மெரினா கான்
மெரினா கான் (Marina Khan) (பிறப்பு: டிசம்பர் 26, 1962) ஒரு பாகிஸ்தான் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகை, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.[1] அவரது குறிப்பிடத்தக்க நடிப்பில் தன்ஹையன் (1985), தூப் கினாரே (1987), நிஜாத் (1990), தஹ்னா (1993) ஆகியவை அடங்கும். அவர் 2000ம் ஆண்டு நடுப்பகுதியில் தொழில்துறையை விட்டு வெளியேறி, 2012இல் வெளிவந்த தன்ஹயன் நய் சில்சிலே தொடரில் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். இது 1985 ஆம் ஆண்டில் வெளிவந்த, முதல் தொடரான தன்ஹையனின் தொடர்ச்சியாகும். கான் 2016 ஆம் ஆண்டு வெளியான லாலா பேகம் திரைப்படத்தில் அறிமுகமானார்.[2]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்
தொகுபாக்கிஸ்தானின் கே.பி.கே மாகாணமான பெஷாவரில் கான் பிறந்தார்.[3] அவரது தந்தை ரெஹ்மத் கான் டேங்க் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பஷ்டூன் தேரா இஸ்மாயில் கான் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தாயார் அன்னா ரெஹ்மத் ஆங்கில வம்சாவளியைச் சேர்ந்தவர். ஆனால் பெஷாவரில் குடியேறியவர். இவருக்கு ஒரு மூத்த சகோதரர் உள்ளார் மற்றும் இவர், டேங்க் மாவட்ட நவாபின் பேத்தி ஆவார்.[4] அவரது தந்தை பாகிஸ்தான் விமானப்படையில் பணிபுரிந்தார், மேலும் அவரது வேலை ஒதுக்கீட்டைப் பொறுத்து குடும்பம் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் இடம்பெயர வேண்டியிருந்தது. எனவே அவர் ஒரு நேர்காணலில், இந்த சூழ்நிலையின் விளைவாக, தனக்கு நீண்டகால குழந்தை பருவ நண்பர்கள் இல்லை என்று கூறினார்.[1]
நாடக அறிமுகம்
தொகு1971 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரிலிருந்து பாகிஸ்தானின் தேசிய வீராங்கனை ரஷீத் மின்ஹாஸ் ஷாஹீத்தின் நினைவாக பி.டி.வி நாடகத்தில் மெரினா கான் அறிமுகமானார். பின்னர், 1985 ஆம் ஆண்டில் மெரினா கான் 'தன்ஹயான்' தொடரில் நடித்து புகழ் பெற்றார். இது பாகிஸ்தான் பார்வையாளர்களிடையே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.[5] இருப்பினும், பின்னர் மெரினா தனது தொழிலின் ஒரு பகுதியாக இயக்கம் மற்றும் தயாரிப்பை மேற்கொண்டார், மேலும் தனது சொந்த சமையல் நிகழ்ச்சியையும் நடத்தினார்.
திரைப்பட அறிமுகம்
தொகுதற்போது, இவர் கராச்சியில் குடியேறியுள்ளார். உலகளாவிய இயற்கை நிதியத்திற்கான ( WWF ) நல்லெண்ண பிரதிநிதியாகவும் உள்ளார். அவர் ஏ.ஆர்.வொய் டிஜிட்டலில் மெரினா மார்னிங்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.[2] 2016 ஆம் ஆண்டில் அவர் மெஹ்ரீன் ஜபரின் குறும்படமான லாலா பேகத்தில் தோன்றினார். இந்த படம் மொசைக் சர்வதேச தெற்காசிய திரைப்பட விழாவில் ஆகஸ்ட் 6, 2016 அன்று ஜீல் ஃபார் யூனிட்டி பேனரின் கீழ் திரையிடப்பட்டது.[6] பின்னர் அவர் பஞ்சாப் நஹி ஜாங்கி (2017) படத்தில் ஒரு சிறிய வேடத்தில் தோன்றினார், மேலும் நா மலூம் அஃப்ராட் 2 (2018), மற்றும் பர்வாஸ் ஹை ஜூனூன் (2018) ஆகிய படங்களில் நடித்தார்.[7][8] அதே ஆண்டில் அவர் மெஹ்ரீன் ஜபரின் ஈத் டெலிஃபில்ம் ஹம் சாலே ஆயில் தோன்றினார்.[9]
தொலைக்காட்சி பங்களிப்புகள்
தொகுதொலைக்காட்சியைப் பொறுத்தவரை, கான் தற்போது உருது தொலைக்காட்சி துறையில் பல்வேறு தொலைக்காட்சி நாடகங்களில் பங்காற்றி வருகிறார். அவரது மிகச் சமீபத்திய தோற்றங்களில் ஜாக்சன் ஹைட்ஸ் (2014),[10] கைஃப்-இ-பஹாரன் (2018),[11] நூர்-உல்-ஐன் (2018),[12] கைட் (2018),[13] தில் கியா கரே (2018) [14] மற்றும் பாண்டிஷ் (2019) போன்ற தொலைக்காட்சித் தொடர்கள் உள்ளன.[15]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 "Personality Profile". PTV. Archived from the original on 8 April 2008. பார்க்கப்பட்ட நாள் 14 March 2017.
- ↑ 2.0 2.1 "Morning inspiration!". Aurora Magazine (in ஆங்கிலம்). 2019-03-16. பார்க்கப்பட்ட நாள் 2019-03-22.
- ↑ https://www.youtube.com/watch?v=kzMx9LMYdn8&list=RDkzMx9LMYdn8&t=1534
- ↑ Rewind with Samina Peerzada (2019-07-18), Marina Khan | The Stories Of Tanhaiyan and Dhoop Kinare | Part I | Rewind With Samina Peerzada, பார்க்கப்பட்ட நாள் 2019-07-20
- ↑ http://vidpk.com/p/82/Marina-Khan/ பரணிடப்பட்டது 2017-03-15 at the வந்தவழி இயந்திரம், Profile of Marina Khan, Retrieved 14 March 2017
- ↑ "Lala Begum Screening at Canadian Film Festival". Newsline. பார்க்கப்பட்ட நாள் 8 September 2016.
- ↑ Haq, Irfan Ul (2017-06-19). "Marina Khan will make her film debut with 'Na Maloom Afraad 2'". Images (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-22.
- ↑ Shabbir, Buraq. "Parwaaz Hai Junoon trailer shows the human side of fighter pilots". www.thenews.com.pk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-22.
- ↑ "Mehreen Jabbar, Mohammad Ahmad and Marina Khan: The M trio reunite". The Nation (in ஆங்கிலம்). 2017-06-25. Archived from the original on 2019-03-27. பார்க்கப்பட்ட நாள் 2019-03-22.
- ↑ Siddique, Sadaf (2014-12-27). "Jackson Heights review: On way to resolution". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-22.
- ↑ Ahmad, Fouzia Nasir (2018-03-11). "THE TUBE". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-22.
- ↑ "Sarmad Khoosat and Abdullah Seja pair up for Noorul Ain". Daily Times (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-09-30. பார்க்கப்பட்ட நாள் 2019-03-22.
- ↑ Khan, Saira (2018-05-23). "Exclusive: Zara Noor Abbas and Syed Jibran pair up for Wajahat Rauf's unusual story 'Qaid'". HIP (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-22.
- ↑ Desk, Instep. "Upcoming plays of 2019". www.thenews.com.pk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-22.
- ↑ Khan, Sheeba (2019-02-02). "Review: This black magic TV drama is a Pakistani horror fan's delight". Images (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-22.