மொகாபத்ரா நிலமணி சாகு

ஓடிய எழுத்தாளர்

மொகாபத்ரா நிலமணி சாகு (ஆங்கிலம்:Mohapatra Nilamani Sahoo) (22 டிசம்பர் 1926 - 25 ஜூன் 2016) குடும்பப்பெயரும் சாகு என்று உச்சரிக்கப்பட்ட இவர் ஒரு இந்திய ஒடியா மொழி சிறுகதை எழுத்தாளர் ஆவார். 1979 ஆம் ஆண்டு ஆகாச படலாவுக்கான ஒடிசா சாகித்ய அகாடமி விருது, மற்றும் 1983 சரளா விருது மற்றும் 1984 ஆம் ஆண்டில் ஒடியா சாகித்திய அகாடமி விருது, அபிசப்தா கந்தர்பா உள்ளிட்ட பல இலக்கிய விருதுகளைப் பெற்ற்றுள்ளார். சாகு 2016 சூன் 25 அன்று பல உறுப்பு செயலிழப்புகளுக்கு பின்னர் காலமானார்.[1][2]

மொகாபத்ரா நிலமணி சாகு
2012இல் மொகாபத்ரா நிலமணி சாகு
பிறப்பு(1926-12-22)22 திசம்பர் 1926
நியாளி, கட்டக், ஒடிசா, இந்தியா
இறப்பு25 சூன் 2016(2016-06-25) (அகவை 89)
புவனேசுவரம், ஒடிசா, இந்தியா
தேசியம்இந்தியன்
பணிஎழுத்தாளர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஆகாச படலா
அபிசப்த கந்தர்வா
கையொப்பம்

வாழ்க்கை மற்றும் தொழில்

தொகு

சாகு 1926 டிசம்பர் 22 அன்று கட்டக் மாவட்டத்தின் நியாலி நகரில் ஒரு பணக்கார ஜமீந்தார் குடும்பத்தில் பிறந்தார். அவர் பிஞ்சார்பூர் உயர்நிலைப் பள்ளியில் தனது மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்தார். பின்னர் கட்டக்கிலுள்ள இராவன்சா கல்லூரியில் ஓடியாவில் பட்டப்படிப்பும், முதுகலைப் படிப்பையும் முடித்தார். முதுகலைப் படிப்புக்குப் பிறகு, சாகு சம்பல்பூர் பல்கலைக்கழகத்தில் நூலகராக சேர்ந்து அங்கு அவர் இரண்டு ஆண்டுகள் பணியிலிருந்ந்தார். பின்னர் இவர் பத்ராக் கல்லூரியிலும் அதைத்தொடர்ந்து கஜபதி மாவட்டத்திலிலுள்ள பராலகேமுண்டி அரசு கல்லூயிலும் ஒடியா விரிவுரையாளர் பதவியை வகித்தார். சாகு புவனேசுவரத்தில் உள்ள பக்சி ஜகபந்து பித்யாதர் மாலை கல்லூரியின் துணை முதல்வராகவும் பின்னர் முதல்வராகவும் ஆனார்.[1][3]

இலக்கியப் படைப்புகள் மற்றும் விருதுகள்

தொகு

சாகு ஒடியா மொழியில் பல்வேறு சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரது பிரபலமான படைப்புகளில் பிரேமா திரிபுஜா (1952), மிச்சா பாகா (1955), சுருநந்து சர்பே அம்ருதசுய புத்ரா (1957), கஞ்சி ஓ 'கபேசனா (1961), அந்தா ரதிரா சூர்யா (1965) போன்ற பல உள்ளன. அவர் தாரா ஓ தாரா, தமாசி ராதா மற்றும் ஹன்சா மிதுனா என்ற புதினங்களையும் வெளியிட்டுள்ளார்.[1] சாகு ஒருவர் மட்டுமே நடிக்கும் குழந்தைகள் நாடகங்களையும் எழுதியுள்ளார். இவரது 1979 ஆம் ஆண்டு புத்தகம் ஆகாசா படலா (அதாவது "சொர்க்கம் மற்ரும் நரகம்") இவருக்கு ஒடிசா சாகித்ய அகாதமி விருதை பெற்றுத் தந்தது . இவரது சிறுகதைத் தொகுப்பான் அபிசப்தா கந்தர்பா (அதாவது " சபிக்கப்பட்ட கந்தர்வர் ") 1983 இல் சரளா விருதைப் பெற்றது. இதைத் தொடர்ந்து இதற்கு 1984 ஆம் ஆண்டில் ஒடியாவுக்கான சாகித்ய அகாதமி விருதும் கிடைத்தது.[3][4] இந்த புத்தகம் 1992 இல் சித்தார்த் மான்சிங் மகாபத்ரா என்பவரால் இந்திக்கு மொழிபெயர்க்கப்பட்டது.

