மோலினா தேவி

மோலினா தேவி (Molina Devi) (1917 - 13 ஆகத்து 1977), மோலினா தேபி மற்றும் மாலினா தேபி என்றும் அழைக்கப்படும் இவர், [1] பெங்காலி, பாலிவுட் திரைப்படம்/நாடகங்களில் பணியாற்றிய ஓர் வங்காள இந்திய நடிகை ஆவார். ஒரு நடிகையாக, இவர் பலவிதமான பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். பின்னர் அடிக்கடி தாய் பாத்திரங்களில் குறிப்பாக 19ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவரான இராமகிருஷ்ணரின் புரவலரான இராணி ராசமணி, போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் பெரும்பாலும் பெங்காலியிலும், இந்தியிலும் பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் குருதாஸ் பானர்ஜியுடன், கொல்கத்தாவை அடிப்படையாகக் கொண்ட 'எம்ஜி என்டர்பிரைசஸ்' என்ற நாடகக் குழுவையும் நிறுவினார்.[2] :688

மோலினா தேவி
பிறப்பு1917
கொல்கத்தா, பிரித்தானிய இந்தியா
இறப்பு13 ஆகத்து 1977
கொல்கத்தா
பணிநடிகை (நாடகம்/ திரைப்படம்); நாடக நிறுவனத்தின் நிறுவனர்
செயற்பாட்டுக்
காலம்
1920s–1970s
வாழ்க்கைத்
துணை
குருதாஸ் பானர்ஜி

ஆரம்ப கால வாழ்க்கைதொகு

மோலினா தேவி 13 ஆகத்து 1917 அன்று கொல்கத்தாவில் பிறந்தார்.:275[3] :13

தொழில்தொகு

மோலினா தேவி அபரேஷ் சந்திர முகோபாத்யா என்பவரின் கீழ் பயிற்சியாளராக தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் தனது 8 வயதில் ஒரு ஊமைத் திரைப்படத்தில் அறிமுகமானார்.:275[1] அதன்பிறகு 1920களில் பெங்காலி நாடகங்களில் புராண, வரலாற்று நாடகங்களில் நடனக் கலைஞராகப் பணியாற்றினார். பின்னர் சில சமயங்களில் ஜஹாங்கிர் என்ற நாடகத்தில் (1929) இளம்வயது தாராவின் பாத்திரத்தை ஏற்று நடித்தார். பின்னர் நாடகங்களில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார்.[4]:275[3][5]:13

:275 இவர், பாலிவுட் படங்களில் சில மறக்கமுடியாத பாத்திரங்களில் நடித்துள்ளார். இவரது ஆரம்பகால வாழ்க்கையில்  பிரமதேஷ் பருவாவின் ரஜத் ஜெயந்தி (1939) போன்ற படங்கள் உட்பட பல்வேறு வேடங்களில் நடித்தார்.[6]

1954 ஆம் ஆண்டில் இவர் இந்தியில் வெளிவந்த புராணபகத் என்ற பக்தி வாழ்க்கை வரலாறுத் திரைப்படத்தில் நடித்தார். [7] 1955 இல், மோலினா இராணி ராசமணி படத்தில் தலைப்பு பாத்திரத்தில் நடித்தார். இவர் கொல்கத்தாவைச் சேர்ந்த 'எம்ஜி என்டர்பிரைசஸ்' என்ற நாடகக் குழுவை நிறுவினார். மோலினா ரங்கனா நாடக நிறுவனத்தில் தலைமை கலைஞராகவும் பணியாற்றினார். இவர் வானொலியில் பாடகியாகவும் நிகழ்ச்சிகளை வழங்கினார். மேலும், வங்காளத்தின் மகிளா சில்பி மகால் என்ற பெண் கலைஞர்களுக்கான நலச் சங்கத்தை உருவாக்க பங்களித்தார். நாடகத் துறையில் இவரது பங்களிப்பிற்காக, இவர் சங்கீத நாடக அகாதமி விருதைப் பெற்றார்.[3]

மோலினா தேவியும் நடிகர் குருதாஸ் பானர்ஜியும்,[8] ஒன்றாக சேர்ந்து 'எம்ஜி என்டர்பிரைசஸ்' என்ற தங்களின் சொந்த நாடக நிறுவனத்தை நிறுவினர்.:688 இந்த நிறுவனம் "பக்தி நாடகங்களிலும், வணிகத் தயாரிப்புகளிலும் நிபுணத்துவம் பெற்றிருந்தது". இதில், பானர்ஜி இராமகிருஷ்ணர் உட்பட பிற புனிதர்களின் பாத்திரங்களை ஏற்று நடித்திருந்தார்.:275

ஏற்று நடித்த பாத்திரங்கள்தொகு

மோலினா தேவி மேடைகள், திரைப்படங்கள் இரண்டிலும் பல வேடங்களில் நடித்தார். பல முறை இராணி ராசமணியாக நடித்துள்ளார். 1950களில் இருந்து 1970கள் வரை, பொதுவாக இராணி ராசமணியை பெங்காலி நாடகங்களிலும் திரைப்படங்களிலும் சித்தரித்தார். இராணி ராசமணி வேடத்தில் நடித்து 1955இல் வெளியான திரைப்படங்களில் இராணி ராசமணியும் அடங்கும். இவர் இராணி ராசமணியாக நடித்த நாடக நாடகங்களில் ஜுகதேபாடா (1948) , தாக்கூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா (1955) ஆகியவை அடங்கும்.

இறப்புதொகு

மோலினா தேவி 13 ஆகத்து 1977 அன்று கொல்கத்தாவில் இறந்தார்.

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 Ananda Lal The Oxford companion to Indian theatre 2004- Page 275 "Trained in acting by Aparesh Mukhopadhyay, she debuted in a silent movie as an 8-year-old. She began her stage career, like many of ... She teamed up with Gurudas Bandyopadhyay, her co-artist in theatres to form a troupe, M. G. Enterprise, which specialized in commercial productions of devotional drama where he enacted Ramakrishna and other holy men. She made quite a stir as the lead in the ..."
  2. The Story of the Calcutta Theatres, 1753-1980. https://books.google.com/books?id=2Vg4AAAAIAAJ. 
  3. 3.0 3.1 3.2 "Molina Devi". sangeetnatak.gov.in. டிசம்பர் 9, 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. December 7, 2018 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  4. Ananda Lal (2004). The Oxford companion to Indian theatre. New Delhi: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0195644468. https://books.google.com/books?id=DftkAAAAMAAJ. 
  5. Lal, Ananda (2009) (in en). Theatres of India: A Concise Companion. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-569917-3. https://books.google.com/books?id=goELAQAAMAAJ&q=molina. 
  6. Anonymous. "Rani Rashmoni (1955)". Indiancine.ma. 29 December 2019 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Molina Devi". December 7, 2018 அன்று பார்க்கப்பட்டது.
  8. "Mantra Shakti (Chitta Bose) 1954". December 7, 2018 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோலினா_தேவி&oldid=3288090" இருந்து மீள்விக்கப்பட்டது