மோர்ஸ் தந்திக்குறிப்பு

மோர்ஸ் தந்திக்குறிப்பு குறிப்பிட்ட தாளத்தைப் பயன்படுத்தி தந்தித் தகவலைப் பரிமாறிக்கொள்ளும் எழுத்துருக் குறியீட்டின் வகையாகும். முறைப்படுத்தப்பட்ட வரிசையுள்ள சிறிய மற்றும் நீண்ட பகுதிகள், எழுத்துக்கள், எண்கள், நிறுத்தற்குறிகள் மற்றும் சிறப்பு எழுத்துருக்கள் போன்றவைகளைப் பயன்படுத்தி ஒரு செய்தியைக் கொடுப்பதற்கு மோர்ஸ் தந்திக்குறிப்பு பயன்படுகிறது. சிறிய மற்றும் நீண்ட பகுதிகள் ஆன் ஆஃப் கீயிங்கில் ஒலிகள், குறிகள் அல்லது துடிப்புகள் போன்ற வடிவங்களில் உருவாக்கப்பட்டிருக்கலாம். மேலும் அவை பொதுவாக "புள்ளிகள்" மற்றும் "கோடுகள்" அல்லது "டிட்ஸ்" மற்றும் "டாஸ்" என அழைக்கப்படுகின்றன. ஒரு நிமிடத்திற்கான வார்த்தைகள் (WPM) அல்லது ஒரு நிமிடத்திற்கான எழுத்துருக்கள் மூலம் மோர்ஸ் தந்திக்குறிப்பின் வேகம் கணக்கிடப்படுகிறது.

மோர்ஸ் தந்திக்குறிப்பு எழுத்துக்கள் மற்றும் எண்களின் விளக்கப்படம்

உண்மையில் சாமுவெல் எஃப். பி. மோர்ஸ் அவர்களின் மின் தந்திக்காகவே 1840களின் தொடக்கத்தில் இவ்வகை உருவாக்கப்பட்டது. 1890களின் தொடக்கத்தில் மோர்ஸ் தந்திக்குறிப்பு ஆரம்பகால வானொலி தகவல் தொடர்புக்கும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதிகளில் பெரும்பாலான உயர் வேக சர்வதேசத் தகவல் தொடர்பானது தந்தி இணைப்புகள், கடலுக்கடியில் செல்லும் இணைப்புகள் மற்றும் வானொலி சுற்றுகள் போன்றவற்றைப் பயன்படுத்தி மோர்ஸ் தந்திக்குறிப்பில் மேற்கொள்ளப்பட்டன. எனினும் மோர்ஸ் எழுத்துருக்களின் மாறுபடு நீளத்தை தானியங்கு சுற்றுகளில் ஏற்படுத்துவது சிரமமாக இருந்தது. அதனால் பெரும்பாலான மின்னணுத் தொடர்புகள் பவ்டாட் குறியீடு மற்றும் ASCII போன்ற இயந்திரத்தினால் படிக்கப்படக்கூடிய வடிவங்களுக்கு மாறிவிட்டன.

அமெச்சூர் வானொலியை இயக்குபவர்கள் பயன்படுத்தும் மோர்ஸ் தந்திக்குறிப்பு மிகவும் பரவலான தற்காலப் பயன்பாடாகும். எனினும் பல நாடுகளில் அமெச்சூர் உரிமத்திற்கு இது தேவையில்லை. தொழில் துறையில், விமானிகளும் வான்வழிப் போக்குவரத்தை கட்டுப்படுத்துபவர்களும் பொதுவாக மோர்ஸ் தந்திக்குறிப்புகளை நன்கறிந்தவர்களாக இருப்பார்கள். மேலும் அவர்களுக்கு இதில் அடிப்படை புரிந்து கொள்ளும் திறன் அவசியம். வான்வழித் துறையில் VORகள் மற்றும் NDBக்கள் போன்ற வழிச்செலுத்துக் கருவிகளில் தங்கள் அடையாளங்களைத் தொடர்ந்து வெளிப்படுத்த மோர்ஸ் தந்திக்குறிப்பையே பயன்படுத்துகிறார்கள். மோர்ஸ் தந்திக்குறிப்பு எந்த குறியீட்டுக் கருவியின் உதவியும் இன்றி மனிதர்கள் குறிப்புகளைப் படிக்கும்படி வடிவமைக்கப்பட்டது. குரல் அலைவரிசைகளில் தானியங்கு டிஜிட்டல் தரவுகளை அனுப்புவதற்கு இது பயனுள்ளதாக இருந்தது. அவசர கால சமிக்ஞைகள் தேவைப்படும் போது, சுலபமாக ஆன் மற்றும் ஆஃப் முறையில் "இயங்கக்கூடிய" மேம்படுத்தப்பட்ட ஆதாரங்கள் வழியாக மோர்ஸ் தந்திக்குறிப்பை அனுப்ப முடியும். இதனால் மோர்ஸ் தந்திக்குறிப்பு தொலைத்தொடர்பில் ஏற்கனவே இருக்கும் மிகவும் திறன் வாய்ந்த முறைகளில் ஒன்றாகியது.

தோற்றம் மற்றும் வரலாறு

தொகு
 
"ஸ்ட்ரைட் கீ" இன் தோற்றம். இது J-38 எனப்படும் அமெரிக்க ஒன்றிய மாடல் ஆகும். இரண்டாம் உலகப்போரின் போது இது அதிகளவில் தயாரிக்கப்பட்டது, இன்றும் இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஸ்ட்ரைட் கீயில், அதிலுள்ள குமிழை அழுத்தும் போது சமிக்ஞை "ஆன்" ஆகிவிடும், குமிழை விடுவிக்கும் போது "ஆஃப்" ஆகிவிடும். புள்ளிகள் மற்றும் கோடுகளின் நீளம் மற்றும் நேரம் முழுமையாக இயக்குபவரால் கட்டுப்படுத்தப்படும்.

1836 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சாமுவெல் எஃப். பி. மோர்ஸ் மற்றும் ஆல்ஃபிரட் வெயில் இருவரும் ஒரு மின் தந்தியை உருவாக்கினர். அவை பெறப்படும் இடத்தில் அமைந்துள்ள மின்காந்தத்தால் கட்டுப்படுத்தப்படும் தந்தி இணைப்பிற்கு மின்சார துடிப்புகளை அனுப்பின. இதை உருவாக்கிய நேரத்தில் படிக்கக்கூடிய வடிவத்தில் எழுத்துக்களை அச்சிடக்கூடிய தொழில்நுட்பங்கள் இல்லை. அதனால் இதனை உருவாக்கியவர்கள் மாற்றுத் தொடர்பை ஏற்படுத்துவதற்கு முயன்றனர். 1837 ஆம் ஆண்டில், வில்லியம் கூக் மற்றும் சார்லச் வீட்ஸ்ட்டன் ஆகியோர் இங்கிலாந்தில் மின் தந்தியை இயக்கத் தொடங்கினர். அங்கு ஏற்பிகளில் மின்காந்தமும் பயன்படுத்தப்பட்டிருந்தது. எனினும் அவர்களது முறையில் அனுப்பப்படுகின்ற எழுத்துருக்களை அடையாளம் காண்பதற்கு சுழலும் குறிமுற்கள் பயன்படுத்தப்பட்டன.

