மொகாலா-மன்பூர்-அம்பாக் சௌகி மாவட்டம்

மொகல்லா-மன்பூர்-அம்பாக் சௌக்கி மாவட்டம் (Mohla-Manpur-Ambagarh Chowki), இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் 29வது மாவட்டமாக 9 செப்டம்பர் 2022 (வெள்ளிக் கிழமை) அன்று முதலமைச்சர் பூபேஷ் பாகல் தொடங்கி வைத்தார். பெரிய மாவட்டமான ராஜ்நாந்துகாவ் மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு இப்புதிய மாவட்டம் நிறுவப்பட்டது.[1][2][3]

சத்தீஸ்கர் மாநிலத்தின் 33வது புதிய மாவட்டமான கைராகர்-சுய்காடன்-கண்டாய் மாவட்டத்தை 9 செப்டம்பர் 2022 அன்று சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் துவக்கி வைத்தார்.[4]

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2 இலட்சத்தி 14,667 எக்டேர் பரப்பள்வு கொண்ட மொகல்லா-மன்பூர்-அம்பாக் சௌக்கி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 2,83,947 ஆகும். இதன் மக்கள் தொகையில் பட்டியல் பழங்குடியினர் 1,79,662 ஆக உள்ளனர்.

மாவட்ட நிர்வாகம்

தொகு

மூன்று வருவாய் வட்டங்களையும், 13 குறுவட்டங்களையும், மூன்று ஊராட்சி ஒன்றியங்களையும், 185 கிராம ஊராட்சிகளையும், 499 கிராமங்களையும் கொண்டது.

மேற்கோள்கள்

தொகு