மேட்டு மகாதானபுரம் பிடாரி பள்ளமுடிச்சம்மன் கோயில்

மேட்டு மகாதானபுரம் பிடாரி பள்ளமுடிச்சம்மன் கோயில் தமிழ்நாட்டில் கரூர் மாவட்டம், மேட்டு மகாதானபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1] மேட்டுமகாதானபுரம் பிடாரியம்மன் கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. [2]

அருள்மிகு பிடாரி பள்ளமுடிச்சம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கரூர்
அமைவிடம்:மேட்டு மகாதானபுரம், கிருஷ்ணராயபுரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கிருஷ்ணராயபுரம்
மக்களவைத் தொகுதி:கரூர்
கோயில் தகவல்
தாயார்:பிடாரி பள்ளமுடிச்சம்மன்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

இக்கோயிலுள்ள பிடாரி அம்மன் எல்லைத் தெய்வமாக கருதப்படுகிறது. இக்கோயில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் இவ்வூர் மக்களால் கட்டப்பட்டதாக அறியப்படுகிறது.

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[3]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது.

வேறு பெயர்கள் தொகு

ஏழு ஊர்களின் மக்களைக் காக்கும் எல்லைத் தெய்வமாக இருப்பதால் 'ஏழூராள்' என்றும், பள்ளர் என்ற சமூகத்தினரால் பிடாரி சிலை கண்டெடுக்கப்பட்டதால் பள்ளம்படச்சி எனவும் அழைக்கப்படுகிறது.

விழாக்கள் தொகு

ஆடிமாதம் முதல் வெள்ளி கிழமையில் சிறப்பு வழிபாடு, பூசை நடைபெறுகிறது. [2] [4]

மேட்டு மகாதானபுரத்திலுள்ள அங்காளம்மன் கோவில் திருவிழாவின் போது மேட்டு மகாதானபுரம் பிடாரி அம்மன் கோவிலில் இருந்து தாய் வீட்டு சீதனம் அழைத்துக் கொண்டு செல்லும் வழக்கம் உள்ளது. [5]


மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. 2.0 2.1 "கிருஷ்ணராயபுரம் பிடாரி அம்மன் கோவிலில் ஆடிவெள்ளி சிறப்பு பூஜை". Dinamalar.
  3. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "கிருஷ்ணராயபுரம் பிடாரி அம்மன் கோவிலில் ஆடிவெள்ளி சிறப்பு பூஜை". Dinamalar. 30 ஜன., 2017. {{cite web}}: Check date values in: |date= (help)
  5. "அங்காளம்மன் கோவிலில் தீமிதி திருவிழா". www.dailythanthi.com. 15 மார்., 2021. {{cite web}}: Check date values in: |date= (help)