யக்னா செட்டி

இந்திய நடிகை

யக்னா செட்டி (Yagna Shetty) என்பவர் ஒரு இந்தியநடிகை ஆவார். இவர் பெரும்பாலும் கன்னட திரைப்படங்களில் பணிபுரிந்துவருகிறார். இவர் ஒந்து பிரீத்தியா கதே படத்தின் வழியாக கன்னடத் திரைத்துறையில் நடிகையாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர் எடெலு மஞ்சுநாதா என்ற படத்தில் நடித்தார். அது இவருக்கு பிலிம்பேர் சிறப்பு விருதைப்பெற்றுத் தந்தது. பின்னர் சுக்ரீவா (2010), அல்லிதே நம்மனே இல்லி பண்டி சும்மனே (2011) ஆகிய படங்களில் நடித்ததற்காக இவர் கவனிக்கப்பட்டார்.[2] தீவிரமான பாத்திரங்களை சித்தரிப்பதில் பெயர் பெற்ற இவர், லவ் குரு (2009), கள்ளா மல்லா சுல்லா (2011), உளிதவரு கண்டந்தை (2014) போன்ற விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றிபெற்ற படங்களில் தோன்றினார்.[3] இவர் 2016 ஆம் ஆண்டு வரஸ்டாதா நிகழ்ச்சியின் வழியாக தொலைக்காட்சியில் அறிமுகமானார்.

யக்னq செட்டி
பிறப்புயக்னா செட்டி
கருநாடகம், குதுரேமுக
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்மணிபால் பல்கலைக் கழகம்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2006–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
Sandeep Shetty [1] (தி. 2019)

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

யன்கா செட்டி கர்நாடகத்தின் குதுரேமுக நகரில் துளு சமூகத்தில் உமேஷ் செட்டி, ஜெயந்தி செட்டி ஆகியோருக்கு பிறந்தார். இவருக்கு மகாலட்சுமி, காயத்ரி, அஸ்வினி ஆகிய மூன்று உடன்பிறப்புகள் உள்ளனர். பனம்பூரில் உள்ள கேந்திரியா வித்யாலயா பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் மங்களூரில் உள்ள எஸ். டி. எம் கல்லூரியில் இளங்கலை வணிக மேலாண்மை (பிபிஎம்) படிப்பை முடித்தார், பின்னர் மணிப்பால் பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிக மேலாண்மை (எம்பிஏ) படித்தார்.[4][5]

தொழில்

தொகு

அறிமுகம் –2013

தொகு

2007 ஆம் ஆண்டு கன்னட மொழி திரைப்படமான ஒந்து பிரீதியா கதே படத்தில் இவர் ஷங்கர் ஆரியனுக்கு ஜோடியாக நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார். இந்த படம் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, செட்டியின் நடிப்பு பாராட்டுக்களைப் பெற்றது. ரெடிஃப் தன் விமர்சனத்தில் இவரை "நம்பிக்கைக்குரிய அறிமுகம்" என்று குறிப்பிட்டது.[6] 2009 ஆம் ஆண்டில், இவர் எடெலு மஞ்சுநாதா , லவ் குரு ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். இந்த இரு படங்களிலும் நடித்ததற்காக விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றார். நகைச்சுவைத் திரைப்படமான எடெலு மஞ்சுநாதா படத்தில் மஞ்சுநாதாவின் ( ஜக்தேஷ் ) மனைவியாக நடித்தார். இதில் நடித்ததற்காக இவருக்கு பிலிம்பேர் சிறப்பு விருது கிடைத்தது. லவ் குரு படத்தில் நடித்ததற்காக, சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார்.

செட்டி நடித்த இரண்டு படங்கள் 2010 இல் வெளியாயின. இதில் முதல் படமாக சுக்ரீவா ஆகும். அதில் இவர் சிவ ராஜ்குமார் ஜோடியாக நடித்தார். ரெடிஃப். காம் படத்தில் இனது நடிப்பை "உறுதியானது" என்று பாராட்டியது.[7] அடுத்த படமான கரி சிராத்தே படத்தில் பாரதி என்ற பாத்திரத்தில் நடித்தார். 2011 ஆம் ஆண்டு செட்டியின் மூன்று படங்கள் வெளியாயின. அவற்றில் நகைச்சுவைத் திரைப்படமான கள்ளா மல்லா சுல்லா, படத்தின் நடிப்பிற்காக இவர் விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றார். அதில் ஒரு ஊடக ஜாம்பவானின் ( ரமேஷ் அரவிந்த் ) தனைவியாகநடித்தார்.[8]

