மோரோ ஆறு போர்த்தொடர்
மோரோ ஆறு போர்த்தொடர் (Moro River Campaign) என்பது இரண்டாம் உலகப் போரின் போது நடைபெற்ற ஒரு சண்டைத் தொடர். இத்தாலியப் போர்த்தொடரின் ஒரு பகுதியான இதில் நேச நாட்டுப் படைகள் ஜெர்மானியர்களின் குளிர்காலக் கோட்டினை ஊடுருவி ரோம் நகரைக் கைப்பற்ற முயன்றனர்.
மோரோ ஆறு போர்த்தொடர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
இத்தாலியப் போர்த்தொடரின் பகுதி | |||||||
ஜெர்மானிய எதிர்த்தாக்குதல்களின் போது கனடிய வீரர்கள் (டிசம்பர் 10, 1943) |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஐக்கிய இராச்சியம் கனடா பிரித்தானிய இந்தியா நியூசிலாந்து | ஜெர்மனி | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
ஹரால்ட் அலெக்சாந்தர் பெர்னார்ட் மோண்ட்கோமரி சார்லசு ஆல்ஃபிரே மைல்சு டெம்சி | ஆல்பர்ட் கெஸ்சல்ரிங் ஹைன்ரிக் வோன் வெய்டிங்கோஃப்[nb 1] யோக்கீம் லெமேல்சென் டிராவுகாட் ஹெர் |
||||||
பலம் | |||||||
4 காலாட்படை டிவிசன்கள் 2 கவச பிரிகேடுகள் | 1 கவச டிவிசன் 1 வான்குடை டிவிசன் 2 பான்சர்கிரேனிடியர் டிவிசன்கள் |
||||||
இழப்புகள் | |||||||
~7300 | தெரியவில்லை |
செப்டம்பர் 1943ல் நேச நாட்டுப் படைகள் இத்தாலி மீது படையெடுத்தன. தெற்கு இத்தாலியை எளிதாகக் கைப்பற்றி வடக்கு நோக்கி முன்னேறின. அவற்றின் முன்னேற்றத்தைத் தடுக்க இத்தாலியின் தலைநகர் ரோமுக்குத் தெற்கே ஜெர்மானியப் படைகள் பல அரண்கோடுகளை அமைத்திருந்தன. அவற்றுள் மிக பலமானது குளிர்காலக் கோடு. இக்கோட்டினை ஊடுருவ பிரித்தானியத் தளபதி ஹரால்ட் அலெக்சாந்தர் டிசம்பர் 1943ல் ஒரு பெரும் தாக்குதலைத் தொடங்கினார். குளிர்காலக் கோட்டினை உடைத்து, பெஸ்காரா நகரத்தைக் கைப்பற்றி அங்கிருந்து ரோம் நகரைத் தாக்குவது அவரது திட்டம். இத்தாக்குதல் மோரோ ஆறு அருகே டிசம்பர் 4ம் தேதி தொடங்கியது. பிரித்தானிய 8வது ஆர்மியின் இரண்டு கோர்கள் (5வது மற்றும் 13வது) இத்தாக்குதலை மேற்கொண்டன. இவற்றில் மொத்தம் நான்கு டிவிசன்களும் இரண்டு கவச பிரிகேடுகளும் இடம் பெற்றிருந்தன. ஜெர்மானியத் தரப்பில் 10வது ஜெர்மானிய ஆர்மியின் 76வது கவச கோர் குளிர்காலக் கோட்டினை பாதுகாத்து வந்தது.
நேச நாட்டுப் படைகளின் முதல்கட்ட தாக்குதல்களுக்கு வெற்றி கிட்டியது. ஜெர்மானியப் பாதுகாவல் நிலைகளில் பல பாலமுகப்புகள் நேசப் படைகளால் கைப்பற்றப்பட்டன. ஆனால் டிசம்பர் 8ம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு மிகக் கடுமையான சண்டைகள் நிகழ்ந்தாலும், இரு தரப்புக்கும் வெற்றி கிட்டவில்லை. இரு தரப்பு படைகளும் முன்னேற முடியாமல் ஒர்சோக்னா நகர் அருகே தேக்க நிலை உருவானது. பத்து நாட்கள் இடைவிடாத மோதல்களுக்குப் பின்னர் நேச நாட்டுப் படைகள் ஒர்சோக்னாவை பக்கவாட்டிலிருந்து தாக்கி ஜெர்மானியப் படைகளைப் பின்வாங்கச் செய்தன. அடுத்த ஜெர்மானியப் பாதுகாவல் நிலையான ஒர்ட்டோனா-ஒர்சோக்னா கோடு டிசம்பர் 20ம் தேதி தாக்கப்பட்டது. மேலும் ஆறு நாட்கள் கடும் சண்டைக்குப் பின்னர் ஒர்ட்டோனா நகர் நேச நாட்டுப் படைகளால் கைப்பற்றப்பட்டது. ஆனால் இருபது நாட்கள் தொடர் சண்டையால் சோர்வடைந்திருந்த நேச நாட்டுப் படைகளால் அதற்கு மேல் முன்னேற இயலவில்லை. மேலும் கடும் குளிர்காலம் தொடங்கியதால், தட்ப வெட்பநிலையும் அவர்களுக்குப் பாதகமாக மாறியது. அதற்கு மேல் தாக்குதலைத் தொடர்வதில் பலனில்லை என்பதை உணர்ந்த அலெக்சாந்தர் தன் திட்டத்தைக் கைவிட்டார்.
