டோல்பா மாவட்டம்

டோல்பா மாவட்டம் (Dolpa District) (நேபாளி: डोल्पा जिल्लाListen), நேபாளத்தின் கர்ணாலி மாநிலத்தில் அமைந்த 10 மாவட்டங்களில் ஒன்றாகும். நேபாள மாவட்டங்களில் பரப்பளவில் இது பெரிய மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தின் தலைமையிடம் தூனை நகரம் ஆகும். 7889 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் 2011 நேபாள மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, மொத்த மக்கள்தொகை 36,700 ஆகும்.[1]

டோல்பா மாவட்டம்
டோல்பா மாவட்டத்தின் தஸ் தோர்ப் ரிங்மோ கிராமம்
டோல்பா மாவட்டத்தின் தஸ் தோர்ப் ரிங்மோ கிராமம்
கர்ணாலி பிரதேசத்தில் டோல்பா மாவட்டத்தின் அமைவிடம் (அடர் மஞ்சள் நிறம்)
கர்ணாலி பிரதேசத்தில் டோல்பா மாவட்டத்தின் அமைவிடம் (அடர் மஞ்சள் நிறம்)
நாடு நேபாளம்
மாநிலம்கர்ணாலி
நிறுவப்பட்டது1962
தலைமையிடம்துளி பெக்ரி
நிர்வாகப் பிரிவுகள்
பட்டியல்
அரசு
 • வகைமாவட்ட ஒருங்கிணைப்புக் குழு
 • நிர்வாகம்டோல்பா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு
 • தலைவர்செர் பகதுர் புதா (CPN-UML)
பரப்பளவு
 • மொத்தம்7,889 km2 (3,046 sq mi)
 • பரப்பளவு தரவரிசை1st
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்36,700
 • அடர்த்தி4.7/km2 (12/sq mi)
மக்கள்தொகை
 • இனக்குழுக்கள்சேத்திரி, மகர் மக்கள், டோல்பா, குரூங், தாக்கூரி
 • பெண்கள் 50%
மனித வளர்ச்சி சுட்டெண்
 • எழுத்தறிவு53%
நேர வலயம்ஒசநே+05:45 (நேபாள சீர் நேரம்)
முக்கிய மொழிகள்நேபாள மொழி
போக்குவரத்துகாளி கண்டகி தாழ்வாரம்
இணையதளம்ddcdolpa.gov.np

புவியியல் & தட்ப வெப்பம்

தொகு

டோல்பா மாவட்டம் 28°43’N - 29°43’N நிலநேர்க்கோட்டிலும் மற்றும் 82°23’E - 83°41’E நிலநிடைக்கோட்டிலும் அமைந்துள்ளது. நேபாளத்தின் பெரிய மாவட்டங்களில் ஒன்றான் டோல்பா மாவட்டம், நேபாளத்தின் 5.36% நிலத்தை பகிர்ந்து கொள்கிறது. இமயமலையில் 1525 முதல் 7625 மீட்டர் உயரத்தில் அமைந்த இம்மாவட்டத்தின் வடக்கில் திபெத், வடகிழக்கில் சூம்லா மாவட்டம், மேற்கில் முகு மாவட்டம், தெற்கில் மியாக்தி மாவட்டம், ஜாஜர்கோட் மாவட்டம் மற்றும் ருக்கும் மாவட்டம் மற்றும் கிழக்கில் முஸ்தாங் மாவட்டம் எல்லைகளாகக் கொண்டுள்ளது.இம்மாவட்டடத்தின் பெரும் பகுதிகளை செ போக்சுந்தா தேசியப் பூங்காமற்றும் செ போக்சுந்தா ஏரி ஆக்கிரமித்துள்ளது. [2] மற்றும் போக்சுந்தா ஏரியும் ஆக்கிரமித்துள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011 நேபாள மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, டோல்பா மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை 36,700 ஆகும். இம்மாவட்டத்தில் கச மக்கள், சேத்திரி மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். நேபாள மொழியை 94.4% பேசுகின்றனர். 1..6% குரூங் மொழி, 1.9% செர்ப்பா மொழி 1.9%, போட்டே மொழி 1.8% காம் மொழி 1.7% பேசுகின்றனர்.[3]இம்மாவட்ட மக்களில் பெரும்பான்மையோர் நேபாள [[இந்து சமயம்|இந்து சமயத்தினராகவும் (92%), பிறர் பௌத்த சமயத்தினர் 4% ஆகவும், போன் பௌத்தம் 5.05% ஆக உள்ளனர். மக்களில் பெரும்பான்மையோர் வேளாண்மைத் தொழிலும் (79.5%), சேவைத் தொழில் (2%) பணி செய்கின்றனர்.

மாவட்ட நிர்வாகம்

தொகு

டோல்பா மாவட்டம் 8 நகர்புற நகராட்சிகளையும், 6 கிராமிய நகராட்சிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[4]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "National Population and Housing Census 2011(National Report)". Government of Nepal. Central Bureau of Statistics. November 2012 இம் மூலத்தில் இருந்து 18 ஏப்ரல் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130418041642/http://cbs.gov.np/wp-content/uploads/2012/11/National%20Report.pdf. 
  2. Shey Phoksundo National Park
  3. "2011 Nepal Census, Social Characteristics Tables" (PDF). Archived from the original (PDF) on 2023-03-14. பார்க்கப்பட்ட நாள் 2021-02-04.
  4. "स्थानिय तह" (in நேபாளி). Ministry of Federal Affairs and General Administration. பார்க்கப்பட்ட நாள் 1 September 2018.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Dolpa District
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=டோல்பா_மாவட்டம்&oldid=3729470" இலிருந்து மீள்விக்கப்பட்டது