மேல்பாடி சோமநாதேஸ்வரர் கோயில்

மேல்பாடி சோமநாதேஸ்வரர் கோயில், தமிழ்நாட்டின் இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டம், சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த மேல்பாடி ஊரில் பொன்னை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இக்கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.[1][2]அம்மன் பெயர் தபஸ்கிருத தேவி ஆகும். இக்கோயிலை 1000 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவியவர் சோழப் பேரரசர் அரிஞ்சய சோழன் ஆவார். பினனர் இக்கோயில் குடமுழுக்கை செய்தவர் முதலாம் இராஜராஜ சோழன் ஆவார். இராஜகோபுரம் இல்லாத இக்கோயில் தற்போது சிதிலமடைந்துள்ளது. இந்தியத் தொல்லியல் ஆய்வகம் இக்கோயிலை பராமரிக்கிறது.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு