மொகிந்திரா கல்லூரி, பட்டியாலா

(மொகிந்தரா கல்லூரி, பட்டியாலா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மொகிந்தரா கல்லூரி (Mohindra College) இந்தியப் பஞ்சாபில் பட்டியாலாவில் அமைந்துள்ள கல்லூரியாகும். 1875இல் நிறுவப்பட்ட இக்கல்லூரி வட இந்தியாவில் மிகவும் தொன்மையான உயர்கல்வி நிறுவனமாகும்.

மொகிந்தராக் கல்லூரி, பட்டியாலா

நிறுவல்:1875
வகை:கல்லூரி
முதல்வர்:முனைவர் சுக்பிர்சிங் திண்டு
பீடங்கள்:112+
அமைவிடம்:பட்டியாலா, பஞ்சாபு, இந்தியா
வளாகம்:நகர்ப்புறம், 21 ஏக்கர்கள்/ 8.5 எக்டேர்
இணையத்தளம்:www.mohindracollege.in
மொகிந்தரா கல்லூரி, பட்டியாலா

இந்திய அரசின் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையால் பஞ்சாபில் A+ தரச்சான்று முதலாவதாக வழங்கப்பட்ட கல்விநிறுவனம் மொகிந்தரா கல்லூரியாகும். இந்தக் கல்லூரியில் அடிப்படை அறிவியல், அரசறிவியல், மொழி, வரலாறு, பொது நிர்வாகம், வணிகம், பயன்பாட்டு மென்பொருள், வேளாண் அறிவியல், உயிரித் தொழில்நுட்பம், உடற் பொருள் சோதனை நோய் நாடல் ஆகிய துறைகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு கல்வி அளிக்கப்படுகின்றது.

வெளியிணைப்புகள்தொகு