மேற்கு ருக்கும் மாவட்டம்

மேற்கு ருக்கும் மாவட்டம் (West Rukum) (நேபாளி: पश्चिम रुकुम) நேபாளத்தின் மேற்கில் அமைந்த கர்ணாலி பிரதேசத்தின் (முன்னாள் நேபாள மாநில எண் 6) 10 மாவட்டங்களில் ஒன்றாகும். மேலும் நேபாளத்தின் 77 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1]இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் முசிகோட் கலங்கா ஆகும்

மேற்கு ருக்கும் மாவட்டத்தின் வரைபடம்

நிர்வாக வசதிக்காக ருக்கும் மாவட்டத்தின் மேற்கு பகுதிகளைக் கொண்டு மேற்கு ருக்கும் மாவட்டமும்; கிழக்குப் பகுதிகளைக் கொண்டு கிழக்கு ருக்கும் மாவட்டமும் 20 செப்டம்பர் 2015ல் நிறுவப்பட்டது.

1213.49 சதுர கிமீ பரப்பளவு கொண்ட மேற்கு ருக்கும் மாவட்டத்தின், 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள் தொகை 1,54,272 ஆகும். [1] [2]

மாவட்ட எல்லைகள்

தொகு

மேற்கு ருக்கும் மாவட்டத்தின் வடக்கில் டோல்பா மாவட்டம், கிழக்கில் கிழக்கு ருக்கும் மாவட்டம், தென்கிழக்கில் ரோல்பா மாவட்டம், தென்மேற்கில் சல்யான் மாவட்டம், மேற்கில் ஜாஜர்கோட் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம்

தொகு

மேற்கு ருக்கும் மாவட்டம் 3 நகர்புற நகராட்சிகளையும்; 3 கிராமிய நகராட்சி மன்றங்களையும் கொண்டது. [1][3]

நகர்புற நகராட்சிகள்

தொகு
  • முசிகோட் கலங்கா
  • சௌர்ஜகாரி
  • ஆத்விஸ்கோட்

கிராமிய நகராட்சிகள்

தொகு
  • பன்பிகோட்
  • திரிவேணி
  • சனி பெகாரி

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "स्थानीय तहहरुको विवरण" [Details of local level body]. www.mofald.gov.np (in Nepali). Ministry of Federal Affairs and Local Development (Nepal). பார்க்கப்பட்ட நாள் 14 April 2018.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "CITY POPULATION– statistics, maps & charts". www.citypopulation.de. 8 October 2017. பார்க்கப்பட்ட நாள் 14 April 2018.
  3. "District Corrected Last for RAJAPATRA" (PDF). www.mofald.gov.np. Ministry of Federal Affairs and Local Development (Nepal). பார்க்கப்பட்ட நாள் 14 April 2018.

வெளி இணைப்புகள்

தொகு