மாறாக 1844 ஆம் ஆண்டில் முதன்முதலில் இயக்கத்திற்கு விடப்பட்ட மூர் மற்றும் வெயில் ஆகியோரின் ஆரம்பகாலத் தந்தியானது மின்சாரம் பாயும் போது காகித நாடாவில் பதியும்படி உருவாக்கப்பட்டிருந்தது. மோர்ஸால் முதன் முதலில் உருவாக்கப்பட்ட தந்தியின் ஏற்பியில் காகித நாடாவை நகர்த்துவதற்கு சாவி கொடுத்து இயங்கும் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. மின்சாரம் பெறப்படும்போது மின்காந்தம் ஒரு மின்னகத்தைப் பயன்படுத்தி எழுத்தாணியை காகித நாடாவை நோக்கி நகர்த்தும். இதன் மூலம் நாடாவில் பதிவுகள் ஏற்படும். மின்சாரம் தடைபடும் போது மின்காந்தம் எழுத்தாணியை பின்னிழுத்துக் கொள்ளுவதோடு நகரும் நாடாவின் மற்ற பகுதிகள் குறியிடப்படாமல் இருக்கும்.

மோர்ஸ் தந்திக்குறிப்பு உருவாக்கப்பட்ட பின்னர், காகித நாடாவில் குறியிடப்பட்ட பதிவுகளை உரைநடைச் செய்திகளாக மாற்றுவதற்கு அதை இயக்குபவர்களால் முடிந்தது. மோர்ஸ் அவரது முந்தைய தந்திக்குறிப்பில் எண்களை மட்டுமே அனுப்புவதற்கு திட்டமிட்டிருந்தார். அதில் அனுப்பப்பட்ட எண்களுக்கு தகுந்தவாறு ஒவ்வொரு வார்த்தைகளையும் அகராதியைப் பயன்படுத்தி கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. எனினும், விரைவில் ஆல்ஃபிரட் வெயிலால் அந்த தந்திக்குறிப்பு எழுத்துக்கள் மற்றும் சிறப்பு எழுத்துருக்கள் கொண்டதாக விரிவுபடுத்தப்பட்டது. அதனால் அதை மிகவும் பொதுவாகப் பயன்படுத்த முடிந்தது. அதில் சிறிய குறிகள் "புள்ளிகள்" எனவும், நீண்ட குறிகள் "கோடுகள்" எனவும் அழைக்கப்பட்டன. ஆங்கில மொழியில் மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் எழுத்துக்கள் சிறிய வரிசையில் ஒதுக்கப்பட்டிருந்தன.

உண்மையான மோர்ஸ் தந்தியானது ஏற்பியின் மின்னகம் நகரும் போதும் நாடாவில் குறிப்பதிலிருந்து வெளியேறி விட்ட போதும் சத்தம் எழுப்புவதாக இருந்தது. விரைவில் அதனை இயக்குபவர்கள் அந்த ஒலிகளை வைத்து அவை புள்ளிகளா, கோடுகளா என நேரடியாக உணர்ந்து கொண்டனர். இதனால் காகித நாடாவின் பயன்பாடு தேவையற்றதாகியது. மோர்ஸ் தந்திக்குறிப்பு வானொலியில் பயன்படுத்தப்பட்ட போது புள்ளிகளும் கோடுகளும் சிறிய மற்றும் நீண்ட துடிப்புகளாக அனுப்பப்பட்டன. ஒரு பக்கத்தை ஒருவர் படிப்பதற்கு பதிலாக மொழியைக் கேட்டுத் தெரிந்து கொள்ளும்படி இது இருந்ததால் மோர்ஸ் தந்திக்குறிப்பில் தந்தியை பெறுவது மக்களுக்கு தேர்ந்தவகையில் இருந்தது என பின்னர் கண்டறியப்பட்டது.[1] மோர்ஸ் தந்திக்குறிப்பில் வெளிப்படும் ஒளியின் எதிரொலியினால் அதனைப் பழகுபவர்கள் புள்ளியை "டிட்" என்றும் கோட்டை "டா" என்றும் உச்சரித்துப் பழகினர்.

மோர்ஸ் தந்திக்குறிப்பு சர்வதேச வான்வழியில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது. வணிக ரீதியான மற்றும் இராணுவ விமானிகள் இதில் பழக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டிய அவசியம் இருந்தது. ஏனெனில் இருதரப்பினரும் முந்தைய தொடர்பு முறைகளையும், மோர்ஸ் தந்திக்குறிப்பில் தொடர் மூன்றெழுத்து அடையாளத்தைப் பரிமாற்றுவதன் மூலம் செய்யப்படும் வான்வழி எச்சரிக்கைக் குறிப்புகளை கண்டறிவதற்கும் இதனைப் பயன்படுத்தினர். 1990களின் பிற்பகுதியில் விமானப் போக்குவரத்திற்காக வோர்ட்டாக் மற்றும் NDBகளுக்கான மோர்ஸ் சமிக்ஞைகளைப் பயன்படுத்தும் மோர்ஸ் மற்றும் பிரிவு சார்ந்த விளக்க அட்டவணையைக் கொண்டிருக்கும் ஒவ்வொரு விமான நிலையத்திலும் வான்வழித் தொலை அளவு விளக்க அட்டவணையானது மூன்றெழுத்து அடையாளத்தைப் பயன்படுத்திப் பட்டியலிடப்பட்டிருந்தது.

கடல்சார்ந்த தகவல்தொடர்பானது குளோபல் மேரிடைம் டிஸ்ட்ரெஸ் சேஃப்ட்டி சிஸ்டத்திற்கு மாற்றப்படும் போது 1999 ஆம் ஆண்டு வரை மோர்ஸ் தந்திக்குறிப்பு இதில் சர்வதேசத்தரமாகப் பயன்படுத்தப்பட்டது. 1997 ஆம் ஆண்டில் பிரஞ்சுக் கடற்படை மோர்ஸ் தந்திக்குறிப்பு பயன்படுத்துவதை நிறுத்திய போது "அனைவரையும் அழைக்கிறோம். இதுவே நாங்கள் நிலையாக அமைதியாவதற்கு முன்பான இறுதி அழுகை" என்ற இறுதிச் செய்தி அனுப்பப்பட்டது. மேலும் காண்க: 500 kHz

நவீன சர்வதேச மோர்ஸ் தந்திக்குறிப்பு

தொகு

மோர்ஸ் தந்திக்குறிப்பு 160 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருக்கிறது. மற்ற மின்னணு குறியீடு முறைகளுடன் ஒப்பிடும்போது இது நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மோர்ஸ் தந்திக்குறிப்பு என்ற பெயரில் அழைக்கப்படும் தந்திக்குறிப்பு, உண்மையில் வெயில் மற்றும் மோர்ஸ் ஆகியோர் உருவாக்கிய தந்திக்குறிப்பிலிருந்து சில வேறுபாடுகளைக் கொண்டது. நவீன சர்வதேச மோர்ஸ் தந்திக்குறிப்பு அல்லது கண்டம்சார் தந்திக்குறிப்பு 1848 ஆம் ஆண்டில் பிரடரிக் கிலெமென்ஸ் கெர்கெவால் உருவாக்கப்பட்டது. அது ஆரம்பத்தில் ஜெர்மனியில் ஹேம்பர்க் மற்றும் கக்ஸ்ஹெவன் இடையே தந்திகளை அனுப்புவதற்கு பயன்படுத்தப்பட்டது. சில சிறிய மாற்றங்கள் செய்த பிறகு 1865 ஆம் ஆண்டில் பாரிஸில் (1865) நடைபெற்ற சர்வதேச தந்திக் கூட்டத்தில் தரப்படுத்தப்பட்டது. பின்னர் சர்வதேசத் தொலைத்தொடர்பு ஒன்றியத்தால் (ITU) உருவாக்கப்பட்ட நெறிமுறையில் சர்வதேச மோர்ஸ் தந்திக்குறிப்பு என வழங்கப்பட்டது. அமெரிக்க மோர்ஸ் தந்திக்குறிப்பு அல்லது "ரயில்ரோட் கோட்" என்ற பெயரில் மிகவும் குறைந்த அளவில் அமெரிக்காவில் மோர்ஸின் உண்மையான தந்திக்குறிப்பின் விவரக்குறிப்பு பயன்படுத்தப்படுகிறது. தற்போது வரலாறுசார் நடவடிக்கைகள் தவிர மற்ற இடங்களில் அமெரிக்க மோர்ஸ் மிகவும் அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது.

