மேட்டுப்பாளையம் தொடருந்து நிலையம்
மேட்டுப்பாளையம் தொடருந்து நிலையம் (Mettupalayam railway station, நிலையக் குறியீடு:MTP) ஆனது இந்தியாவின், தமிழ்நாட்டின், கோயம்புத்தூர் மாவட்டத்தின் புறநகர்ப் பகுதியான மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கியமான தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். ஏனெனில் நீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து இங்கிருந்து தொடங்குகிறது.[1]
மேட்டுப்பாளையம் | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 11°17′56″N 76°56′08″E / 11.2989°N 76.9355°E | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
தடங்கள் | கோயம்புத்தூர் - மேட்டுப்பாளையம் வழித்தடம் நீலகிரி மலை தொடருந்து போக்குவரத்து | ||||
கட்டமைப்பு | |||||
தரிப்பிடம் | உண்டு | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலையக் குறியீடு | MTP | ||||
பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே | ||||
வரலாறு | |||||
திறக்கப்பட்டது | 1873 | ||||
மின்சாரமயம் | ஆம் | ||||
|
இந்த நிலையம் இந்திய இரயில்வேயின், தென்னக இரயில்வே மண்டலத்தின் சேலம் தொடருந்து கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது.
திட்டங்கள் மற்றும் மேம்பாடு
தொகுஇந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [2][3][4][5][6]
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் சேலம் கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, மேட்டுப்பாளையம் தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 8 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. [7][8][9][10][11][12][13][14]
இரயில்களின் விபரம்
தொகுகீழ்க்கண்ட தொடருந்துகள் இந்த நிலையத்திற்கு வருகின்றன.
தொடருந்து எண். | தொடருந்து பெயர் | சேரும் இடம் | வகை | நிகழ்வெண் | |
---|---|---|---|---|---|
12672 | நீலகிரி விரைவுத் தொடருந்து | சென்னை | அதிவிரைவுத் தொடருந்து | தினமும் | |
56145 | கோயம்புத்தூர் பயணிகள் தொடருந்து | கோயம்புத்தூர் | பயணிகள் தொடருந்து | தினமும் | |
56147 | கோயம்புத்தூர் பயணிகள் தொடருந்து | கோயம்புத்தூர் | பயணிகள் தொடருந்து | தினமும் | |
56149 | கோயம்புத்தூர் பயணிகள் தொடருந்து | கோயம்புத்தூர் | பயணிகள் தொடருந்து | தினமும் | |
56151 | கோயம்புத்தூர் பயணிகள் தொடருந்து | கோயம்புத்தூர் | பயணிகள் தொடருந்து | தினமும் | |
56136 | ஊட்டி பயணிகள் தொடருந்து | உதகமண்டலம் | மலை இரயில் | தினமும் | |
16765 | மேட்டுப்பாளையம் தூத்துக்குடி விரைவு வண்டி | தூத்துக்குடி | விரைவு வண்டி | வெள்ளி மற்றும் ஞாயிறு 07.35.PM | கோயம்புத்தூர் சந்திப்பு, பொள்ளாச்சி சந்திப்பு, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் சந்திப்பு, மதுரை சந்திப்பு, விருதுநகர் சந்திப்பு, சாத்தூர், கோவில்பட்டி |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Palaniappan, V.S. (15 மார்ச் 2012). "Associations demand extra coaches in Coimbatore – Mettupalayam train". https://www.thehindu.com/news/cities/Coimbatore/associations-demand-extra-coaches-in-coimbatore-mettupalayam-train/article2998096.ece.
- ↑ "AMRIT BHARAT STATIONS". Press Information Bureau (New Delhi). 10 Feb 2023. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897980.
- ↑ https://sansad.in/getFile/annex/262/AU1585.pdf?source=pqars
- ↑ https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1941449
- ↑ https://www.youtube.com/watch?v=2ilIzAsYJVs
- ↑ https://www.youtube.com/watch?v=mETMtIdiv_E
- ↑ https://news.railanalysis.com/southern-railway-identifies-90-railway-stations-sanctions-rs-934-crore-for-redevelopment-of-stations-under-amrit-bharat-station-scheme/
- ↑ https://swarajyamag.com/infrastructure/amrit-bharat-station-scheme-60-suburban-railway-stations-to-get-facelift-in-tamil-nadu
- ↑ https://www.newindianexpress.com/states/tamil-nadu/2023/Feb/22/15-railway-stations-in-salem-division-to-be-upgraded-2549648.html
- ↑ https://sr.indianrailways.gov.in/view_detail.jsp?lang=0&dcd=16014&id=0,4,268
- ↑ https://www.pressreader.com/india/the-hindu-erode-9WW6/20240603/281578065800613
- ↑ https://www.thehindu.com/news/cities/Coimbatore/foundation-laid-for-redevelopment-of-eight-stations-in-salem-railway-division-under-amrit-bharat-station-scheme/article67887945.ece
- ↑ https://www.youtube.com/watch?v=_9JwQKh7iM0
- ↑ https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-nilgiris/renovation-of-railway-stations-under-amrit-bharat-project/3555958
வெளி இணைப்புகள்
தொகு