மேற்கு சாலமன் ஆந்தை

மேற்கு சாலமன் ஆந்தை (West Solomons owl) என்பது நடுத்தர அளவிலான ஆந்தை சிற்றினம் ஆகும். இதன் உடல் நீளம் 23 முதல் 31 செமீ வரை இருக்கும். இதன் மேற்பகுதி துருப்பிடித்த பழுப்பு நிறத்தில் காணப்படும். சில நேரங்களில் புள்ளி அல்லது வெள்ளை நிறத்தில் பட்டைகள் காணப்படும். இதன் மார்பு வெள்ளை நிறத்தில் உள்ளது. சில நேரங்களில் புள்ளியுடன் அல்லது பழுப்பு வண்ணத்துடன் பட்டைகள் கொண்டிருக்கும். இதன் நுரை வண்ண வயிற்றுப் பகுதியில் குறியீடுகள் இன்றி காணப்படும். இது சாம்பல்-பழுப்பு நிற முக வட்டுடன், குறுகிய வெள்ளை புருவ விளிம்புடன் தொண்டை முழுவதும் வெள்ளை நிறத்தில் காணப்படும்.[3]

West Solomons owl
CITES Appendix II (CITES)[2]
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ஏதேன்
இனம்:
A. jacquinoti
இருசொற் பெயரீடு
Athene jacquinoti
போனபார்தி, 1850
வேறு பெயர்கள்
  • நினோக்சு ஜாக்குயினோதி

1850ஆம் ஆண்டில் சார்லஸ் லூசியன் போனபார்தி முதன்முதலில் இந்தச் சிற்றினத்தை விவரித்தபோது ஏதேன் பேரினத்தின் கீழ் ஒதுக்கினார்.[4] இது பின்னர் இந்தோ-பசிபிக் முழுவதும் காணப்படும் பல சிறிய ஆந்தைகளைக் கொண்ட நினோக்சு பேரினத்தில் மறு வகைப்படுத்தப்பட்டது. ஆனால் பின்னர் தொகுதி வரலாற்று ஆய்வுகள் இதனை ஏதேன் பேரினத்திற்குள் குழுவாக இருப்பதைக் கண்டறிந்து வகைப்படுத்தியது. இந்த குறிப்பிட்ட பெயர் பசிபிக் கடலில் கணிசமான நேரத்தைக் கழித்த பிரெஞ்சு ஆய்வாளர் சார்லசு எக்டர் ஜாக்வினாட்சை கவுரவிக்கின்றது.[5] இதன் பொதுவான இந்த ஆந்தைக் காணப்படும் சாலமன் தீவுகளைக் குறிக்கிறது.[6]

இது சாலமன் தீவுகள் தீவுக்கூட்டத்தின் மேற்குப் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டது. இங்கு இது தாழ் நிலங்களிலும் வெப்பமண்டல அல்லது மிதவெப்ப மண்டல ஈரமான காடுகளிலும் கடல் மட்டத்திலிருந்து 1,500 m (4,900 அடி) மீ (4,900 அடி) உயரத்தில் காணப்படுகிறது.[7] குவாடல்கானல், மலைட்டா மற்றும் பாவ்ரோ & மகிராவில் உள்ள துணையினங்கள் தனித்துவமான சிற்றினங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் இவை முறையே குவாடல்கால ஆந்தை (ஏ. கிராண்டி மலைட்டா ஆந்தை (ஏ. மலைட்டே) மற்றும் மகிரா ஆந்தை (ஏ. ரோசோஆக்சில்லாரிசி) எனப் பிரிக்கப்பட்டுள்ளன.[8] ஒன்றாக, இவை சாலமன்சு ஆந்தைகள் என்று அழைக்கப்பட்டன. இது இரவு நேர விலங்காகும். இது முதன்மையாகப் பூச்சிகள் மற்றும் சிறிய முதுகெலும்புள்ள விலங்குகளை வேட்டையாடுகிறது. பகலில், இது ஒரு குழியில் அல்லது மரத்தின் பிரதான கிளைபிரிவில் தங்கும்.[3]

உலகளாவிய இதன் எண்ணிக்கை அளவிடப்படவில்லை என்றாலும், இது இதன் வரையறுக்கப்பட்ட வரம்பிற்குள் பரவலாகவும் பொதுவானதாகவும் கூறப்படுகிறது. இதன் எண்ணிக்கையின் போக்கு நிலையானதாகத் தோன்றுகிறது. இருப்பினும் சிறிய எண்ணிக்கையிலா ஆந்தைகள் செல்லப்பிராணிகளாகக் காடுகளிலிருந்து எடுக்கப்படுவதாக அறியப்படுகிறது.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2012). "Ninox jacquinoti". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22689485/0. பார்த்த நாள்: 26 November 2013. 
  2. "Appendices | CITES". cites.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
  3. 3.0 3.1 Duncan, James R. (2003). Owls of the World: Their Lives, Behavior and Survival. Buffalo, NY: Firefly Books. p. 284. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-55297-845-0. solomons hawk-owl.
  4. König, Claus; Weick, Friedhelm (2008). Owls of the World. London, UK: Christopher Helm. pp. 466–467. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7136-6548-2.
  5. Jobling, James A. (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London, UK: Christopher Helm. p. 210. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4081-2501-4.
  6. Stickney, Eleanor H (2009). The "Whys" of Bird Names. New York, NY: Vantage Press. p. 158. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-533-16080-8.
  7. 7.0 7.1 "Species: Solomons Boobook". Birdlife International. பார்க்கப்பட்ட நாள் 4 February 2012.
  8. "Species Updates – IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்கு_சாலமன்_ஆந்தை&oldid=4143922" இலிருந்து மீள்விக்கப்பட்டது