மேல்பாடி, தமிழ்நாட்டின் இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டம், சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம், மேல்பாடி ஊராட்சியில் அமைந்த பழையான சிற்றூர் ஆகும். மேல்பாடியில் அரிஞ்சய சோழர் கட்டிய 1000 ஆண்டுகள் பழைமையான சோமநாதேஸ்வரர் கோயில் உள்ளது.[1][2] [3] [4]இது பாலாறு ஆற்றின் அருகிலும் பொன்னை ஆற்றின் மேற்கு கரையிலும் அமைந்துள்ளது. மேல்பாடி சாளுக்கிய மற்றும் சோழப் பேரரசுக்களுக்கு இடையே மேல்பாடி இருந்தது.

மேல்பாடி சோளிங்கரிலிருந்து 9 கிலோ மீட்டர் தொலைவிலும், இராணிப்பேட்டையிலிருந்து 17 கிலோ மீட்டர் தொலைவிலும், வேலூருக்கு வடக்கே 27 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இதன அஞ்சல் சுட்டு எண் 632520 ஆகும். இதன் மக்கள் தொகை 5767 ஆகும். இதனருகில் வள்ளிமலை அமைந்துள்ளது. மேல்பாடி காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்கும், அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்கும் உட்ப்பட்டது.

குறிப்புகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேல்பாடி&oldid=3314948" இலிருந்து மீள்விக்கப்பட்டது