வான்வழிப் போக்குவரத்து

தொகு

வான்வழிப் போக்குவரத்தில் இண்ஸ்ட்ருமண்ட் விமானிகள் வானொலி அதிர்வெண் உபகரணங்களைப் பயன்படுத்துகின்றனர். விமான நிலையங்கள் பயன்பாட்டில் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள அவர்கள் அனைவரும் மோர்ஸ் தந்திக்குறிப்பில் சிறிய தொகுப்பினையுடைய அடையாள எழுத்துக்களை (பொதுவாக 2–5 எழுத்துகள் வடிவத்தில் அமைந்த விமான நிலையத்தின் பெயரை) வெளிப்படுத்துவார்கள். நிலையத்தை அடையாளப்படுத்தும் எழுத்துக்கள் வான்வழி வழிச்செலுத்துதல் அட்டவணையில் இடம்பெற்றிருக்கும். எடுத்துக்காட்டாக மான்செஸ்ட்டர் விமான நிலையத்தைச் சேர்ந்த மான்செஸ்ட்டர் VOR MCT எனச் சுருக்கப்படுகிறது. மேலும் மோர்ஸ் தந்திக்குறிப்பில் MCT என வானொலி அதிர்வெண்ணில் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. விமான நிலையம் ஒரு வேளை பயன்பாட்டில் இல்லாமல் இருந்தால் TST (சோதனைக்காக) என்று ஒலிபரப்பப்படும். அதோடு அந்த விமான நிலையம் பயன்பாட்டில் இல்லை என விமானிகளுக்குத் தெரிவிக்கப்படும். இது போன்ற பல மோர்ஸ் தந்திக்குறிப்பு சுருக்கப்பெயர்கள் உள்ளன. "டா, டி டி டி, டா" என்ற ஒலியுடன் TST ஒலிபரப்பப்படுகிறது.

ஆர்வலர் வானொலி

தொகு
 
வைப்ரொபிளக்ஸ் செமி ஆட்டோமேட்டிக் கீ ("பக்" எனவும் அழைக்கப்படுகிறது). துடுப்பை வலது புறமாக பெருவிரலால் அழுத்தும் போது, தொடர் டிட்ஸ்களை உருவாக்கும். நீளமும் நேரமும் ஸ்லைடிங் வெயிட் பின்புறமாகச் செல்வதன் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. துடுப்பை இடது புறமாகச் சுட்டு விரலினால் அழுத்தும் போது ஒரு டா உருவாகும். அதன் நீளம் இயக்குபவரால் கட்டுப்படுத்தப்படும். பன்மடங்கு டாக்கள் தேவை எனில் பலமுறை அழுத்த வேண்டும். இடது கைப்பழக்கம் கொண்ட இதனைப் இயக்குபவர்கள் மேலே குறிப்பிட்டவற்றிற்கு எதிர்ப்பதமாக அதனைப் பயன்படுத்த வேண்டும்.

சர்வதேச மோர்ஸ் தந்திக்குறிப்பு அமெச்சூர் வானொலி ஆப்பரேட்டரிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. "தொடர் அலை" அல்லது "CW" என பொதுவாக அழைக்கப்படும் வானொலி தகவல் தொடர்புகள் முறையில் ஆன் மற்றும் ஆஃப் செய்யும் கடத்தியில் இது பயன்படுத்தப்படுகிறது. முதன்மையான அமெச்சூர் வானொலி ஆப்பரேட்டர்கள் மோர்ஸ் தந்திக்குறிப்பை மட்டுமே பயன்படுத்தி வந்தனர். சுமார் 1920 ஆம் ஆண்டு வரை குரல்-வல்லமையுள்ள வானொலிக் கடத்திகள் பயன்பாட்டில் இல்லை. 2003 ஆம் ஆண்டு வரை சர்வதேசத் தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU) உலகளாவிய அமெச்சூர் வானொலி உரிம நடைமுறையின் ஒரு பகுதியாக மோர்ஸ் தந்திக்குறிப்பில் கைதேர்ந்திருத்தலை கட்டாயமாக்கியிருந்தது. எனினும் உலக வானொலி தகவல் தொடர்பு மாநாடு 2003 (WRC-03) இல் அமெச்சூர் வானொலி உரிமத்திற்கு மோர்ஸ் தந்திக்குறிப்பு நிபந்தனையை கட்டாயமற்றதாக்கியது.[2] அதைத் தொடர்ந்து பல நாடுகள் தங்களது உரிம நிபந்தனைகளில் இருந்து மோர்ஸ் நிபந்தனையை நீக்கின.[3]

1991 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவைச் சேர்ந்த ஒருங்கிணைந்த தகவல் தொடர்புகள் ஆணையமானது (Federal Communications Commission) அமெச்சூர் வானொலி உரிமம் பெறுவதற்கான நிபந்தனைகளில் ஒன்றாக, மோர்ஸ் தந்திக்குறிப்பில் நிமிடத்திற்கு 5 வார்த்தைகள் (WPM) அனுப்பவும் பெறவும் முடியும் என நீரூபித்துக்காட்ட வேண்டும் என்பதையும் ஒரு நிபந்தனையாக வைத்திருந்தது. HF பட்டைகளைப் பயன்படுத்துவதற்கான உரிமம் பெறுவதற்கு இன்றும் இதை நிரூபித்துக்காட்டுவது அவசியமானதாக இருக்கிறது. 2000 ஆம் ஆண்டு வரை அமெச்சூர் உரிமத்தின் உயர்ந்த நிலையைப் (எக்ஸ்ட்ரா கிளாஸ்) பெறுவதற்கு நிமிடத்திற்கு 20 WPM என்ற நிலை தேவையானதாக இருந்தது; 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் FCC கூடுதல் வகுப்பிற்கான நிபந்தனையை 5 WPM ஆகக் குறைத்தது.[4] இறுதியாக பிப்ரவரி 23, 2007 முதல் அனைத்து அமெச்சூர் உரிமத்திலிருந்தும் மோர்ஸ் தந்திக்குறிப்பு திறமை நிபந்தனைகளை நீக்கியது.

