மெஹதி ஹசன்
மெஹதி ஹசன் மிராஸ் (Mehedy Hasan Miraz (பிறப்பு:25 அக்டோபர்,1997) வங்காளதேசத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் வங்காளதேச அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் ஒரு சகலத் துறையர் ஆவார்.வ்லது கை மட்டையாளரான இவர் வலது கை புறத்திருப்பப் பந்து வீச்சாளரும் ஆவார்.[1][2]
ஆரம்பகால வாழ்க்கை
தொகுமிராஸ் பரிசல் எனும் இடத்தில் பிறந்தார். தனது இளம்வயதிலேயே தனது குடும்பத்தினருடன் குல்னாவிற்கு இடம்பெயர்ந்தார்.[3] குல்னா நகரில் உள்ள கலிஸ்பூர் இடத்தில் வளர்ந்து வந்தார்.[4] எட்டாவது வயது முதல் துடுப்பாட்டம் விளையாடி வருகிறார்.[5] கசிப்பூர் துடுப்பாட்ட அகாதமியில் இவர் பயிற்சி பெற்றார். பதினான்கு வயதிற்கு உட்பட்டோருக்கான தேசிய அணியில் இவருக்கு இடம் கிடைத்தது.[5]
2016 ,19 வயதிற்குகு உட்பட்டோருக்கான உலகக் கிண்னம்
தொகுடிசம்பர் , 2015 ஆம் ஆண்டில் , 2016 ஆம் ஆண்டில் நடைபெற இருந்த 19 வயதிற்குகு உட்பட்டோருக்கான உலகக் கிண்னத் தொடரில் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.[6] அந்தத் தொடரில் அரையிறுதி வரை சென்றனர். ஆனால் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணியிடம் தோல்வியடைந்தனர். 3 ஆவது இடத்திற்காக நடைபெற்ற போட்டியில் இலங்கை அணியினை 3 இலக்குகளால் வெற்றி பெற்றது.[7] இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருது பெற்றார். விளையாடிய ஆறு போட்டிகளில் 242 ஓட்டங்கள் எடுத்து 12 இலக்குகளையும் வீழ்த்தினார்.[8][9][10]
சர்வதேச போட்டிகள்
தொகுதேர்வுத் துடுப்பாட்டம்
தொகு19 வயதிற்குகு உட்பட்டோருக்கான உலகக் கிண்னத் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தேர்வுத் தொடரில் தேர்வு செய்யப்பட்டார். அக்டோபர் 20, 2016 இல் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் அறிமுகமனார். வலதுகை புறத் திருப்ப பந்துவீச்சாளராக இருந்தபோதிலும் இவர் துவக்க வீரராக பந்துவீசினார்[11]. இங்கிலாந்து அணியின் அரிமுக வீரராக களம் இறங்கிய பென் டக்கட்டின் இலக்கினை இவர் வீழ்த்தினார். இவரின் அறிமுகப்போட்டியில் 5 இலக்கினை வீழ்த்தினார். இதன்மூலம் மிக இளம்வயதில் இந்தச் சாதனையைப் புரிந்த வங்காளதேச வீரர் மற்றும் சர்வதேச அளவில் ஏழாவது வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.[12] இரணடாவது போட்டியில் 5 இலக்கினை வீழ்த்தியதன் மூலம் முதல் இரு போட்டிகளில் மூன்று முறை ஐந்து இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தத் தொடரில் 19 இலக்குகளைக் கைப்பற்றி தொடர்நாயகன் விருதினைப் பெற்றார். இதன்மூலம் அறிமுகப்போட்டியில் தொடர் நாயகன் விருதினைப் பெறும் முதல் வங்காளதேச வீரர் மற்றும் சர்வதேச அளவில் ஒன்பதாவது வீரர் எனும் சாதனை படைத்தார்.[13][14][15]
ஒருநாள் போட்டி
தொகுதிசெம்பர், 2016 இல் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தொடருக்கான வங்காளதேசத் துடுப்பாட்ட அணியில் இவருக்கு இடம் கிடைத்தது. ஆனால் விளையாடும் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை[16]. மார்ச், 2017 இல் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் இடம் பெற்றார்[17]. மார்ச் 25, 2017 இல் ரன்கிரி தம்புலா அரங்கத்தில் நடைபெற்ற போட்டியில் அறிமுகமானார். குசல் மெண்டிசு இலக்கினை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் 10 ஒவர்கள் வீசி 43 இலக்குகளை விட்டுக்கொடுத்து 2 இலக்குகளை வீழ்த்தினார்.