1965 முதல் 1969 வரை ஜன்கரா என்ற பத்திரிகையின் ஆசிரியராக சாகு பணியாற்றினார். 1975 முதல் 1978 வரை உத்கலா பிரசங்கா மற்றும் ஒரிசா ரிவியூ போன்ற பிற பத்திரிகைகளின் ஆசிரியராகவும் இருந்தார்.[1] ஜன்கராவில், அரவிந்தரின் தத்துவங்கள் குறித்து அவர் அடிக்கடி எழுதி வந்தார். அரவிந்தரின் சாவித்ரி: எ லெஜண்ட் அண்ட் எ சிம்பல் என்பதை மொழிபெயர்த்த இவர் அரவிந்தர், ராமகிருட்டிண பரம்கம்சர் மற்றும் சுவாமி விவேகானந்தர் ஆகியோரைப் பற்றி சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார்.[5]

சாகு 2001 இல் கந்த கபி விருதையும், 2006 ல் சாகித்ய பாரதி விருதையும், 2013 இல் உத்கல் ரத்னா விருதையும் பெற்றுள்ளார்.[1][5] இவரது கதைகள் மனித உணர்ச்சியின் நுணுக்கங்களை விவரித்தன. வாய்மொழி மற்றும் சூழ்நிலை நகைச்சுவை ஆகியவற்றைக் கொண்டிருந்தன. மனித முட்டாள்தனங்களை நையாண்டி செய்வதற்கும் இவரது படைப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இறப்பு

தொகு

சாகு முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர், உடல்நிலை சரியில்லாமல் சூன் 24 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பல உறுப்பு செயலிழப்புகளுக்குப் பிறகு 2016 சூன் 25 அன்று தனது 89 வயதில் புவனேசுவரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார்.[6] இவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் இருந்தனர்.[7]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Writer Mohapatra Nilamani Sahu passes away". The New Indian Express. 25 June 2016. பார்க்கப்பட்ட நாள் 25 June 2016.
  2. "Eminent author Mahapatra Nilamani Sahoo passes away". Odisha TV. 25 June 2016. Archived from the original on 10 மே 2017. பார்க்கப்பட்ட நாள் 25 June 2016.
  3. 3.0 3.1 "Eminent Odia litterateur Mohapatra Nilamani Sahoo no more". Odisha Sun Times. 25 June 2016. Archived from the original on 26 ஜூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 27 June 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Akademi Awards (1955–2015)". சாகித்திய அகாதமி. 27 June 2016. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 27 June 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. 5.0 5.1 Sampad, Shilpi; Mohanty, Subhashish (3 August 2013). "'Naveen babu should try to learn Odia'". The Telegraph. Kolkata. பார்க்கப்பட்ட நாள் 27 June 2016.
  6. "Last rites of Mahapatra Nilamani Sahoo today". Odisha TV. 26 June 2016. Archived from the original on 10 மே 2017. பார்க்கப்பட்ட நாள் 29 June 2016.
  7. "Odia writer Mohapatra Nilamani Sahoo passes away". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 25 June 2016. பார்க்கப்பட்ட நாள் 29 June 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொகாபத்ரா_நிலமணி_சாகு&oldid=3770099" இலிருந்து மீள்விக்கப்பட்டது