அமெரிக்க ஒன்றிய விதிமுறைகளின் படி குரல் மற்றும் தரவுகளைப் பரப்புதலை, குறிப்பிட்ட அமெச்சூர் வானொலிப் பட்டைகளுக்கு வரையறுக்கப்பட்ட போது LF, MF, HF, UHF மற்றும் VHF போன்ற அனைத்து அமெச்சூர் பட்டைகளையும் பரப்புவதற்கு CW அனுமதிக்கப்பட்டது. இதில் குறிப்பிடத்தகுந்த விதிவிலக்கு அமெரிக்காவில் உள்ள 60 மீட்டர் பட்டையாகும். சில நாடுகளில் அமெச்சூர் வானொலிப் பட்டைகளின் சில பகுதிகள், மோர்ஸ் தந்திக்குறிப்பு சமிக்ஞைகள் பரிமாற்றங்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கின்றன. ஏனெனில் மோர்ஸ் பரிமாற்றங்கள் ஆன்-ஆஃப் கீ செய்யப்பட்ட வானொலி சமிக்ஞைகளாக வேலை செய்கின்றன. இதற்கு மற்ற வானொலித் தகவல் தொடர்பு வடிவங்களை விட சிக்கல் குறைவாயுள்ள பரிமாற்ற சாதனங்கள் இருந்தால் போதுமானது. மோர்ஸ் தந்திக்குறிப்புக்கு குரல் தகவல் தொடர்பை விட குறைந்த சமிக்ஞை பட்டையகலம் இருந்தால் போதுமானது. ஒரு பக்கக் குரல் தொடர்பில் தோராயமாக 2400 ஹெர்ட்ஸ் பயன்படுத்தப்படுவதுடன் ஒப்பிடும்போது இதற்கு பொதுவாக 100–150 ஹெர்ட்ஸ் இருந்தால் போதுமானது. எனினும் தரவு வீதமும் குறைவாய் இருக்கும். மோர்ஸ் தந்திக்குறிப்பு உச்சஸ்தாயியில் உள்ள ஒலி ஓசையைப் பெறுகிறது. அதனால் இரைச்சலான நெருக்கடியான அதிர்வெண்களை விட இதில் தெளிவான ஒலியைப் பரிமாற்ற முடியும். மேலும் இதனை மிகவும் அதிக இரைச்சலான / குறைந்த சமிக்ஞையுடைய சூழல்களிலும் பயன்படுத்த முடியும். உண்மையில் பரிமாற்றப்பட்ட ஆற்றல் மிகவும் வரையறுக்கப்பட்ட பட்டையகலத்தால் ஒருமுகப்படுத்தப்படுகின்றன. அதனால் குறுகிய ஏற்பி வடிகட்டிகளைப் பயன்படுத்த முடிகிறது. அவை அருகிலுள்ள மற்ற அதிர்வெண்களைத் தடுத்து அல்லது நீக்கிவிடுகின்றன. மனித மூளையின் இயற்கையான காதின் மூலம் தேர்ந்தெடுக்கும் திறனும் தொடர்ந்து வலுக்குறைந்த சமிக்ஞையை உணரும் திறனும் அதிகரிப்பதால் அது குறுகிய சமிக்ஞை பட்டையகலத்திற்கு சாதகமாக இருக்கிறது. இந்தத் திறனால் DX (தொலைதூர) பரிமாற்றங்கள் மற்றும் குறைந்த ஆற்றலுடைய பரிமாற்றங்களில் (பொதுவாக "QRP செயல்பாடு" எனப்படுகிறது, "குறைந்த ஆற்றலுக்கான" Q-கோட் இலிருந்து) CWவை உச்சமாகப் பயனுடையதாக ஆக்குகிறது. பல்வேறு அமெச்சூர் சங்கங்களுக்கு நிலையான உயர் வேக நகல் தேவையாக இருக்கிறது. இந்தத் தரத்தின் உச்சவரம்பு 60 WPM ஆகும். அமெரிக்க வானொலி ஒலிபரப்பு லீக் அளிக்கும் குறி தேவைப்படும் சான்றிதழுக்கான நிகழ்வில் அவை 10 WPM இல் தொடங்குகின்றன.

வேகமான தொடர்புக்குத் தேவையான எண்ணிலடங்கா சுருக்கக் குறிகள் உருவாக்கத்திற்கு மோர்ஸ் தந்திக்குறிப்பு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. புரோசைன்ஸ் மற்றும் Q குறியீடுகள், கூடுதலாகத் தனிச்சிறப்பு செய்திகளுக்கான வரையறைக்குட்பட்ட தரநிலையான வடிவம் உள்ளிட்டவை இதில் அடங்கும். எடுத்துக்காட்டாக "உங்களைத் தேடினேன்" (யாரால் என்னுடைய சமிக்ஞையைக் கேட்க முடிகிறதோ அவரிடம் நான் உரையாட விரும்புகிறேன்) என்பது CQ என ஒலிபரப்பப்படுகிறது. OM (ஓல்ட் மேன்), YL (யங் லேடி) மற்றும் XYL ("எக்ஸ் YL" - மனைவி) ஆகியவை பொதுவான பிரதிப்பெயர்களாகும். YL அல்லது OM என்பது ஒரு இயக்குபவர் மற்றொரு இயக்குபவரைக் குறிப்பிடும் போது பயன்படுத்தப்படுகிறது. XYL அல்லது OM என்பது ஒரு இயக்குபவர் அவரது வாழ்க்கைத் துணையைக் குறிப்பிடும் போது பயன்படுத்தப்படுகிறது.

இது போன்ற சுருக்கப்பெயர்களைப் பயன்படுத்துவது, இயக்குபவர்கள் வெவ்வேறு மொழி பேசுபவர்களாக இருந்தாலும் அவர்களுக்குள் உரையாடல் நடைபெற அனுமதிக்கிறது.

இருப்பினும் பண்டைய தந்தி திறவுச்சொல் (நேரடி திறவுச்சொல்) பல அமெச்சூர்களால் இன்றும் பயன்படுத்தப்படுகிறது. இயந்திரமுறை பாதியளவு தானியங்கு கீயர்கள் ("பக்ஸ்" எனப்படுகின்றன) மற்றும் முழுமையான தானியங்கு மின்னணு கீயர்களின் பயன்பாடு இன்று பயன்பாட்டில் உள்ளன. கணினி மென்பொருளிலும் மோர்ஸ் தந்திக்குறிப்பு வானொலி சமிக்ஞைகளை அவ்வப்போது தயாரிக்கப்பட்டு குறியிடப்படுகின்றன.

வேகச் சாதனைகள்

தொகு
 
வணிக ரீதியாக தயாரிக்கப்பட்ட இயாம்பிக் துடுப்பான இதை மின்னணு கீயருடன் இணைத்துப் பயன்படுத்தும் போது உயர் வேக மோர்ஸ் தந்திக்குறிப்பு உருவாகும். அதன் நேரம் மின்னணு கீயரால் கட்டுப்படுத்தப்படும். இரட்டை நெம்புகோல் துடுப்புகளைக் கையாளும் முறை வைப்ரோலக்ஸ் போன்றதேயாகும். ஆனால் வலது துடுப்பை அழுத்தும் போது டாஸ் உருவாகும். துடுப்புகளைத் திருகும் போது டிட்-டா-டிட்-டா வரிசை உருவாகும். இந்தச் செய்முறை இடது கைப்பழக்கம் உடையோருக்கு எதிர்ப்பதமாக இருக்கும்.

மோர்ஸ் தந்திக்குறிப்பில் இயக்குபவர்களின் திறன் அவர்கள் பணிபுரியும் ("நகல்") தந்திக்குறிப்பின் வீதம் 40 WPM ஐ விட அதிகமாக இருப்பதை வைத்து புரிந்து கொள்ளப்படுகிறது. தந்திக்குறிப்பு நகலிடுதல் சர்வதேச போட்டிகள் இன்றும் அவ்வப்போது நடத்தப்படுகின்றன. 1939 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஆஷிவில்லேயில் நடைபெற்ற போட்டியில் டெட் ஆர். மெக்கல்ராய் 75.2 WPM ஐ முடித்திருந்தது இன்றும் முறியடிக்கப்படாத சாதனையாக இருக்கிறது.[5] அவரது அதிவேக அனுப்புதல் பற்றிய ஆன்லைன் புத்தகமான வில்லியம் பைர்பாண்ட் N0HFF இல், சில இயக்குபவர்கள் 100 WPM ஐக் கடக்கலாம் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த முறை அவர்கள் வார்த்தைகளுக்கு பதிலாக சொற்கள் மற்றும் வாக்கியங்களைக் "கேட்கலாம்". 1942 ஆம் ஆண்டு அமெரிக்க ஒன்றிய இராணுவ செயல்பாடுகளின் செய்முறைக்காட்சியின் போது 35 WPM வேகத்தில் ஹேர்ரி டர்னர் W9YZE (d. 1992) செய்து காட்டினார் (இது நேரடி திறவுச்சொல்லில் அதுவரை அனுப்பியிருக்கப்படாத வேகம் ஆகும்).

