மைகிரண்டு வாட்சு
மைகிரண்டு வாட்சு (Migrant Watch) என்பது இந்தியாவில் பறவைகளின் வலசை போக்கைப் பற்றி அறிந்துகொள்ள மக்களைக் கொண்டு தரவுகள் திரட்டும் ஒரு புது விதமான திட்டமாகும். இத்திட்டம் 2007ஆம் ஆண்டு "இண்டியன் பேர்டிஸ்" (Indian Birds) என்ற பறவையியல் ஆய் விதமும் பெங்களூரின் "தேசிய உயிர் அறிவியல் மையமும்" (National Centre for Biological Sciences) இணைந்து தொடங்கிய திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம், பறவைகள் குளிர்காலத்தில் இந்தியாவிற்குள் வருகை, இனப்பெருக்கம் செய்யும் இடங்கள் மற்றும் திரும்பி செல்லும் காலம் போன்ற தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. இந்த திட்டத்தில் விருப்பமுள்ள எவரும் பங்குகொள்ளலாம். இது முற்றிலும் தன்னார்வலர்களைக் கொண்டு நடத்தப்படும் ஒரு திட்டமாகும்.[1][2]
திட்டத்தின் நோக்கம்
தொகுஇந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் "இந்தியாவில் பறவைகளின் வலசை போகும் போக்கைப் பற்றி அறிந்து கொள்வதாகும்". இதில் 30 பறவைச் சிற்றினங்கள் தேர்வு செய்யப்பட்டு அவை குறித்த தகவல்கள் முனைப்புடன் சேகரிக்கப்படுகின்றன.
முனைப்பு காட்டப்படும் இனங்கள்
தொகுவாத்துகளும் அன்னங்களும்(Ducks and Geese)
தொகு- பட்டைத்தலை வாத்து (Bar-headed Goose)
- சிவப்புத்தாரா[3] (அ) கருட தாரா (அ) செங்கிளுவை (Ruddy Shelduck)
- ஆண்டி வாத்து (அ) தட்டைவாயன் (Northern Shoveller)
- ஊசிவால் வாத்து (Northern Pintail)
கரைப் பறவைகளும் நீர்நிலைகளைச் சார்ந்த பறவைகளும் (Shorebirds and wetland-dependent birds)
தொகு- பொரி உள்ளான் (Wood Sandpiper)
- உள்ளான் (Common Sandpiper)
- ஆற்று உள்ளான் (Green Sandpiper)
- பேதை உள்ளான் (Ruff)
- கருவால் மூக்கான் (Black-tailed Godwit)
- கருங்கழுத்து நாரை (Demoiselle Crane)
- (Black Stork)
- பல்லா கடற்காகம் (Palla's Gull)
இரைபிடி பறவைகள் (Birds of prey)
தொகு- சேற்று பூனைப்பருந்து (Western Marsh Harrier)
- விரால் அடிப்பான் (Osprey)
- சிவப்பு லகுடு (Common Kestrel)
பிற இனங்கள்(Other species)
தொகு- (Eurasian Wryneck)
- பழுப்புக் கீச்சான் (Brown Shrike)
- நீலப் பூங்குருவி (Blue Rock-thrush)
- செங்கழுத்து ஈப்பிடிப்பான் (Red-throated Flycatcher)
- நீலமேனி ஈப்பிடிப்பான் (Verditer Flycatcher)
- நீலகண்டன் (Bluethroat)
- செவ்வாலி (Black Redstart)
- (Common Stonechat)
- சூறைக்குருவி (அ) சோளக்குருவி (Rosy Starling)
- தகைவிலான் (Barn Swallow)
- பச்சைக் கதிர்குருவி (Greenish Warbler)
- பிளித் நாணல்குருவி (Blyth's Reed Warbler)
- வெள்ளை வாலாட்டி (White Wagtail)
- கருஞ்சாம்பல் வாலாட்டி (Grey Wagtail)
- கூம்பலகு சில்லை (Common Rosefinch)
இத்திட்டத்தில் தன்னார்வலர்கள் செய்ய வேண்டியவை
தொகு- மைகிரண்டு வாட்சு இணைய தளத்தில் [1] பரணிடப்பட்டது 2012-05-04 at the வந்தவழி இயந்திரம் தங்களுக்கொன்று ஒரு கணக்கை துவக்க வேண்டும்.
- மேலே குறிப்பிட்டுள்ள பறவைகளை அறிந்து கொள்ளவும். இதற்காக மைகிரண்டு வாட்சு தளத்தில் உள்ள கையேட்டையோ அல்லது ஒரு பறவைகள் கையேட்டையோ அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள பறவைகளின் படங்களையோ பார்க்கவும்.
- இந்தப் பறவைகளை தங்கள் வீட்டருகிலே அல்லது அலுவலகத்திற்கு அருகிலே அல்லது தாங்கள் வழக்கமாக செல்லும் இடங்களில் காணப்படுகிறதா என்று கவனிக்கவும்.
- இப்பறவைகளில் ஏதேனும் ஒன்றை பார்த்தால், பார்த்த இடம், நாள் போன்றவற்றை மைகிரண்டு வாட்சு இணைய தளத்தில் பதியவும்.
- மேலும் இப்பறவைகளைொரு குளிர்காலத்தில் எப்பொழுது முதலாவதாக பார்த்தது மற்றும் எப்பொழுது கடைசியாகப் பார்த்தது என்பதையும் பதிவு செய்யலாம்.
இத்திட்டத்தின் பயன்கள்
தொகு- பறவைகளின் வலசை போக்கை பற்றி அறிதல்
- இந்தியாவில் பறவைகள் எங்கொல்லாம் இனப்பெருக்கம் செய்கிறது என்ற தரவைகொண்டு அவ்விடங்களை பாதுகாத்தல்
- மக்களைக் கொண்டு தரவுகள் சேகரிப்பதால், மக்களிடம் பறவைகளை பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துதல்
மேற்கோள்கள்
தொகு- ↑ NCBS and Indian Birds Journal. "Migrant Watch home page". பார்க்கப்பட்ட நாள் 30 November 2010.
- ↑ Quader, S.; Raza, R. H. (2008). "MigrantWatch: A citizen science programme for the study of bird migration". Indian Birds (New Ornis Foundation) 3 (6): 202–209.
- ↑ தென் இந்திய பறவைகள் - ரிச்சர்ட் கிரிமிட், டிம் இன்சுகிப் (தமிழில்: கோபிநாதன் மகேஷ்வரன்) - பக். 52(1)