மேக்ரோபோடசு
மேக்ரோபோடசு | |
---|---|
ஓரிணை மேக்ரோபோடசு ஓபர்குலரிசு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | பெலோனிபார்மிசு
|
குடும்பம்: | |
பேரினம்: | எக்சோசீடசு லாசிபெடி, 1801
|
மாதிரி இனம் | |
மேக்ரோபோடசு விரிடியூரடசு லாசிபெடி, 1801[1] | |
வேறு பெயர்கள் | |
மேக்ரோபோடசு (Macropodus) என்பது கிழக்காசியாவில் உள்ள நன்னீர் வாழ்விடங்களைப் பூர்வீகமாகக் கொண்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான மீன் [4] பேரினமாகும். இப்பேரினத்தினைச் சார்ந்த பெரும்பாலான சிற்றினங்கள் தெற்கு சீனா (ஆங்காங் மற்றும் தைவான் உட்பட) மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் மட்டுமே காணப்படுகின்றன. ஆனால் மே. ஒபெர்குலரிசு வடக்கே யாங்சி ஆற்றுப் படுகை வரை காணப்படுகிறது. மேலும் மே. ஒசெல்லடசு வடக்கே அமுர் ஆறு வரை காணப்படுகிறது.[4] இதே போல் சப்பான் மற்றும் கொரியாவிலும் பரவிக்காணப்படுகிறது.[4] சீனாவில், இவை பெரும்பாலும் நீர்காட்சி சண்டைகளில் பயன்படுத்தப்படுகின்றன. இவை பேட்டா பேரினத்துடன் ஒத்திருப்பதால் சீன பேட்டா என்று அழைக்கப்படுகின்றன. இப்பேரினத்தில் உள்ள சில சிற்றினங்கள் மீன்வள வர்த்தகத்தில் தொடர்ந்து காணப்படுகின்றன. மேலும் மே. ஒபெர்குலரிசு இதன் சொந்த வரம்பிற்கு வெளியே உள்ள பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.[5]
சிற்றினங்கள்
தொகு2014ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்த பேரினத்தில் கீழ்க்கண்ட அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன.[4]
- மேக்ரோபோடசு பேவியன்சிசு நுயான் & நுயான், 2005
- மேக்ரோபோடசு எரித்ரோப்டெரசு கெர்டர், 2002 (சிவப்பு-முதுகு சொர்க்க மீன்)
- மேக்ரோபோடசு ஆங்காங்கென்சிசு ப்ரேஹாப் & ஹெர்டர், 2002
- மேக்ரோபோடசு லின்னேயடசு நுயான் & நுயான், 2005
- மேக்ரோபோடசு ஓசெல்லடஸ் கேன்டர், 1842 (வட்ட-வால் சொர்க்க மீன்)
- மேக்ரோபோடசு ஒலிகோலெபிசு நுயான், நுகோ & நுயான், 2005
- மேக்ரோபோடசு ஓபர்குலரிசு (லின்னேயஸ், 1758) (சொர்க்க மீன்)
- மேக்ரோபோடசு போங்கென்சிசுநுகோ, நுயான் & நுயான் , 2005
- மேக்ரோபோடசு இசுபெக்டி சிரைட்முல்லர், 1936 (கருப்பு சொர்க்க மீன்)
மேற்கோள்கள்
தொகு- ↑ https://www.google.com/search?client=firefox-b-d&q=Macropodus+viridiauratus
- ↑ https://www.irmng.org/aphia.php?p=taxdetails&id=1426185
- ↑ Gistel, Johannes (1851). Naturgeschichte des Thierreichs : für höhere Schulen. Stuttgart :: Scheitlin & Krais,. http://dx.doi.org/10.5962/bhl.title.97235.
- ↑ 4.0 4.1 4.2 4.3 Froese, Rainer, and Daniel Pauly, eds. (2014). Species of Macropodus in FishBase. July 2014 version.
- ↑ SeriouslyFish: Macropodus opercularis. Retrieved 16 July 2014.