மற்ற பயன்பாடுகள்

தொகு
 
2005 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் அமெரிக்க ஒன்றியக் கடற்படையை சேர்ந்த ஒரு மாலுமி மோர்ஸ் தந்திக்குறிப்பு சமிக்ஞைகளை அனுப்புகிறார்.

2009 ஆம் ஆண்டு முதல் வணிக ரீதியான வானொலித்தந்தி உரிமங்கள் அமெரிக்காவில் ஒருங்கிணைந்த தகவல் தொடர்புகள் ஆணையத்தால் வழங்கப்பட்டு வருகிறது. கப்பல் மேல்தளத்திற்காகவும் கலங்கரை விளக்கத்திலும் இயக்குபவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட உரிமமான இதைப் பெற வேண்டுமானால் உயர்தர வானொலிக் கோட்பாடில் எழுத்துத்தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும். மேலும் 20 WPM தந்திக்குறிப்பை அனுப்பும் ஆற்றலை நிரூபிக்க வேண்டும் ["பழைய" (20 WPM) அமெச்சூர் கூடுதல் வகுப்பு உரிமம் வைத்திருப்பவர்களுக்கு இந்த நிபந்தனையில் விலக்களிக்கப்படுகிறது]. எனினும் 1999 ஆம் ஆண்டு முதல் செயற்கைக்கோளின் பயன்பாடு மற்றும் மிகவும் அதிகமான அதிர்வெண்ணுடைய கடல்சார்ந்த தொடர்புகள் முறை (GMDSS) ஆகியவற்றின் பயன்பாடு தந்திக்குறிப்பை உபயோகமற்றதாக்கியது.

VORகள் மற்றும் NDBக்கள் போன்ற வானொலி அதிர்வெண் உபகரணங்களில் வான்வழித் தொடர்பான பயன்பாட்டிற்காக மோர்ஸ் தந்திக்குறிப்பு வடிவத்தில் தகவல்களை அனுப்பப்படுகின்றன. எனினும் தற்போது பெரும்பாலான VOR நிலையங்கள் குரல் அடையாளங்காணுதலையும் வழங்கி வருகின்றன.[6]

அமெரிக்க ஒன்றிய கடற்படை உள்ளிட்ட பல இராணுவக் கப்பல்களில் மோர்ஸ் தந்திக்குறிப்பில் செய்திகளைப் பரிமாறிக் கொள்ள நீண்ட காலமாக சமிக்ஞை விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. தொடரும் நவீன பயன்பாடுகள் மெல்ல மெல்ல தகவல் தொடர்பு கொள்ளும் முறையிலிருந்து வானொலியை அமைதிப்படுத்திவிடும்.

பொது மக்களுக்கான பயன்பாடுகள்

தொகு
 
SOS-மோர்ஸ் தந்திக் குறிப்பின் மாதிரி வடிவம்.

பொது மக்களின் ஒரு முக்கிய பயன்பாடு SOS வழியாக உதவிக்கான சமிக்ஞை ஆகும் "· · · — — — · · · ". இதனைப் பல வழிகளில் அனுப்ப முடியும்: கீயிங் ரேடியோ ஆன் மற்றும் ஆஃப், கண்ணாடியை ஒளிரச்செய்தல், ஒளிரும் விளக்கை ஆட்டுதல் மற்றும் இது போன்ற முறைகளைக் கொண்டு அனுப்ப முடியும்.

உதவிகரமான தொழில்நுட்பமாக மோர்ஸ் தந்திக்குறிப்பு

தொகு

மோர்ஸ் தந்திக்குறிப்பு ஒரு உதவிகரமான தொழில்நுட்பமாகவும் பணிபுரிகிறது. பல்வேறு இயலாமைகளில் தொடர்புகொள்வதற்கு மக்களுக்கு இது உதவியாக இருக்கிறது. தீவிர இயக்க இயலாமை உடைய நபர்களால் மோர்ஸை அனுப்ப இயலும். இருந்தாலும் அவர்களுக்கு சிறிதளவு இயக்கக் கட்டுப்பாடு தேவை. சில நிகழ்வுகளில் இதற்கு மற்றாக பிளாஸ்டிக் குழாய்களை ஊதுதல் அல்லது உறிஞ்சுதல் போன்றவற்றை மேற்கொள்ளலாம் ("பஃப் மற்றும் சிப்" இடைமுகம்). தீவிர இயக்கக் குறைபாடுகள் உடைய மக்களும், உணர்வு ரீதியான குறைபாடுகள் (எடுத்துக்காட்டாக காது கேட்காத மற்றும் கண் தெரியாத மக்கள்) உடையவர்களும் மோர்ஸ் தந்திக்குறிப்பைத் தோல் இரைவால் பெற முடியும்.

கப்பல் மேல்தளத்தில் இயங்கும் வானொலியை இயக்கும் வயதான ஒரு நபர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு பேசும் திறனையும் எழுதும் திறனை இழந்தார். அவர் மோர்ஸில் அவரது கண்களை சிமிட்டி அவரது மருத்துவரிடம் தொடர்பு (ரேடியோ அமெச்சூர்) கொண்டார் என்ற ஒரு நிகழ்வு வானொலி அமெச்சூர் பத்திரிகையான QST இல் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப்போன்ற மற்றொரு நிகழ்வு 1966 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. போர்க்கைதியான ஜெரெமியா டெண்டன் அவரைக் கைது செய்த வியட்நாமியர்கள் கொண்டு வந்த தொலைக்காட்சியில் மோரிஸைப் பயன்படுத்தி TORTURE என்ற வார்த்தை ஒளிரும்படி செய்தார்.

சுட்டிக்காட்டுதல் மற்றும் நேரம்

தொகு

சர்வதேச மோர்ஸ் தந்திக்குறிப்பு ஐந்து அடிப்படைக்கூறுகளால் உருவாக்கப்பட்டுள்ளது, அவை:

  1. சிறிய குறி, புள்ளி அல்லது 'டிட்' (·) — ஒரு அலகு நீண்டது
  2. நீண்ட குறி, கோடு அல்லது 'டா' (–) — மூன்று அலகுகள் நீண்டது
  3. எழுத்துருக்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளி (புள்ளிகள் மற்றும் கோடுகளுக்கு இடையில் உட்புறமுள்ள எழுத்துரு) — ஒரு அலகு நீண்டது
  4. சிறிய இடைவெளி (எழுத்துக்களுக்கு இடையில்) — மூன்று அலகுகள் நீண்டது
  5. இடைநிலை இடைவெளி (வார்த்தைகளுக்கு இடையில்) — ஏழு அலகுகள் நீண்டது[7]

பல வழிகளில் மோர்ஸ் தந்திக்குறிப்பைப் பரிமாற்றலாம்: தொடக்கத்தில் மின் துடிப்புகள் தந்திக் கம்பி வழியாக செலுத்தப்பட்டது. பின்னர் ஒலி தொனி, சிறிய மற்றும் நீண்ட தொனிகளுடன் கூடிய வானொலி சமிக்ஞை அல்லது ஆல்டிஸ் விளக்கு அல்லது ஹெலியோகிராப் போன்ற கருவிகளைப் பயன்படுத்தி இயந்திர அல்லது காட்சி சமிக்ஞை (எடுத்துக்காட்டாக ஒளிரும் விளக்கு) போன்றவையும் பரிமாற்றப்பட்டது.