படங்கள்
தொகு-
மோரோ மற்றும் சாங்கோ ஆறு தாக்குதல்கள் வரைபடம்
குறிப்புகள்
தொகு- ↑ Nicholson (1956), p. 269
மேற்கோள்கள்
தொகு- Bercuson, David (2001) [1996]. Maple Leaf Against the Axis. Red Deer Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-88995-305-8. இணையக் கணினி நூலக மைய எண் 55973783.
- Berton, Pierre (2001). Marching As to War. Toronto: Anchor Canada. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-385-25819-4. இணையக் கணினி நூலக மையம் 49928809.
- Carver, Field Marshall Lord (2001). The Imperial War Museum Book of the War in Italy 1943-1945. London: Sidgwick & Jackson. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0 330 48230 0. இணையக் கணினி நூலக மைய எண் 59467991.
- Terry Copp (November 2006). "Overcoming the Moro". Legion Magazine (Ottawa: Canvet Publications) (November 2006). பன்னாட்டுத் தர தொடர் எண்:1209-4331. இணையக் கணினி நூலக மையம்:36920998. http://www.legionmagazine.com/en/index.php/2006/11/overcoming-the-moro/. பார்த்த நாள்: 2008-06-18.
- Copp, Terry (January 2007). "Clearing The Gully". Legion Magazine (Ottawa: Canvet Publications) (January 2007). பன்னாட்டுத் தர தொடர் எண்:1209-4331. இணையக் கணினி நூலக மையம்:36920998. http://www.legionmagazine.com/en/index.php/2007/01/clearing-the-gully/. பார்த்த நாள்: 2008-06-18.
- Copp, Terry (March 2007). "Into Ortona". Legion Magazine (Ottawa: Canvet Publications) (March 2007). பன்னாட்டுத் தர தொடர் எண்:1209-4331. இணையக் கணினி நூலக மையம்:36920998. http://www.legionmagazine.com/en/index.php/2007/03/into-ortona/. பார்த்த நாள்: 2008-06-18.
- Copp, Terry (May 2007). "Winning The Streets of Ortona". Legion Magazine (Ottawa: Canvet Publications) (May 2007). பன்னாட்டுத் தர தொடர் எண்:1209-4331. இணையக் கணினி நூலக மையம்:36920998. http://www.legionmagazine.com/en/index.php/2007/05/winning-the-streets-of-ortona/. பார்த்த நாள்: 2008-06-18.
- Hingston, W. G. (1946). The Tiger Triumphs: The Story of Three Great Divisions in Italy. HMSO. இணையக் கணினி நூலக மைய எண் 29051302.
- Hoyt, Edwin P. (2007) [2002]. Backwater War: The Allied Campaign in Italy, 1943-45. Mechanicsburg, Pennsylvania: Stackpole Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8117-3382-3. இணையக் கணினி நூலக மைய எண் 70407888.
- Molony, Brigadier C.J.C.; with Flynn, Captain F.C. (R.N.); Davies, Major-General H.L.; Gleave, Group Captain T.P. (2004) [1st. pub. HMSO:1973]. Butler, Sir James (ed.). The Mediterranean and Middle East, Volume V: The Campaign in Sicily 1943 and The Campaign in Italy 3rd September 1943 to 31st March 1944. History of the Second World War, United Kingdom Military Series. Uckfield, UK: Naval & Military Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-845740-69-6.
{{cite book}}
: Unknown parameter|lastauthoramp=
ignored (help) - Nicholson, G.W.L. (1956). Official history of the Canadian Army in the Second World War, Vol II The Canadians in Italy, 1943-1945. Ottawa: Queen's Printer. இணையக் கணினி நூலக மைய எண் 317692679.[தொடர்பிழந்த இணைப்பு]
- Phillips, N.C. (1957). Italy Volume I: The Sangro to Cassino. The Official History of New Zealand in the Second World War 1939–1945. Wellington: Historical Publications Branch, republished by the New Zealand Electronic Text Centre. இணையக் கணினி நூலக மைய எண் 156862324. பார்க்கப்பட்ட நாள் 2008-06-13.
- Zuehlke, Mark (1999). Ortona: Canada's Epic WWII Battle. Vancouver: Douglas & McIntyre. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-55054-557-4. இணையக் கணினி நூலக மைய எண் 52166109.
- Zuehlke, Mark (2001). The Canadian Military Atlas: The Nation's Battlefields from the French and Indian Wars to Kosovo. Stoddart. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-77373-289-6. இணையக் கணினி நூலக மைய எண் 48680462.