மோதி மகால் (Moti Mahal) என்பது இந்தியாவின் தில்லியில் அமைந்துள்ள ஒரு உணவகம் ஆகும். 1947ஆம் ஆண்டு இந்தியாவின் பிரிவினைக்குப் பிறகு நிறுவப்பட்டது. தில்லியில் உள்ள மோதி மகால் குந்தன் லால் குஜ்ரால், குந்தன் லால் ஜக்கி மற்றும் தாக்கூர் தாசு மாகு ஆகியோரால் நிறுவப்பட்டது. இது பஞ்சாபிய உணவு மற்றும் வட இந்திய உணவு வகைகளை அறிமுகப்படுத்திய முதல் உணவகங்களில் ஒன்றாகும். தந்தூரி சிக்கன், பனீர் மக்கானி, தால் மக்கானி மற்றும் பட்டர் சிக்கன் போன்ற உணவு வகைகள் இங்கு வழங்கப்படுகிறது.

வரலாறு

தொகு

மோதி மகால் குந்தன் லால் குஜ்ரால், தாக்கூர் தாசு மாகு மற்றும் குந்தன் லால் ஜக்கி ஆகியோரால் 1947-ல் தில்லியில் நிறுவப்பட்டது. இவர்கள் 1920 முதல் 1947 வரை பிரித்தானிய இந்தியாவின் பெசாவரில் மோகா சிங் லம்பா என்ற நபருக்குச் சொந்தமான மோதி மகால் என்ற சிறிய உணவகத்தில் பணிபுரிந்தனர்.[1]

 
தந்தூரி சிக்கன்: உணவகத்தின் நிறுவனர்களான குந்தன் லால் ஜக்கி, குந்தன் லால் குஜ்ரால் மற்றும் தாக்கூர் தாசு மாகு ஆகியோர் இந்த உணவைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர்கள்.

1947-ல் இந்தியப் பிரிவினைக்குப் பிறகு, குடும்பத்துடன் தில்லிக்குத் தப்பிச் சென்றனர். தில்லியில், இவர்கள் மூவரும் தர்யாகஞ்ச் பகுதியில் ஒரு தாராவை (சாவடி) வாங்கி, பின்னர் பழைய தில்லியின் புதிய பகுதிக்கு மாறினர். இவர்கள் மோதி மகாலினை, தர்யாகஞ்ச்யில் தொடங்கினார்கள். மோத்தி மகால் பட்டர் சிக்கன், பனீர் மக்கானி மற்றும் தால் மக்கானி மற்றும் நவீன தந்தூரி சிக்கன் ஆகிய உணவு வகைகளை அறிமுகப்படுத்தினர்.

மேற்கோள்கள்

தொகு
  1. . 2 February 2009. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோதி_மகால்&oldid=3839456" இலிருந்து மீள்விக்கப்பட்டது