உண்மையில் இரண்டு நிலைகளைப் (ஆன் மற்றும் ஆஃப்) பயன்படுத்தி பரிமாற்றக் கூடியதாக மோர்ஸ் தந்திக்குறிப்பு உள்ளது. அதனால் இது டிஜிட்டல் தந்தியின் முந்தைய வடிவம் ஆகும். உண்மையில் சொல்ல வேண்டுமானால் அவை கண்டிப்பாக பைனரி அல்ல. ஏனெனில் அவை ஐந்து அடிப்படைக் கூறுகளை உடையவை (பார்க்க குயினரி). எனினும் இதற்கு மோர்ஸ் தந்திக்குறிப்பில் பைனரி தந்திக்குறிப்பை சுட்டிக்காட்ட முடியாது என்று பொருள் அல்ல. வேறு வகையில் பார்த்தால் இது செய்திகளைப் பரிமாற்றும் போது தந்தி இயக்குபவர்கள் செயல்படுத்தும் செயல்பாடாக இருக்கிறது. மேற்கண்ட வரையறையில் செயலாற்றியதிலிருந்து தொடர்ந்து ஒரு 'அலகை' ஒரு பிட்டாக வரையறுக்கும்போது, ஏதேனும் ஒரு மோர்ஸ் தந்திக்குறிப்பு வரிசையை பின்வரும் ஐந்து அடிப்படைக் கூறுகளை உடைய இணைப்பில் பார்க்கலாம்:

  1. சிறிய குறி, புள்ளி அல்லது 'டிட்' (·) — 1
  2. நீண்ட குறி, கோடு அல்லது 'டா' (–) — 111
  3. எழுத்துருக்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளி (புள்ளிகள் மற்றும் கோடுகளுக்கு இடையில் உட்புறமுள்ள எழுத்துரு) — 0
  4. சிறிய இடைவெளி (எழுத்துக்களுக்கு இடையில்) — 000
  5. இடைநிலை இடைவெளி (வார்த்தைகளுக்கு இடையில்) — 0000000

புள்ளிகள் மற்றும் கோடுகள் எப்போதுமே இடைவெளிகளால் பிரிக்கப்பட்டிருக்கும். அந்த இடைவெளிகள் எப்போதும் புள்ளிகள் மற்றும் கோடுகளால் பிரிக்கப்பட்டிருக்கும் சாத்தியக்கூறுகளில் மட்டுமே இந்த முறை செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக தந்தி திறவுச்சொல் போன்ற கையால் இயக்கப்படும் கருவிகளால் மோர்ஸ் செய்திகள் பரிமாற்றப்படுகின்றன, அதனால் பல மாறுபாடுகள் அனுப்புநர் மற்றும் பெறுநரின் திறனைப் பொறுத்து உருவாக்கப்படுகின்றன. மிகவும் அனுபவம் மிக்க இயக்குபவர்களால் அதிகமான வேகத்தில் அனுப்பவும் பெறவும் முடியும். மேலும் தனிப்பட்ட இயக்குபவர்கள் சற்றே மாறுபடுவார்கள், எடுத்துக்காட்டாக சற்றே நீண்ட அல்லது சிறிய கோடுகள் அல்லது இடைவெளிகளை அநேகமாய் ஒரு குறிப்பிட்ட எழுத்துருக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள். இது அவர்களது "ஃபிஸ்ட்" என அழைக்கப்படுகிறது. மேலும் பெறுநர்கள் குறிப்பிட்ட தனிநபர்களை தனியாக அடையாளம் காண முடியும்.

மோர்ஸ் தந்திக்குறிப்பின் வேகம் wpm அல்லது cpm ஆகியவற்றால் கணக்கிடப்படுகிறது, பாரிஸ் நிர்ணயித்த அளவுகளின் படி, "Paris" என்ற வார்த்தையை அனுப்ப ஒரு நிமிடத்திற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நேரத்தில் அனுப்ப வேண்டும் என மோர்ஸ் பரிமாற்ற வேகம் வரையறுக்கப்பட்டுள்ளது. இதில் Paris என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஏனெனில் ஆங்கில மொழியில் உள்ள பொதுவான உரையைச் சுட்டிக்காட்டுவதற்காக அது பயன்படுத்தப்பட்டது. மேலும் 1865 ஆம் ஆண்டில் சர்வதேச தந்தி மாநாடு பாரிஸில் நடைபெற்ற போது அந்த முடிவு எடுக்கப்பட்டதால் அந்த வார்த்தை தனித்துவம் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டது.[சான்று தேவை]

தற்போது தகவல் பெற அனுப்பப் பயன்படுத்தப்படும் வார்த்தையின் நீளம் 50 அலகுகளாக (7 அலகுகள் கொண்ட வார்த்தை இடைவெளிகள் உட்பட) இருக்கிறது. பாரிஸ் மாநாட்டில் நிர்ணயிக்கப்பட்ட வார்த்தை இடைவெளி 5 அலகுகளாக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது,[சான்று தேவை] தகவல் பெற அனுப்பப் பயன்படுத்தப்படும் மொத்த வார்த்தையின் நீளம் 48 அலகுகள் மட்டுமே, அவற்றை பழைய இலக்கியங்களில் காணலாம்.

பல்வேறு தருணங்களில் நடத்தப்பட்ட பெறும் வேக போட்டிகளின் வெளியீடுகளின் மதிப்பீடுகளில் இரண்டு வார்த்தை இடைவெளி நீளங்களில் 40% வேறுபாடுகள் இருந்தது. 5 அலகுகள் வார்த்தை இடைவெளியில் X WPM நகலெடுப்பதற்கு, 7 அலகுகள் வார்த்தை இடைவெளியில் அதே அளவு வேகத்தில் அதே உரையை அனுப்புவதை விட மிகவும் கடினமாக இருக்கிறது.

கருத்தைக் கவர்கிற வகையில் "Morse" என்ற வார்த்தையும் 50 அலகுகள் கொண்டதாக இருக்கிறது.

ஒரு அலகிற்கான நேரம் கீழ்கண்ட சூத்திரத்தினால் கணக்கிடப்படுகிறது:

T = 1200 / W

அல்லது

T = 6000 / C

இங்கு: T என்பது மில்லிசெகண்டுகளில் நேரத்தின் அலகு, W என்பது wpm இல் வேகம் மற்றும் C என்பது cpm இல் வேகம்.

