மோகான், உத்திரப்பிரதேசம்
மோகான் (Mohan) என்பது இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ளஉன்னாவோ மாவட்டத்தில் ஒரு நகரம்,பேரூராட்சி ஆகும்.
மோகான் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 26°47′N 80°40′E / 26.78°N 80.67°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | உன்னாவு |
பரப்பளவு | |
• மொத்தம் | 5.46 km2 (2.11 sq mi) |
ஏற்றம் | 128 m (420 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 15,071 |
• அடர்த்தி | 2,800/km2 (7,100/sq mi) |
மொழி | |
• அலுவல் மொழி | இந்தி[1] |
• கூடுதல் அலுவல் மொழி | உருது[1] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | UP-35 |
இணையதளம் | http://www.npmohan.in |
வரலாறு
தொகுமோகான் என்ற சொல் இந்த இடத்தின் முதல் குடியிருப்பாளர்களால் வழங்கப்பட்டது . ஈரானின் கெர்மன் மாகாணத்தில் உள்ள ஒரு சிறிய நகரமான மகானில் இருந்து அவர்கள் குடியேறினர். இதன் மூலம் இந்த இடத்திற்கு மோகான் எனப்பெயரிட்டனர்.
முகலாய மற்றும் பிரிட்டிசு இராச்சியங்களின் போது, மோகான் அதன் கல்வியறிவுள்ள மக்களுக்கு அறியப்பட்ட ஒரு நகரமாக வளர்ந்தது. அயோத்தி நவாப்களின் நாட்களில், பல குடியிருப்பாளர்கள் நவாபின் நாரசவையில் வேலைவாய்ப்பைக் பெற்று பெரும் செல்வத்தைப் பெற்றனர். இந்த நகரம் யூனானி மருத்துவர்கள், பலகுரல் நடிகர்களுக்காக நன்கு அறியப்பட்டது. பல பிரபலமான அக்கீம்கள் (யுனானி மருத்துவர்கள்) காரணமாக கிரேக்கத்தின்ஒரு பகுதியாக மோகான் என்று பொருள்படும் மோகன் கிட்டா-இ உனான் என்று உள்ளூர்வாசிகள் அன்பாகப் பயன்படுத்தினர். [2]
நன்கு அறியப்பட்ட உருது கவிஞரும், பிரிட்டிசு ஆட்சியில் இருந்து இந்திய சுதந்திரத்திற்காக போராடிய சுதந்திரப் போராளியுமான அசரத் மோகானியும், நன்கு அறியப்பட்ட உருது புதின எழுத்தாளரான இபாத் மோகானியும் மோகனிடமிருந்து தங்களின் பெயரை இணைத்துள்ளனர்.
தற்போது மோகானில் பல தொடக்கப் பள்ளிகளும், இடைநிலை பள்ளியும் 12 ஆம் வகுப்பு வரை உள்ளன. இது உத்தரபிரதேசத்தின் தலைநகரான லக்னோ நகரிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
தர்கா
தொகுமோகான் காசிம் இப்னுல் அசன் என்பவரின் தர்காவை அதன் மத்தியப் பகுதியில் கொண்டுள்ளது. இது சியா இசுலாமியர்களுக்கு ஒரு ஆன்மீக இடமாகும். ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் 7 ஆம் முகர்ரம் அன்று மக்கள் கர்பலாவைச் சேர்ந்த காசிம் இப்னு அசனுக்கு மரியதை செலுத்துவதற்காக இங்கு கூடி ஊர்வலம் நடத்துகிறார்கள். இந்த ஊர்வலம் பல பிரிவுகளிலிருந்தும் மதங்களிலிருந்தும் துக்கப்படுபவர்களைக் காண்கிறது.
நிலவியல்
தொகுமோகான், சாய் ஆற்றின் இடது கரையில், அசன்கஞ்சிலிருந்து கிழக்கே 6 கி.மீ தொலைவிலும், உன்னாவுவிலிருந்து 38 கி.மீ வடகிழக்காகவும் அமைந்துள்ளது. இந்த இடத்திலிருந்து கிழக்கில் லக்னோ மாவட்டத்தின் மாலிகாபாத், தெற்கில் நவாப்கஞ்ச் மற்றும் வடமேற்கில் பங்கர்மாவ் வரை சாலைகள் செல்கின்றன. மோகான் 26.78 ° வடக்கிலும் 80.67 ° கிழக்கிழும் அமைந்துள்ளது. [3] இதன் சராசரி உயரம் 128 மீட்டர் (419 அடி). பிரிட்டிசார் காலத்தில் மோகான் லக்னோ மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு இது உன்னாவு மாவட்டத்தில் இணைக்கப்பட்டது.
புள்ளிவிவரங்கள்
தொகு2001 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, [4] மோகான் 13,553 மக்கள் தொகையைக் கொண்டிருந்தது. மக்கள்தொகையில் ஆண்கள் 54 சதவீதமும், பெண்கள் 46 சதவீதமும் இருக்கின்றனர். மோகானின் சராசரி கல்வியறிவு விகிதம் 46 சதவீதமாகும். இது தேசிய சராசரியான 59.5 சதவீதத்தைவிடக் குறைவு: ஆண்கள் கல்வியறிவு 51 சதவீதமும், பெண்கள் கல்வியறிவு 40 சதவீதமும் ஆகும். மோகானில், 17 சதவீதம் பேர் 6 வயதிற்குட்பட்டவர்கள்.
மோகனின் சையீதுகள்
தொகுஈரானைச் சேர்ந்த சையீதுகள் ஆரம்பத்தில் இந்தியாவில் குடியேற நான்கு இடங்களைத் தேர்ந்தெடுத்தனர். இவை அல்லூர், பராகா, மோகான் மற்றும் பில்கிராம் . [5] ஈரானில் இருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்து மோகானில் குடியேறிய இமாம் ரசாவின் வழித்தோன்றல்களில் ஒருவரான சையீத் மகமூத் நேசாபுரி என்பவரிடமிருந்து மோகானின் சயீதுகள் வந்தவர்கள். [6] மோகானைச் சேர்ந்த மூசாவி மற்றும் நிசாபுரி சையீத்துகளின் கிளைகளில் ஒன்று லக்னோவுக்கு அருகிலுள்ள பிஜ்னோரில் குடியேறியது. [7]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 "52nd REPORT OF THE COMMISSIONER FOR LINGUISTIC MINORITIES IN INDIA" (PDF). nclm.nic.in. சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் (இந்தியா). Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 26 April 2019.
- ↑ Hunter, William wilson (1886). The imperial gazetteer of india. Vol. 6. India: Trubner & co. London 1885. p. 402.
- ↑ Falling Rain Genomics, Inc - Mohan
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 16 June 2004. பார்க்கப்பட்ட நாள் 1 November 2008.
- ↑ The Right Honourable Syed Ameer Ali: personality and achievements, Shan Muhammad, Uppal Pub. House, 1991
- ↑ The Tempest: A Monthly Review of National Affairs, Volume 4, Issues 1-10, Tempest House, 1969
- ↑ Medieval & modern India: new sources, 1000 -1986 AD, Idarah-i Adabiyat-i Delli, 2009 (Translation of twelve rare Urdu and Persian works.)