பன்னாட்டு இருபது20
தொகுஏப்ரல், 2017 இல் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார்.[18] ஏப்ரல் 6, 2017 இல் தனது முதல் போட்டியில் விளையாடினார்.[19]
சான்றுகள்
தொகு- ↑ "The Home of CricketArchive". cricketarchive.com. பார்க்கப்பட்ட நாள் July 9, 2015.
- ↑ "Mehedi Hasan". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 July 2015.
- ↑ "The smiling assassin". The Daily Star. October 31, 2016. http://www.thedailystar.net/sports/cricket/england-vs-bangladesh-2016/the-smiling-assassin-1306948. பார்த்த நாள்: 3 November 2016.
- ↑ "PM orders building of house for Miraz". Daily Sun. November 3, 2016 இம் மூலத்தில் இருந்து நவம்பர் 4, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161104075631/http://www.daily-sun.com/printversion/details/180487/PM-orders-building-of-house-for-Miraz. பார்த்த நாள்: November 4, 2016.
- ↑ 5.0 5.1 "নতুন ক্রিকেট তারকা: কে এই মেহেদী হাসান মিরাজ?". BBC Bangla. 31 October 2019. http://www.bbc.com/bengali/news-37819987. பார்த்த நாள்: 3 November 2016.
- ↑ "Mehedi Hasan to lead Bangladesh at U19 WC". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 December 2015.
- ↑ "Bangladesh ace tense chase to secure third place". ESPNCricinfo. 13 February 2016. பார்க்கப்பட்ட நாள் 14 February 2016.
- ↑ "Most wickets". ESPNCricinfo. Archived from the original on 11 February 2016. பார்க்கப்பட்ட நாள் 14 February 2016.
- ↑ "Most runs". ESPNCricinfo. Archived from the original on 8 February 2016. பார்க்கப்பட்ட நாள் 14 February 2016.
- ↑ "ICC Under-19 World Cup, Final: India Under-19s v West Indies Under-19s at Dhaka, Feb 14, 2016". ESPNCricinfo. 14 February 2016. பார்க்கப்பட்ட நாள் 14 February 2016.
- ↑ "England tour of Bangladesh, 1st Test: Bangladesh v England at Chittagong, Oct 20 ,2016". http://www.espncricinfo.com/ci/engine/match/1029825.html. பார்த்த நாள்: 20 October 2016.
- ↑ "Mehedi continues a debut trend, Bairstow's record year". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 October 2016.
- ↑ "England's collapse and Mehedi's record series debut". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 October 2016.
- ↑ "Man of the Series on debut". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 October 2016.
- ↑ "Mehedi Hasan, Shakib script historic Bangladesh win".
- ↑ "Mustafizur returns to Bangladesh ODI squad". ESPN Cricinfo.
- ↑ "Mehedi Hasan added to Bangladesh ODI squad". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 March 2017.
- ↑ "Uncapped Mohammad Saifuddin in Bangladesh T20I squad". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 April 2017.
- ↑ "Bangladesh tour of Sri Lanka, 2nd T20I: Sri Lanka v Bangladesh at Colombo (RPS), Apr 6, 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 April 2017.
வெளியிணைப்புகள்
தொகு- கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: மெஹதி ஹசன்
- Player Profile: மெஹதி ஹசன் கிரிக்கெட்ஆர்க்கைவில் இருந்து