமையாக கலக்கிறது. எளிமையாக மக்கி அழியுமென்பதால் இதை சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை அளிக்காத பசுமைக் கரைப்பான் என்கிறார்கள். நைட்ரோ செல்லுலோசு, செல்லுலோசு அசிட்டேட்டு, செல்லுலோசு அசிட்டோபியூட்டைரோட்டு, செல்லுலோசு அசிட்டாபிராபியோனேட்டு போன்றவற்றை கரைப்பதற்கு உரிய கரைப்பானாகவும் செயல்படுகிறது.

மெருகேற்றத்திற்குப் பயன்படுத்தப்படும் அரக்குச் சாயம் மற்றும் பசை போன்றவற்றை பெருமளவில் தயாரிப்பதற்கு மெத்தில் லாக்டேட்டு பயன்படுகிறது. இச்சேர்மம் இங்கு செறிவு தளர்த்தியாகவும் குறை மறைத்தல் மற்றும் செம்மை காத்தல் போன்ற பணிகளைச் செய்கிறது [2] தண்ணீர் மற்றும் அமிலம் அல்லது காரம் முன்னிலையில் மெத்தில் லாக்டேட்டு நீராற்பகுப்பு அடைந்து லாக்டிக் அமிலமாகவும் மெத்தனாலாகவும் பிரிகிறது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெத்தில்_லாக்டேட்டு&oldid=2698309" இலிருந்து மீள்விக்கப்பட்டது