மெத்தில் 2-குளோரோ அக்ரைலேட்டு
மெத்தில் 2-குளோரோ அக்ரைலேட்டு (Methyl 2-chloroacrylate) C4H5ClO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். நிறமற்ற இந்நீர்மம் பல்மெத்தில்மெத்தக்ரைலேட்டு போன்ற அக்ரைலிக் உயர் பலபடிகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. சில சிறப்பு பலபடிகள் தயாரிப்பில் இதுவொரு ஒருபடியாகவும் பயன்படுத்தப்படுகிறது.[2]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
மெத்தில் 2-குளோரோபுரோப்-2-ஈனோயேட்டு | |
வேறு பெயர்கள்
*2-குளொரோ-2-புரோப்பனாயிக் அமில, மெத்தில் எசுத்தர்
| |
இனங்காட்டிகள் | |
80-63-7 | |
ChemSpider | 6407 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6659 |
| |
UNII | 47PG4L077J |
பண்புகள் | |
C4H5ClO2 | |
வாய்ப்பாட்டு எடை | 120.53 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 1.189 கி/செமீ3 at 68 °F (20 °C)[1] |
கொதிநிலை | 52 °C; 126 °F; 325 K at 51.0 மிமீபாதரசம்[1] |
தண்ணீரில் கரையாது | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மெத்தில் 2-குளோரோ அக்ரைலேட்டு சேர்மத்தை பலபடியாக்க இயலும். இது நீரில் கரையாது. தோல், கண், நுரையீரல் போன்ற உடல் உறுப்புகளுக்கு இது எரிச்சலூட்டும். வாயுவை நுகர நேர்ந்தால் நுரையீரல் வீக்கம் ஏற்படும். தோலில் பட நேர்ந்தால் பெரிய கொப்புளங்கள் தோன்றும்.[1]
மெத்தில் 2-குளோரோ அக்ரைலேட்டுடன் தயோயூரியாவைச் சேர்த்து வினைப்படுத்தினால் எல்-சிசுட்டீன் உண்டாகிறது. இவ்வினையில் இடைநிலை விளைபொருளாக 2-அமினோதயசோலின்-4-கார்பாக்சிலிக் அமிலம் உருவாகிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 U.S. Environmental Protection Agency. 1998. Extremely Hazardous Substances (EHS) Chemical Profiles and Emergency First Aid Guides. Washington, D.C.: U.S. Government Printing Office
- ↑ "Cameo Chemicals". பார்க்கப்பட்ட நாள் 26 May 2012.
- ↑ Karlheinz Drauz, Ian Grayson, Axel Kleemann, Hans-Peter Krimmer, Wolfgang Leuchtenberger, Christoph Weckbecker (2005), Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a02_057.pub2
{{citation}}
: CS1 maint: multiple names: authors list (link)