நேர நடைமுறைக்கான எடுத்துக்காட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மோர்ஸ் தந்திக்குறிப்பு வடிவத்தில் "MORSE CODE" என்ற சொற்றொடர், பொதுவாக கீழ்கண்டவாறு எழுதப்பட வேண்டும். அதில் - என்பது டாஸையும், · என்பது டிட்ஸையும் குறிக்கிறது:

-- --- ·-· ··· ·       -·-· --- -·· ·
M   O   R   S  E        C    O   D  E

பின்வருவன இந்த சொற்றொடருக்கான துல்லியமான நடைமுறை நேரம். அதில் = என்பது "சமிக்ஞை ஆனைக் (on)" குறிக்கிறது மற்றும் . என்பது "சமிக்ஞை ஆஃபைக் (off)" குறிக்கிறது. ஒவ்வொன்றும் சரியாக ஒரு டிட் நேர நீளம் உடையவை:

1 2 3 4 5 6 7 8 
12345678901234567890123456789012345678901234567890123456789012345678901234567890123456789
 
M------ O---------- R------ S---- E C---------- O---------- D------ E
===.===...===.===.===...=.===.=...=.=.=...=.......===.=.===.=...===.===.===...===.=.=...=
^ ^ ^ ^ ^ 
| டா டிட் | | 
குறியீடு இடைவெளி எழுத்து இடைவெளி வார்த்தை இடைவெளி

மோர்ஸ் தந்திக்குறிப்பில் எழுத்துருக்களின் இறுதியில் வரும்போது கோடுகளுக்கு "டா" எனவும் புள்ளிகளுக்கு "டிட்" எனவும், புள்ளிகள் எழுத்துருக்களின் உட்புறத்தில் அல்லது ஆரம்பத்தில் இடம்பெறும் போது "டை" எனவும் பொதுவாக பேச அல்லது எழுதப்படுகிறது. அவ்வகையில், மோர்ஸ் தந்திக்குறிப்பு வரிசை பின்வருமாறு:

M   O   R   S  E         C    O   D  E
-- --- ·-· ··· · (space) -·-· --- -·· ·

இவை சொற்களாக:

டா-டா டா-டா-டா டை-டா-டிட் டை-டை-டிட் டிட், டா-டை-டா-டிட் டா-டா-டா டா-டை-டிட் டிட் .

மோர்ஸை படிக்க எழுத கற்றுக்கொள்வதில் சிறு பகுதி மேலே கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது; தவிர, அனைத்து எழுத்துக்களின் மற்றும் குறியீடுகளின் ஒலிகள் , அனுப்பும்போதும் பெறும் போதும் எவ்வாறு உள்ளது என்பதையும் கற்றுக் கொள்ள வேண்டும்.

மோர்ஸ் தந்திக்குறிப்பைக் கற்றுக்கொள்ளுதல்

தொகு

டொனால்ட் ஆர். "ரஸ்" ஃபார்ன்ஸ்வொர்த் என்பவரால் பெயரிடப்பட்ட ஃபார்ன்ஸ்வொர்த் முறையைப் பயன்படுத்தி மக்கள் மோர்ஸ் தந்திக்குறிப்பைக் கற்கிறார்கள். மேலும் அழைப்புக் குறி W6TTB ஆல் நன்கு அறியப்பட்ட அவரது எழுத்துக்கள் மற்றும் மற்ற குறியீடுகளை அவற்றின் முழு இலக்கு வேகத்தில் அனுப்பவும் பெறவும் சொல்லித் தருகிறார். அவை புள்ளிகள், கோடுகள் மற்றும் இடைவெளிகள் ஆகியவற்றில் சாதாரண தொடர்புடைய நேரத்துடன் ஒவ்வொரு குறியீடும் அந்த வேகத்தில் இருக்கும்படியும் இருந்தன. எனினும், தொடக்கத்தில் சுலபமாக கற்றுக்கொள்வதற்காக எழுத்துக்கள் மற்றும் குறியீடுகளில் ஒலி "உருவம்" உருவாக்குவதற்கு "சிந்திக்கும் நேரம்" கொடுப்பதற்காக, குறியீடுகளுக்கும் வார்த்தைகளுக்கும் இடையில் மிகைப்படுத்தப்பட்ட இடைவெளிகள் பயன்படுத்தப்பட்டன. அந்த இடைவெளிகளைப் பின்னர் பயிற்சி மற்றும் பழக்கத்தின் மூலம் குறைத்துவிட முடியும். மற்றொரு பிரபலமான கற்றுக் கொடுக்கும் முறையாக கோச் முறை இருக்கிறது. இது ஜெர்மன் உளவியலாளர் லூட்விக் கோச்சால் பெயரிடப்பட்டது. இதில் ஆரம்பக் கட்டத்திலேயே முழு இலக்கு வேகம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இரண்டு எழுத்துருக்களை வைத்து மட்டுமே ஆரம்பிக்கப்படுகிறது. அந்த இரண்டு எழுத்துருக்கள் கொண்ட தொடர் 90% பிழையின்றி நகலெடுக்கப்படும் போது, கூடுதல் எழுத்துருக்கள் இணைக்கப்படுகிறது. மேலும் முழு எழுத்துரு தொடர்ந்து இது போலவே தேர்ச்சி அடையும் வரை இணைக்கப்படுகிறது. வட அமெரிக்காவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனிநபர்கள் அமெரிக்க வானொலி ஒலிபரப்பு லீக்கின் தலைமையகத்தின் நிலையமான W1AW ஆல் தொடர்ந்து பயிற்சிக்காக ஒலிபரப்பப்படும் திட்டமிட்ட தந்திக்குறிப்பைக் கேட்பதன் மூலம் தங்கள் தந்திக்குறிப்பு அறிந்து கொள்ளும் வேகத்தை (எழுத்துருக்களின் தொடக்க நினைவாற்றலுக்குப் பிறகு) அதிகரித்துள்ளார்கள்.

எழுத்துக்கள், எண்கள், நிறுத்தக்குறிகள்

தொகு
 
This section includes inline links to audio files. If you have trouble playing the files, see Wikipedia Media help.
எழுத்துரு குறியீடு எழுத்துரு குறியீடு எழுத்துரு குறியீடு எழுத்துரு குறியீடு எடுத்துரு குறியீடு எழுத்துரு குறியீடு
A · — J · — — — S · · · 1 · — — — — முற்றுப்புள்ளி [.] · — · — · — முக்காற்புள்ளி [:] — — — · · ·
B — · · · K — · — T 2 · · — — — காற்புள்ளி ] [,] — — · · — — அரைப்புள்ளி [;] — · — · — ·
C — · — · L · — · · U · · — 3 · · · — — கேள்விக்குறி [?] · · — — · · சமக்குறி [=] — · · · —
D — · · M — — V · · · — 4 · · · · — ஒற்றை மேற்கோள்குறி ['] · — — — — · கூட்டல் குறி [+] · — · — ·
E · N — · W 5 · · · · · ஆச்சரியக்குறி [!] — · — · — — இணைகோடு, கழித்தல் குறி [-] — · · · · —
F · · — · O — — — X — · · — 6 — · · · · சரிவுக்கோடு [/], பின்னக்குறி — · · — · அடிக்கோடு [_] · · — — · —
G — — · P · — — · Y — · — — 7 — — · · · தொடக்க அடைப்புக்குறி [(] — · — — · மேற்கோள் குறி ["] · — · · — ·
H · · · · Q — — · — Z — — · · 8 — — — · · முடிவு அடைப்புக்குறி [)] — · — — · — டாலர் குறி [$] · · · — · · —
I · · R · — · 0 — — — — — 9 — — — — · உம்மைக்குறி [&], காத்திருப்பு · — · · · அட் குறி [@] · — — · — ·

நிறுத்தக்குறிக்கு (!) எந்த நிர்ணயிக்கப்பட்ட சுட்டிக்காட்டுதலும் கிடையாது. எனினும் 1980 களில் ஹேத்கிட் நிறுவனத்தால் (அமெச்சூர் வானொலி கருவிகளுக்கான அசெம்ப்ளி கிட்ஸ் விற்பனையாளர்) KW டைகிராப் (— · — · — — ) முன்மொழியப்பட்டது. மோர்ஸ் தந்திக்குறிப்பு மொழிபெயர்ப்பு மென்பொருளில் இந்த பதிப்பு முன்மொழியப்பட்ட போதும் உலகளவில் இன்னும் பரவலாகப் பயன்படுத்தப்படுவதில்லை. கனடா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சில அமெச்சூர் வானொலி இயக்குபவர்கள் அமெரிக்க தரைவழித் தந்திக்குறிப்பிலிருந்து எடுக்கப்பட்ட பழைய MN டைகிராப்பையே (— — — · ) தொடர்ந்து பயன்படுத்த விரும்புகிறார்கள்.