2014 - தற்போது வரை

தொகு

2014இல் வெளிவந்த செட்டியின் முதல் படம் குவாட்லே, இப்படம் விமர்சகர்களிடமிருந்து பெரும்பாலும் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. டைம்ஸ் ஆப் இந்தியா தனது விமர்சனத்தில் இவரது நடிப்பு "ஒரு முழுமையான தோல்வி" என்று கூறியது. அடுத்த படத்தில், சாரதா என்ற மீனவப் பெண்ணாகவும் , முன்னா (கிஷோர் ) மீது காதல் கொண்டவராகவும் நடித்தார். இது விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டாலும், வணிக ரீதியாக சரியாக போகவில்லை. 2014 ஆம் ஆண்டு கடைசியாக வெளியான சடகரா படத்தில் யகனா என்ற பாத்திரத்தில் நடித்தார். இது விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மார்ச் 2015 நிலவரப்படி, தாமதத்துக்கு உள்ளான செட்டி நடித்த படங்களான லவ் ஜங்ஷன், எச் / 34 பல்லவி டாக்கீஸ் மற்றும் ஆக்டோபஸ் போன்றவை வெளியீட்டிற்காக உள்ளன.[9][10] இவர் தற்போது ரமாபாய் படத்தில் படப்பிடிப்பில் உள்ளார். சமூக சீர்திருத்தவாதி பி. ஆர். அம்பேத்கரின் முதல் மனைவி ரமாபாயின் வாழ்க்கை குறித்த வாழ்க்கை வரலாற்றுப் படம் இது.[11] மேலும் ராம் கோபால் வர்மாவின் கில்லிங் வீரப்பன் படத்தில் வீரப்பனின் மனைவி முத்து லட்சுமியாக நடித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டில், செட்டி தொலைக்காட்சியில் அறிமுகமானார் தொலைக் காட்சித் தொடரான வாரஸ்டாராவில் அறிமுகமானார். அது பெண் சிசுக்கொலை பிரச்சினையை கையாளும் தொடரில் ஒரு தாயின் பாத்திரத்தில் நடித்தார்.[12][13]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

யக்னா செட்டி சந்தீப் செட்டியை 30 அக்டோபர் 2019 அன்று மங்களூரில் திருமணம் செய்து கொண்டார்.[14]

திரைப்படவியல்

தொகு

படங்கள்

தொகு
குறிப்பு
  குறிப்பிட்ட படங்கள் இன்னும் வெளியாகவில்லை
ஆண்டு படம் பாத்திரம் குறிப்பு
2007 ஒந்து பிரீத்தியா கதே சக்தி
2009 எடெலு மஞ்சுநாதா கௌரி தென்னிந்திய பிலிம்பேர் சிறப்பு விருது
2009 லவ் குரு பரிந்துரை; சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது - கன்னடம்
2010 சுக்ரீவா பூஜா
2010 கரி சிரட்டி பாரதி
2011 பஞ்சமூர்த்தா
2011 அல்லிதே நம்மனே இல்லி பண்டி சும்மனே
2011 கல்லா மல்லா சுள்ளா ரம்யா
2014 குவாட்டில் நகி
2014 உளிதவரு கண்டந்தை சாரதா
2014 சடகரா யக்னா
2015 ஆக்டோபஸ்
2016 கில்லிங் வீரப்பன் முத்துலட்சுமி பரிந்துரை; துணை நடிகருக்கான சிறந்த நடிகைக்கான சிமா விருது - கன்னடம்
2016 ரமாபாய் ராமாபாய்
2017 களத்தூர் கிராமம் செலவாம்பா தமிழ் திரைப்படம்
2019 லட்சுமிஸ் என்டிஆர் லட்சுமி பார்வதி தெலுங்கு படம்
2019 ஆப்பபரேசன் நட்சத்திரா சுமிதா
2019 கதா சங்கமா
2020 ஆக்ட் 1978 கீதா
2021 லவ் ஜங்சன் 
2021 எச்/34 பல்லவி டாக்கிஸ் 

வெளி இணைப்புகள்

தொகு
  1. "Kannada Actor Yagna Shetty Marries Entrepreneur Sandeep Shetty". News18. 31 October 2019. பார்க்கப்பட்ட நாள் 19 November 2020.
  2. "Yagna Shetty – I am Happy in Kannada". supergoodmovies.com. 22 July 2012. Archived from the original on 21 ஜனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 21 January 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Yagna is not just serious". 19 March 2014. http://www.deccanchronicle.com/140319/entertainment-sandalwood/article/yagna-not-just-serious. 
  4. "Mangalore: ' I didn't Intend to Act in Movies' Yajna Shetty". daijiworld.com. 15 November 2006. Archived from the original on 21 ஜனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 21 January 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Film and finance for Yagna Shetty". indiaglitz.com. 29 September 2006. Archived from the original on 9 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 21 January 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Ondu Preethiya Kathe: A promising debut". rediff.com. 2 August 2007. பார்க்கப்பட்ட நாள் 21 January 2015.
  7. "Watch Sugreeva for Shivarajkumar". rediff.com. 26 February 2010. பார்க்கப்பட்ட நாள் 21 January 2015.
  8. "Kannada Review: 'Kalla Malla Sulla' is a must watch". ibnlive.in.com. 12 October 2011. Archived from the original on 21 January 2015. பார்க்கப்பட்ட நாள் 21 January 2015.
  9. "NBT fair reminded me of my school days: Yagna Shetty". daijiworld.com. 9 January 2014. Archived from the original on 21 ஜனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 21 January 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. "'Octopus' to be a mystery thriller". sify.com. 5 September 2014. Archived from the original on 6 September 2014. பார்க்கப்பட்ட நாள் 30 March 2015.
  11. "Yagna shetty is smt ramabai". indiaglitz.com. 17 March 2015. Archived from the original on 26 ஜூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 27 March 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  12. "Yagna Shetty to play mother in Vaarasudaara". The Times of India. 25 November 2016. http://timesofindia.indiatimes.com/tv/news/kannada/Yagna-Shetty-to-play-mother-in-Vaarasudaara/articleshow/55615065.cms. 
  13. "Yagna shetty to make her small screen debut". The New Indian Express. 25 November 2016. http://www.newindianexpress.com/entertainment/kannada/2016/nov/30/yagna-shetty-to-make-her-small-screen-debut-1544309.html. 
  14. "Photos: Yagna Shetty marries Sandeep Shetty in a grand ceremony". Times Of India. 30 October 2019. பார்க்கப்பட்ட நாள் 19 November 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யக்னா_செட்டி&oldid=4114352" இலிருந்து மீள்விக்கப்பட்டது