மோல் நாள்

மோல் நாள் (Mole Day) என்பது வேதியியலாளர்களும், வேதியியல் மாணவர்களும் ஆண்டு தோறும் அக்டோபர் 23 ஆம் நாளன்று காலை 06:02 மணிக்கும் மாலை 06:02 மணிக்கும் இடையில் அதிகாரபூர்வமற்ற நிலையில் எடுத்துக் கொள்ளும் ஒரு விடுமுறை நாள் ஆகும்.[1][2][3] இந்நாளை அவர்கள் அமெரிக்க முறையில் 6:02 10/23 எனக் குறிக்கிறார்கள். நேரம், நாள் ஆகியன அவகாதரோ மாறிலியைக் (6.02×1023) கொண்டு குறிக்கப்பட்டது. அவகாதரோ மாறிலி என்பது ஒரு மோல் வேதிப் பொருளில் காணப்படும் துணிக்கைகளின் (அணுக்கள் அல்லது மூலக்கூறுகள்) எண்ணிக்கை ஆகும்.

1980களில் த சயன்சு டீச்சர் என்ற இதழில் வெளிவந்த ஒரு கட்டுரையில் முதற்தடவையாக மோல் நாள் பற்றிய கருத்து வெளியிடப்பட்டது.[4] இக்கட்டுரையினால் ஈர்க்கப்பட்ட மோரிசு ஓலெர் என்ற விஸ்கொன்சின் மாநில வேதியியல் ஆசிரியர் 1991 மே 15 ஆம் நாள் தேசிய மோல் நாள் நிறுவனத்தை (National Mole Day Foundation NMDF) ஆரம்பித்தார்.[4]

அமெரிக்க ஐக்கிய நாடு, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளில் உயர்நிலைப் பள்ளிகளில் வேதியியல் அல்லது மோல் தொடர்பான பல்வேறு நிகழ்வுகள் இந்நாளில் ஒழுங்கு செய்யப்படுகின்றன. பல பாடசாலைகள் இக்காலப்பகுதியை மோல் வாரமாகவும் கொண்டாடுகின்றன.[5] அமெரிக்க வேதியியல் குமுகம் தேசிய வேதியியல் வாரமாகக் கொண்டாடுகின்றது.[2]

இவற்றையும் பார்க்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. This Week in Chemical History, அமெரிக்க வேதியியல் குமுகம், 2010-02-14 அன்று பார்க்கப்பட்டது
  2. 2.0 2.1 "National Chemistry Week Celebrates 20 Years", Chemical & Engineering News, 85 (51), December 17, 2007, 2010-02-14 அன்று பார்க்கப்பட்டது
  3. "Chemistry In The Spotlight", Chemical & Engineering News, 88 (50), டிசம்பர் 13, 2010, 2010-02-14 அன்று பார்க்கப்பட்டது
  4. 4.0 4.1 "History of National Mole Day Foundation, Inc.". moleday.org.
  5. "Chemical club wins national recognition)". Central Michigan Life (27 செப்டம்பர் 2004). பார்த்த நாள் October 8, 2012.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோல்_நாள்&oldid=1527958" இருந்து மீள்விக்கப்பட்டது