&, $ மற்றும் _ குறியீடுகள் ITU வின் மோர்ஸ் தந்திக்குறிப்புக்கான பரிந்துரையில் வரையறுக்கப்படவில்லை. $ குறியீடு தந்திக்குறிப்பு பிலிப்ஸ் தந்திக்குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. SX ஆக தரைவழித் தந்திக்குறிப்பால் பெரும் திறளான எண்ணிக்கையிலான சுருக்கப்பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலே குறிப்பிடப்பட்ட &- குறியீடு மோர்ஸின் காத்திருப்புக்கான குறியீடாகவும் பயன்படுத்தப்படுகிறது.

மே 24, 2004 அன்று, முதல் பொது மோர்ஸ் தந்தி பரிமாற்றத்தின் 160 ஆவது ஆண்டு விழாவின் போது சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (ITU-R) வானொலி தகவல் தொடர்பு ஆணையம் சம்பிரதாயமாக @ ("வணிக ரீதியிலான அட்" அல்லது "கம்அட்") எழுத்துருவை அதிகாரப்பூர்வ மோர்ஸ் எழுத்துரு தொகுப்புடன் இணைத்தது, AC டைகிராபைப் (· — — · — · ) பயன்படுத்தி அதன் வரிசை சுட்டிக்காட்டப்பட்டது. இந்த வரிசை "A[T] C[OMMERCIAL]"ஐக் குறிக்கும் அல்லது "a" என்ற எழுத்தைச் சுற்றியுள்ள சுழற்சி "C" இரண்டையும் குறிக்கும் என யூகங்கள் நிலவுகின்றன.[8] மோர்ஸ் தந்திக்குறிப்பில் மின்னஞ்சல் அனுப்புவதற்கு புதிய எழுத்துரு சேர்க்கப்பட்டது. மேலும் முதல் உலகப்போரில் இருந்து மோர்ஸ் எழுத்துரு தொகுப்பில் இணைக்கப்பட்டதில் இதுவே முதல் அதிகாரப்பூர்வமான இணைப்பு ஆகும்.

புரோசைன்ஸ்

தொகு
குறியீடு எழுத்துரு(க்கள்) குறியீடு எழுத்துரு(க்கள்) குறியீடு
காத்திருப்பு · - · · ·  தவறு · · · · · · · ·  புரிகிறது · · · - · 
பரிமாற்றத்திற்கு அழைப்புவிடுத்தல் - · - பணி முடிவு · · · - · - ஆரம்ப சமிக்ஞை - · - · -

ITU பரிந்துரையால் வரையறுக்கப்பட்டது.

மோர்ஸ் தந்திக்குறிப்புக்கு ஆங்கிலம் அல்லாத விரிவாக்கங்கள்

தொகு
குறியீடு எழுத்துரு குறியீடு எழுத்துரு குறியீடு
ä (மேலும் æ மற்றும் ą) · — · — è (மேலும் ł) · — · · – ñ (மேலும் ń) — — · — —
à (மேலும் å) · — — · — é (மேலும் đ மற்றும் ę) · · — · · ö (மேலும் ø மற்றும் ó) — — — ·
ç (மேலும் ĉ மற்றும் ć) — · — · · ĝ — — · — · ŝ · · · — ·
ch (மேலும் š) — — — — ĥ — · — — ·  (பயன்பாட்டில் இல்லை)
— — — —   (புதியது)
þ ("தோர்ன்") · — — · ·
ð ("Eத்") · · — — · ĵ · — — — · ü (மேலும் ŭ) · · — —
ś · · · — · · · ź — — · · — · ż — — · · —

மோர்ஸ் தந்திக்குறிப்புக்கு இலத்தீன் அல்லாத விரிவாக்கங்கள்

தொகு

மோர்ஸ் தந்திக்குறிப்பில் மற்ற எழுத்துகளைப் பார்க்க. சீனத்துக்கு நான்கு இலக்க தந்திக்குறிப்புகளுக்கு சீன எழுத்துருக்களைத் திட்டமிட சீனத் தந்திக் குறிப்பு பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த இலக்கங்களை அனுப்ப நிலையான மோர்ஸ் தந்திக்குறிப்பு பயன்படுத்தப்படுகிறது. கொரியனுக்கு மோர்ஸ் தந்திக்குறிப்பில் அதே தந்திக்குறிப்புகளுக்கு கொரியன் மோர்ஸ் தந்திக்குறிப்பு பரணிடப்பட்டது 2008-04-30 at the வந்தவழி இயந்திரம் வழியாக ஹேங்குலைத் (கொரியன் எழுத்து) திட்டமிட SKATS பயன்படுத்தப்படுகிறது. மேலும் அதன் சம மதிப்புக்கு ரோமன் எழுத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

சர்வதேச தந்திக்குறிப்புக்கான மிகவும் பொதுவான எழுத்துருக்களின் மாற்றுக் காட்சி

தொகு

சில மோர்ஸ் தந்திக்குறிப்பு சொல்லிக்கொடுக்கும் அல்லது கற்றுக்கொள்ளும் முறைகளில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இருபிரிவு தேடல் அட்டவணைப் பயன்படுத்தப்படுகிறது.

 
இருபிரிவு தேடல் அட்டவணையின் ஒரு வரைபட விளக்கம்: ஒரு பயனர் எழுத்துருக்கள் முடிவடையும் வரை ஒவ்வொரு புள்ளிக்கும் இடது புறம் செல்ல வேண்டும் ஒவ்வொரு கோடுக்கும் வலது புறம் செல்ல வேண்டும்.
T — M — — O — — — CH — — — —
Ö — — — ·
G — — · Q — — · —
Z — — · ·
N — · K — · — Y — · — —
C — · — ·
D — · · X — · · —
B — · · ·
E! A · — W · — — J · — — —
P · — — ·
R · — · Ä · — · —
L · — · ·
I · · U · · — Ü · · — —
F · · — ·
S · · · V · · · —
H · · · ·

]]

ஊடகம்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. ARRLWeb: ARRLWeb: லேர்ன் மோர்ஸ் கோட் (CW)!
  2. "IARUWeb: த இண்டர்நேசனல் அமெச்சூர் ரேடியோ யூனியன்". Archived from the original on 2012-09-06. பார்க்கப்பட்ட நாள் 2009-12-04.
  3. ARRLWeb: இட்டாலி ஜாயின்ஸ் நோ-கோட் ரேங்க்ஸ் ஏஸ் FCC ரிவைவ்ஸ் மோர்ஸ் டிபேட் இன் த US
  4. "1998 Biennial Regulatory Review — Amendment of Part 97 of the Commission's Amateur Service Rules" (PDF). பார்க்கப்பட்ட நாள் 4 December 2005. {{cite web}}: Unknown parameter |dateformat= ignored (help)
  5. "The Art & Skill of Radio Telegraphy". 20 April 2002. Archived from the original on 2006-04-24. பார்க்கப்பட்ட நாள் 2006-04-21.
  6. "Aeronautical Information Manual (AIM)". பார்க்கப்பட்ட நாள் 2007-12-10.
  7. International Morse Code (PDF), ITU-R M. 1677, 2004, பார்க்கப்பட்ட நாள் 2008-01-02
  8. "International Morse Code Gets a New ITU Home, New Character". பார்க்கப்பட்ட நாள் 27 February 2007. {{cite web}}: Unknown parameter |dateformat= ignored (help)

புற இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Morse code
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோர்ஸ்_தந்திக்குறிப்பு&oldid=4064219" இலிருந்து மீள்விக்கப்பட்டது